வியாழன், 19 ஏப்ரல், 2012

பிறந்த நாள் தொடக்கம்!
வாழ் நாள் முழுவதுமாய்
மனதில் போராட்டம் .....

காலங்கள் நகர நகர
வழக்கம் போல்
வாழ்க்கைப் பயணம்

மண்ணில் தொடங்கி
உயிர் -
மண்ணறை போகும் வரை ...!

திடீரென வாழ்க்கைச் சுமைகள்
சகிக்க முடியாத நிகழ்வுகள்
உள்ளத்தைச் சோகமாக்கிய
துயர பதிவுகள்

சுவாசத்தில்
மூச்சு மூச்சுக்களாய் பெருமூச்சுக்கள்
கஷ்டங்கள்
வாழ்க்கைச் சுமைகள்
சற்று அதிகமாய்
பெருகிப் பெருகி .......
தினம் தினமாய் பாரமாய்

இதயம் வழித்து சோகத்தை
உடலெங்கும் தெளித்தது
நாட்டின்
தொல்லை நிகழ்வுகள்
..

ஆண்கள் பெண்கள்
சிறியவர்கள்; பெரியவர்கள்;
ஏழை பணக்கார்கள்
இன்னும் இன்னுமாய்
எத்தனை எத்தனை ...,!உயிர்கள்
நாட்டின் தொல்லைகளில்

யாரிடமும் எதிர்ப்பில்லை!
எவரிடமும் முகச் சுளிப்பில்லை!

பசிக் கொடுமைகளோடு
முட்டி மோதிக் கொண்டு
ஏழை உள்ளங்களின்
மனங்களை
எல்லோரும் சோதனை செய்கின்றனர்

வரண்ட மனசு
கொதித்த இதயம்
மனிதர்களின் உள்ளத்து உணர்வு
நோகாமல் வாழ
அருளினை தந்து போ இறைவா

நன்றியோடு தொழுதவர்
வரிசையில்
நானும் ஓர் தொழுகையா ளராய்......


இறைவா
நோகாமல் வாழ
அருளினை தந்து போ

சகீ ;
நான் -
உன்னை அன்று பார்த்துப் பேசி இருந்தால்
பார்வையோடு பேசி விட்டு வந்திருப்பேன்
ஆனால் -
நீ -இன்று ;
என்னுயிரோடு கலந்து உறவாடி விட்டாய்
உன்னை
எப்படி நான் பிரிய முடியும் ...?
உன்னால் -என்னை
பிரிக்க முடியும் ...?

அன்பே ;
மனிதர்கள் பேசி பேசி பாவம் தேடுகின்றார்கள்
நாம் -
பேசாமலே பாசத்தை தேடுகின்றோம் ,,,!
நான்
சுமந்த கருவை
நானே ...,
கொலை செய்வதைப் போலவே
உன் பிரிவின்
துயரம் ...!
மனசு இங்கு
துடியாய் துடிக்கிறது
வேதனையோடு
அழுவதை பார்க்க
என் கண்களே
எனக்கு கிணறு ...!

அந்த பாசம்
சுரந்த பசு
அன்போடு பால் தரும்.

தாயின் உதிரத்தில்
தினமும் சங்கமிக்கும்
சுவையில்

அந்த‌ பேசாத உருவம் கூட‌
எனக்கு -
பெற்றவளின் குருதித் துளிகளின் ....,
பால் வாடையாய் ....-
வாசம் வீசிக் காட்டும் ..!

தாகம் போக்கும்
நாவுகள் -
உர‌சி உர‌சி
ஈரமாக்கும் போது
அந்த‌ துளி துளிச் சொட்டுகளின்
சந்தோசத்தோடு -
மனசு துங்கி விடுமோ
என்ற -
மன ஆறுதல் வருவதுண்டு ...!

என் நட்புள்ளத்துக்கு
இதயத்தின் அருமை புரியாதிருக்கும்

உண்மையான பாசமும்
புரிந்து உணர்வும்
வ்ந்தால்
உள்ளத்தின் ஏக்க‌ம் புரியும்

அப்போ
பாசத் துளிகள்
ஊற்றுக்கள் போல் கசியும்
உயிர்க் குழிக‌ளிலிருந்து ஓடும் குருதி போன்று
எல்லை மறந்து
அது வழியும்

பாசமான
நட்பின் தடவல்களாக
அன்புள்ளவர்களின்
ம‌ன‌த்தில் ம‌ட்டுமே
ப‌திவாகும்.

ஆமாம்
பால் தரும் பசுவுக்கும்
பாசம் காட்டும்
அன்புக்கும்
உள்ள வித்தியாசம் .
புரியும் ...!

பல நூறு
நினைவுச் சுவடுகள்
மின்னலாய்
வந்து மறையும்
விரிந்த மனம் இது


எந்த நட்புள்ளங்களையும்
அன்பாக -நேசிக்கின்ற
மனதினை
என்னுள் இருந்து
உணர்ந்தேன் ..!

மனத் தோட்டத்தில்
இதழ் விரிந்த
பூக்களின் வாசத்தை
நுகரந்து போனவர்களின்
சுவாசத்தில் மூச்சுக்களாய் போனது
ஞாபக்கத்தில் வந்தது ...!

நினைவுகள்அவற்றை மறக்கவில்லை
புதிய உறவுக்கு
மனம் இடம் கொடுக்கிறது
உள்ளம் அன்பைக் காதலிக்கிறது
அன்பு உள்ளத்தைக் காதலிக்கிறது

பிரிக்கவே முடியாத இந்த உறவை
எட்டி நின்று வேடிக்கை பார்
அன்பு மனம் திறந்து சொல்லும்...!

என்னிதயத்தில்
நெருப்பு தடவிக் கொண்டது
நினைவுகளோ -
புகையாய் ...
மனமோ..,
சாம்பலாய் ..

மரமே நீயாவது
நான் அமர்ந்து இருக்க
உன்
நிழலையாவது தா ...!