செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

என் கண்ணுக்கு குளிர்ச்சி தரும்
உன் நிழல்...,
உன் மனதிற்கு மகிழ்ச்சி தரும்
என் அன்பு(பூ)
சகீ...,
என்
நெஞ்சில் உதைக்க்கும்
உன்..,
நினைவுகளின் தாக்கம்......!
நான் தினமும்
உன்னை நினைப்பதால்தான்
உனக்குள்
நான் நிழலாடுகின்றேன்.....
பாசத் தோழியின்
உறவுவாசம்
நாசியை...,
மெல்லத்துளைக்கும்..!

உற்ற நன்பியின்
நாவில் ஊறும் எச்சில்
வாடிய( மன) மலர்
செழிக்கும்.....!
என்
இதயம்
தேடி அலையும்
உறவு
நீ...!
சகீ
இதயம் உண்டு,
உன்னைச் சுமக்க...!

உறவு உண்டு,
துயரம் மாற்ற...!

வாய் உண்டு,
கொடுமை மறைக்க....!

அன்புக்கு இடம் உண்டு,

மகிழ்ச்சி யூட்ட...!
சகீ
என்
அன்பை
இப்போதாவது...,
உன்
இதயப் பூமியில்
நாட்டி வை
அது,
என்றாவது உனக்கு
உதவும்...!