புதன், 21 டிசம்பர், 2011

என் பிஞ்சுக் குழந்தையின் கால்கள்
சுரந்திருந்த நெஞ்சின் _
பால் சுரப்பின் மீது உதைத்ததா.?
இல்லை,
நாவு தவித்ததா.?

மடியின் போர்வைக்குள்
புகுந்து விளையாட வேண்டிய
சிசுவின் ஆரம்பம்

மண் தரையில்
தலை சாய்ந்து படுத்திருக்கின்றேன்...

பல்லாயிரம் சோதனைகளைச் சுமந்த படி
வாழ்க்கையில் நிஜங்களை தேடுகிறேன்

"பெண்"என்று பொறுமையோடு வாழ்ந்து வந்த காலங்கள்
எனக்கினி நிம்மதி தராதென்று உறுதியாயிற்று
என் தாய்மைக்குப் போட்டியாய் _
இன்னும்ஒருத்திக்கு இடம் கொடுத்தபடி
நான் நேசித்து நேசித்து உயிராய் மதித்த
என்னவரின் உறவு தூரமாயிற்று!
கிளை விட்டு கிளை தாவும் மந்தியாயிற்று!

என் துயரம்
இதயத்திலிருந்து தான் சுரக்கிறது
என் குழந்தையின் கதறல்
பிறப்பிலிருந்தல்லவா எழுகிறது...?

என் கண்களிலிருந்து
கண்ணீர் வடியும் போதெல்லாம்
அவன் இதயத்திலிருந்து பாசம் வழியும்,
என் உறவுகள் _
உரிமைகளை சுரக்கும் போதெல்லாம்
இன்னொருத்தியை சுமப்பதை
அவன் நாவிலிருந்து ரசம் கொட்டும்!

நான் கதறித் துடிக்கும் குழந்தையினை
அரவணைத்து தடவிக் கொண்டிருக்க
அவன் என் வாழ்வினை தலாக் செய்ய
என் குற்றங்களை தேடிக் கொண்டிருக்கிறான்

அவனை நோக்கி
என் நா பேச துடிக்கும் போதெல்லாம்
பெண்மையின் பொறுமை என்னை மௌனமாக்கும்..!

என் குழந்தையின் பாதங்கள் நகர்ந்து துடிப்பதால்
தாயின் பற்றுக்குள்ளானவளாய் நான்..!

என்னை கவனிப்பதற்கு :
தயாரான படி!
இருட்டு அறைக்குள்
வெளிச்சத்தை தேடிய படி
என் வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றங்கள்!

ஒரு பெண்ணின் வாழ்வில்
எப்போது மகிழ்ச்சி பொழியுமோ...?
அப்போது -
கணவரின் மனதில்
சந்தேகம் தொலையனும்
சந்தோஷம் மலரனும்..!
கன்னி யென் இதயத்தைக் காவு கொண்ட
காளையரே நீ ரெந்தன் கனவில் வந்தே!
என்னாளும் வாட்டுவது போது மையா!
இக் கணமே! என்னருகே வாருமையா!

வஞ்சி யென் இதயமலர் தன்னில் வீசும்!
வாசந்தான் உம்மீது கொண்ட காதல்
துஞ்சியுயிர் போகுமட்டும் தொலைந்திடாது
தூயவரே உமதெண்ணம் கலைந்திடாது!

பூப் போன்ற எழில் வதனம் காட்டி நெஞ்சில்
பொலிவான காதல் மலர் பூக்க வைத்தீர்!
காப்பாவீர் எந்தனுக்கு வாழ்வில் என்றும்!
காதலுடன் துணையாக நிலைப்பீர் நன்றாய்!

ராஜாவே! உனக்காக ஏங்கி இன்னும்!
ராத்திரிகள் நழுவுவது ஆகாதையா!
ரோஜாவாய் எனை நீரும் சூடிக் கொள்ள !
உடனோடி என் பக்கம் வருவீரையா!
இதயக் கடலில் எழுந்துவரும் கல்வி
உதயத்தை காட்டும் விடிவு ..!
உறவு என்பது உயிருக்கு மேலால்
முச்சுக்களாய் சுவாசிக்கும் நினைவு ..!
மனிதரைப் பார்த்து மரியாதை செய்தல்
தன்னைத் தானே மதிப்பவன்
பாசம் தொலைந்து விட்டது
எம் உறவு
புழுதி கெழம்பிய மணலாய்-ஈரமிழந்து
வரண்ட நிலமாகிய பின்...

பார்க்கும் இடமெல்லாம் கவி வரிகள் போல்
நினைவுத் துளிகள்...
வாசித்தது நா மட்டுமல்ல!

எந்த நட்புக்கும் அடிமைப்படாத நீ
சந்தர்ப்பவாதியோடு இணைந்த காலங்கள்
அதுவும்
வேஷங்களோடு வேஷங்களாயிற்று!
(தீயோடு-தீயாயிற்று)

இன்று
மனசு துடிக்க துடிக்க உணர்விழந்து...
உறவிழந்து
உன்னை பிரித்து வைத்து மகிழ்ந்தவர்கள்,
மெளனித்துள்ளனர்,பொறாமைகளோடு!

உன் எழுத்தில்
உன் பேச்சில்
உன் அன்பின் ஆழம் கண்டு!

நாம்-
ஒவ்வொரு நிமிடமாய்
சுவாசித்து...சுவாசித்து-
மூச்சிடும் வேளை,

அதில் உன் உருவம் இல்லை!
இதயச் சுவடுகளின் ஞாபங்கள் நிறைந்து
மறக்க முடியாத உன்னை நினைவுபடுத்தி
உரிமையாக்கி விடுகின்றன...

நீ
கலக்கமில்லாத வெள்ளையுள்ளமாம்
இன்னுமின்னும் நேசிக்க விரும்பும் இதயத்துக்கு
பார்வை புருவமாம்!
பிரிக்க முடியாதாம்!!

பிரிவை துயரங்களாக்கி வாடிய மனங்களோடு
நிம்மதியிழந்து இருந்தோம்.

"உறவுக்கு இனி தொடர்புயிருக்காதென"
ஆறுதல்படுத்திச் சென்றனர்,
உன் குழந்தைகள்..

நட்புகள் என்று தான் மாறும்....?
தூயவுள்ளங்களைத் தானே அது
தேடியலைகிறது....!
மச்சான் உங்கள் பார்வையில் கனிந்த
அன்பு தெரிகிறது ...காதல் ,
பித்தாய் எந்தன் பிஞ்சு மனது
பெரிதாய் விரிகிறது !

கண்கள் என்னும் கலையாலேந்தன்
கனியுடல் புன்படுதே ! காதல்
கொண்டேன் என்னைக் கனிவாய் வாழ்வில்
காத்திடக் கை கொடுவீர் !

வேலி இடுக்கால் விழிகளைப் பாச்சும்
வேதனை இனி வேண்டாம் ..கழுத்தில்
தாலி கட்டி தனிக் குடி நடத்தத்
தயாராய் வர வேண்டும் ..!

மாதர் தம்மை ஏய்ப்போர் இந்த
மண்ணில் பலருண்டு ..தூய
காதல் பூவைக் கசக்கும் தீ யோர்
கருகும் நிலை யுண்டு !

பெண்மை என்னும் பேரின்பத்தை
புரிந்தோர் உயர்வடைவார் ..வாழ்வில்
உண்மை இன்பம் கண்டே உய்ய
உடனே வர வேண்டும் மச்சான்
உடனே வர வேண்டும்..!