புதன், 21 டிசம்பர், 2011


பல்லாயிரம் நட்புகள் என்னை
நேசித்தாலும் உன் உறவுக்கு முன்னே
எல்லாமே தூரம் தான் எனக்கு
சுவாசிக்கும் முச்சுக்களாக எனக்குள்ளே ,நீ

தேடிய செல்வங்கள்
நாடிய நட்புக்கள்
எல்லாமே போலியாகிப் போனது.
உன் உறவு கிடைக்கும்வரை....

பாசத்துக்காய் ஏங்கிய
இதயத்தை அன்பால்
அரவனைத்து
மகிழ்ச்சி யூட்டினாய் நீ ,

உன் பேச்சுக்களும் எழுத்துக்களும்
உன்னை எனக்குள் உரிமையாக்கியது
உனக்கும் எனக்கும் ஒரு நெருக்கம்.
பாசம் புரியாமல் !தவிக்கிறேன்

உன் உறவுதோட்டத்துக்குள்
நான் உன்னையே நுகர்ந்து வந்தேன்
வெறும்மூச்சுக்கள் அல்ல !நீ என்
உயிரில் கலந்த சுவாசங்கள்

நா ன் எழுதும் எழுத்துக்களாக
நான் சுவாசிக்கும் மூச்சுக்களாக
நான் ,தேடும் உறவாக
நீ எப்போதும் என்னுடன்!
என் நினைவுகளுடன் ..!

கலங்கம் இல்லா உறவில்
துயரம் மறந்து போகிறேன்
உன் நினைவுகளை சுமந்தது கொண்டு
இன்னும் உனக்காக மட்டுமே..!

நீ என்னைக் காணும் வரை தவமிருக்கிறேன்
இரவு பகல் மறந்து
ஊன் உறவு இழந்து
உன் நினைவுகளில் உயிர் வைத்து
காத்திருக்கிறேன்,
உன்னை காணும் வரை
ஒரு ..
முத்தம் தரும் வரை ..!
 கல் மழைக் காட்டுக்குள்ளே
கொள்ளி பொறக்க போறபுள்ளே
நான் வந்து பார்க்கையிலே
கண்ணடிச்சுப் போணவளே ...!

கோணிக் கோணி மலையினிலே
நீ நடந்து போகையிலே
கால் தடுக்கி விழுந்ததினால்
நீ புரண்டு அழுதியாமே...!

கல் மழைக் காட்டுக்குள்ளே
சிக்குண்ட வேட்டியைப் போல்
உன் சோகம் கேட்டதிலே
என் மனசு இழியுதிங்கே ...!

உன் நினைவு மனசுக்குள்ளே
பாசியைப் போல் ஓட்டியதால்
தாம்பூலம் சப்பினாலும்
வெம்பிலையாகப் சுவைகிறது

உன்னைக்காண நாலை
கால் மணிக்கு பின் புறத்தே
விசிலோன்றின் சைகையுடன்
வருவேன் .,வா புள்ளே ...!
மழையேயில்லாத வரண்ட நிலத்தில்
ஏன் நகர்கிறது
இந்த பாதங்கள்...!

வியர்வையில் குளித்த உடம்புகள்
தாகத்தில் தவிக்கின்றன...

அழிவுகள் நிறைந்து போன
கிராமத்தில்
சுட்டு (தீயாய்) எரிக்கின்றது சூரியன்.

சுகந்தம் ஊட்டும்
தென்றலில் தடவல்களும்
கொடூர வெயிலில் வெப்பமாய் வீசுகின்றது!

படுக்கையின் விரிப்பில்
தொந்தரவூட்டுப் கொசுக்களின் எண்ணிக்கைகளை
அழித்து....அழித்து...அழுகிறது
ஒரு வெள்ளை பிரம்பு

நிம்மதியற்ற நிலத்தின் மேல்
வருடா வருடம்,
தவறாமல் ஏற்படுகின்ற-
இயற்கை அழிவுகள் ஒவ்வொன்றும்
வரிசையாய் வருகின்றது!

மனம் நொந்த வாழ்வில்
தீயாய் கருகும்
ஏக்கங்களின் தாக்கங்கள்!!!
 வாழ்க்கைப் புத்தகங்களுக்குள்ளே
அரிப்பு
கரையான்கலும்
எறும்புகலும்
கரப்பத்தான் பூச்சிகலும்!

பாட்டி சொல்லுவா
வாழ்க்கை என்பது
ஓர் புத்தகமென்று!

கவனமாக படியென்று!!
பக்குவமாய் பேனுமென்று!!
படிக்கத் தொடங்கையில்
பல்லாயிரம் வினாக்கள்
விடை கூற முடியாதொன்று?

ஒரே யோசனை
பகல் இரவாகவும்
இரவு...பகலாகவும்

பாட்டி சொன்னா
கவலைப்படாதே!
வாழ்க்கையை ,
கன நாள் வேண்டுமென்று....

நினைவுகள் மட்டும்
என்னை
நிழலாய் தொடர்கையில்
அன்பு....
பாசம்.........
அரவணைப்பு........
எல்லாம்
மனதுடனும்......
பெண்மையின் மௌனங்களுடனும்

மலரும் விடியலாய்
நகரும் இரவுகளாய்..........
என் வாழ்க்கைப் பயணம்!

அப்பத்தா சொன்னா
கலி காலம் இப்படித்தானாம்!
மலத்தைக் கண்டாள் மிதிப்பான்
நீரைக் கண்டாள் கழுவுவான் என்று!

கற்பும் மானமும் இழந்தனர்
வாழ்வுக் கிடங்கில்
சிசுக்களை
அறிமுகம் செய்தனர்
பெயர்களை சூட்டி!

ஏச்சுக்களும் பேச்சுக்களும்
கதைகளும்...கால்களும்...!
வீடு தொடக்கம்
வீதி வரை!

இப்போதெல்லாம் - நாங்கள்
வாழ்வதுமில்லை - வாழப்
போவதுமில்லை..!
இதய மூச்சுக்களின் சுவாசமென
இப்போதுதான் புரிகிறது
அவளது பாசத்தில் ,
ஊற்றெடுக்கும் அன்புத் துளிகள்!

உறவாடுவது மன நிறைவுதானென்று
இப்போது தான் புரிகிறது
அவளது தூ ய்மையான,
நட்பின்
அரவணைப்பில் அக மகிழ்ந்து ..!

எதிகாலம் ,
மௌனமாய் மாறிய போது
இது தான் நற்புறவென்று
அணைத்தெடுத்து அவளால்
மகிழ வைத்தது நிகழ் காலங்கள் ..!

எல்லா மகிழ்வும் வளமும்
பற்றும் பாசமும் நலமும்
உறவும் தொடர்பும்
இருவரின் ஓர் இதயங்களில்
மனசுகளின் புரிதலில்
ஊற்றேடுக்கின்றன ..!
உதயமாகின்றன ...
பிறப்பெடுக்கின்றன
துணையிழந்த தாலிக் கொடிகள்
வெந்து நொந்த படி
வாழ்க்கையற்று
தனிமையை சுவாசிக்கிறது!

தடவி மகிழும்
சதிகளை (விதிகளை)
மனதுக்குள் புதைந்து விட்டு
எதையோ இழந்த படி
சுவாசம் பெரும் மூச்சுவிட்டுப் போகிறது!

வரட்சிப் பூமியில் வெடித்துச் சிதறுகின்ற
புழுதிகளை
வியர்புடன் சுவாசித்தவாறு
வியாதியின் அவஸ்த்தையை உடம்பில் திணித்து
மரணப்படுக்கையில் கிடந்த போர்வை தட்டிச்
செல்கின்றது.

தன் தாகத்தின் "நா" வரட்சியை போக்கும்
ஊற்றுகளின்
கசிவுகளை மறைத்து அது
பாலைவனப் பூமியில்
கானலாய் மாறிப் போகிறது ..!
பசியினைத்
துரத்திச் செல்லும் வயிறுகள்
வறுமையினை சந்திக்கும்!

சிறு குடலை
பெருங் குடல் மிதித்து
நித்தம் போரடித்து
பாம்பும் கீரியுமாய் மாறும்!

விடியும் பகல்களும்
மறையும் இரவுகளும்
பசி
பட்டணிகளோடு
உதித்து மறையும்!
மறைந்து உதிக்கும்!!

தாயிடமிருந்து
வெட்டியெடுத்த தொப்புள் கொடி
அந்தரத்தில் ஊஞ்சலாடும்!
என் வாழ்க்கை கருவூலத்தை
தரிசிக்காது!

ஏழ்மைக்குள் அழகு சுரந்த
கற்புச் செடிகளில்
என் போர்வை மூட்கள்
மானம் (தேடும்,காக்கும்)

இருந்தும்
சமூர்த்தியின் பட்டியலில்
அகதிகளாக...........
அனாதைகளாக..........
யாசிப்பவர்களாக.........
வறுமையாளர்களாக நாம்!

இன்னுமொரு சுனாமியால்
சூறாவளியால்..................
நில நடுக்கத்தால்................
வெள்ளப்பெருக்கால்
இந்த இயற்கை அழிவுகளால்
மட்டுமே மீண்டும் வயிறு சிரிக்கும்.

மனம் குளிரும்!
பணம் குவியும்!
பொருள் நிறையும்!
உறவு தொடரும்!
ஆதரவு கிட்டும்