சனி, 2 ஜூன், 2012

ஈரமுள்ள இடமெல்லாம்
அடி வேரை நகர்த்திச் செல்லும்
ஆணி வே ர்போல்…

பாசம் நிறைந்த நட்பினால்
மனசு மகிழ்கிறது!

உன்னை நானும்….
என்னை நீயுமாய்
பகிரும் பொழுதுகளில்,

பசியில்லை…..
தாகமில்லை……
மனச் சோலையில்
மகிழ்ச்சி

விண்ணில்லிருந்து பொழியும்
மழைத் துளிகளாய்
விழுகின்றது ....!
என்னைப் பார்த்து அழுகிறாள் என் தோழி

என் உயிர் போல இருக்கிறாள்

மருந்தூட்டி தலை தடவ

பாசமானவள் முயல்கிறாள்


அன்போ அவள் கருணை என்று சொல்கின்றாள்

மனதில் வளர்க்கின்ற பாசத்தினை

இதயம் நிறைந்து நேசிக்கின்றாள் ...!
ஒவ்வொரு மனிதருக்கும்
ஏதேனும் ஒருவகையில்
இருக்கிறது அன்பு ..!

அன்புயின்றி யாரையும்
காண்பது கடினம்
என்கிற அளவில்
அன்பின் நினைவு களோடு மனிதர்கள்.
அவரவர் தொடர்பு ..!

அவரவர்க்கு
தேவையாகும் போது
ஏற்புடையாதாகும் அன்பு

அடுத்தவர் மனதில்
அன்பை வளர்ப்பது பற்றி ..?

அன்பான உள்ளத்துக்கு
நீண்ட வரிசையில் நின்று
உறவைத் தேடி
நல்லவர்கள் மனதில் இடம் பெற்று
பாசமுட நேசிப்பவர்களை
இணைத்துக் கொள்ளும்உறவு நட்பு ...!

இதயம் இணைக்கும்
மனசு மகிழும்
நட்புத்தான் உறவு

மனம் திறந்தது பேசும் மகத்தான உறவு

வண்ணத்துப்பூச்சியும்
வானவில்லும்
சிட்டுக்குருவியும்
சிறகடிப்புமாய் நீளும்
நட்பு எந்நாளும்...!

ஒளிவு இன்றி
மறைவு இன்றி ...!
மனித வாழ்க்கை கொஞ்சக் காலம் இதை மனிதர்கள் உணர்வதில்லை...
தனக்கொரு வியாதியோ, நோயோ, வந்தபின் தான் எல்லாவற்றையும் சிந்திக்கிறான்.

தன்னை சிந்திக்க வைக்கும் முன்,
வியாதி அவனை முந்திக் கொள்கிறது.
வாழும் வரை நன்மை செய்ய முனைவோம்,
பணத்தால் இல்லாவிட்டாலும்,
உடல் உழைப்பால் செய்வோமே.

பணம் மட்டுமே வாழ்கை இல்லை,

அடுத்தவரிடம் அன்பு செலுத்தி
வாழ்வதும் நன்மை செய்வதுமே வாழ்க்கை ...!
அன்பைக் கொண்டு பிறரை அவமதித்தல்
நிறைவேறா வாழ்க்கையின் எதிர்பார்ப்பு ...!
பணத்தை விட சிறந்தது அன்பு
தூய்மையாய் நின்று பழகு ...!
பாசத்தை காட்டும் அன்பான இதயங்கள்
மறவாது சொல்லுமாம் நன்றி ..!