சனி, 14 ஜனவரி, 2012

என் உள்ளம் குளிர உலா வந்த
என்ன்னுயிர்த் தோழியே !
இதயத்துனர்வில் நல் மனதில்
தூய உறவில் மகிழ்ந்து வாழ்க ...!
வளர்ப்போம் பாசயுறவை துன்பம் துயரம் களைத்தெறிவோம்,
வீசுவோம் நறுமணமாய் சுவாசக்காற்று சாதிவெறி தொலைய
காப்போம் தமிழுணர்வு கொண்டு கலை வளர்ப்பதற்கே
வாழ்வோம் ஒற்றுமையாய் நட்புக்கோர் இடம் கொடு
கவிக் கூயிலே .. கவிக் கூயிலே ,
எதை வைத்து எழுதினாய் ,
உள்ளத்தை வெளிப்படுத்தி எழுதினாயோ ..?
நல்லவராய் மனிதர் வாழ எழுது
நாட்டின் கொடுமை தீர எழுது!
பிடிவாத உள்ளங்கள் மாற எழுது!
எழுது...எழுது...எழுது.
உயிர் உள்ளவரை எழுது
மானிடம் மதித்திட எழுது..!
இதயங்கள் திருந்திட எழுது..!!
ஒரு மனிதன் , ஒரு இரத்தம், ஒரு உயிர் - இந்த உலகம்
ஒரு பூமி , ஒரு வானம் ,ஒருமையின் ஒறுமை தான்
இறைவனின் படைப்பு ......... .மனிதன் ...!,

உதிரங்களின் உதிர்வுகள் ....!


கொதித்தலரும் மனதில்
ஆறுதலான...;
குளிர்ந்த தடவல்கள்....!

நீ...,
மூட்டும் தீயில்
நான் -
பாதம் பாதிப்பாதா.....?
அல்லது -
பாதத்தைக் காப்பதா...?

பாலைவனப் பூமியில்
வரட்சியால் துடிக்கும்
நாவுகளின் -
தாகம்
எனதானது....!

புரிகிறதா தோழி
மனதின் துயரம்.....?
ஈழத்தின் அவஸ்த்தை -
போராட்டமாய்
உயிரின் ஊசலாட்டம்...!

இதோ -
எனது விருப்பம்
கடற் கரையின்
ஈர மணலை
கூட்டி....கூட்டி....
மண் வீடு கட்டி உடைக்கும்
சின்னக் குழந்தைகளின்
விளையாட்டுத் தானே
என் இதயத்தின் விருப்பு......!

யார் சொல்வார்....
பாச வெளிச்சம்
இருளாய் மாரிப்போனதேன்று...?

சுனாமியின் வரவு
தந்த -
உதவிகள் தானே;
உனதான உயர்வுகள்...!

எண்ணிப் பார்த்து விடலாம்
துட்டுக்களின் -
தொகைஎன்றால் -
இது....,
உதிரங்களின் உதிர்வுகளாயிற்றே....!

என்ன சொல்வதாய் ....
உத்தேசம்....?
யோசித்துக் கொண்டே இரு...!
கிடைக்கும் உனக்கு,
மன ஆறுதல்
அது தானடி
நொந்து சருகாகும்
இதய இழைகளின்
எதிர் பார்ப்பு.....?

தோழி.....!
இப்போ....
புரியுதா....உனக்கு....!

உன் நினைவுகள்!!!!.

விரக்தியாகிப் போன
மன வேதனைகளுடன்
காத்துக் கிடக்கிறேன்
காலமெல்லாம்!

உன நினைவுகள் நிழலாடும்
ஒவ்வொரு நிழல்களும்
தடவிச் செல்கிறது - ஆனால்
உன்னை நேசித்த நான் மட்டும் தான் இன்னும்
உனக்காக தவம் கிடக்கிறேன்!
.
இதயங்களின் உணர்வுகளோடு
சுவாசிக்கும் மூச்சுக்களாக
நகர்ந்து.....நகர்ந்து...செல்கிறது
உனது ஞாபகங்கள்
.
செழித்து மலர்வதற்கும்
மலர்ந்து வாடுவதற்கும்
இழையுதிர் மரமாகிப் போனதா
இந்த பரிசுத்த இதயம்!

தாகத்தால் நா வரண்டாலும்
உடலின் வியர்வைத் துளிகளால்
ஈர மாக்கும் இதயம்
மறக்க நினைத்தாலும்
மறவாது வாழும் இதயம்.

கல்லாகிப் போனாலும் - காதலை
குளிர வைக்கும் இதயம்
தினம் தினம்
கண் சிமிட்டல்களாய்
உன் நினைவுகள்!!!!.

குளிர்ந்த மலைகள் சிவப்பேறும்....!

முத்து,கருப்பன்,மூக்காயி - எங்கள்
முனியன்,வேலு,முருகாண்டி...!
கொத்திப் பிளந்தனர் மலையினையே
கூடை சுமந்தனர் முதுகினிலே......!

எறும்பு போலச் சோம்பாது - நிதம்
எந்திரம் போல உழைத்தனாராம்
கரும்பு,கதலி,கனி மரங்கள் - நல்ல
காய்கறி யாவும் விதைத்தனராம்

ஆணும் பெண்ணும் சமமாக - அங்கு
ஐக்கியமாக உழைத்தனாராம்
பாணும்,பருப்பும் பசிக்குண்ண - அவர்
பறந்து உழைத்து மெலிந்தனாராம்

கொட்டும் மழையும் குளிரும் பனியும் - நன்கு
கொளுத்தும் கொடிய வெய்யிலினிலும் ;
அட்டைகளிரத்தம் குடிக்கையிலும் - அவர்
அனுதின மோயா துழைத்தனராம்

ஓட்டை "லயத்தில்" உறங்கிடினும் - நிதம்
ஓயா துழைப்பில் இறங்கினாராம்
காட்டை அழித்துக் கழனிகளாய் - அவர்
கடிய உழைப்பால் மாற்றினராம்...!

உதிரம் தன்னைத் தேயிலைக்கே -
நல்ல உரமாய் இட்டு வளர்த்தனராம் !
மதுரமான தேனீரும் - அந்த
மாண்பினைக் கூறிச் சிவந்ததுவாம்...!

மாடாய் உழைத்து ஓடாகி - அந்த
மன்னர்க் கெல்லாம் தோய்ந்தனராம்
கேடாய் உழைப்பைத் திருடியவர் - நன்கு
கீர்த்தி பெற்று உயர்ந்தனராம்

இந்த -
கொடுமை நெருப்பைத் தாங்காது - அந்த
குளிர்ந்த மலைகள் சிவப்பேறி...!
திடமாய் வெடித்துத் தான் சிதறும் - ஈனத்
திருடர் வாழ்வை குடித்து வைக்கும்...!