வியாழன், 8 நவம்பர், 2012

ஸம்ஸம் கிணற்றில் ஊற்றெடுக்கும் நீர்த் துளிகள் 

வந்தெமது நாவுக்குள் தாகம் தீர்க்கும் !

தேன் சுவை நீரினைக் ருசிக்க வாரீர் 

உலகெங்கும் எங்களைப் போல் பாக்கிய சாலியுண்டோ ?


சபா மர்வா மலையினிலே !தொங்கொட்டமொடி

ஒளி நிலவு மனதினில் மகிழ்ச்சியை தடவ

வெள்ளை நிற ஆடை அங்கே மரணத்தை நோக்க

உள்ளமதை உருக்கி விடும் காட்ச்சி தானே ?


மக்கத்து பள்ளியில் குர் ஆணை ஓதி

பிராத்திக்கின்ற தூஆ ஏற்கா மலில்லை

நாலருகும் நல்லவழி வாசல் உண்டு

நாளெல்லாம் அருள் பெறத் தடையே யில்லை !



நல்அமலை நாமென்றும் நேசிப்போர்கள்

நன்மையான அமல்களுக்கு துணையாய் இறைவன்

நிறைவான அருள் தன்னை எந்த நாளும்

எம்முள்ளத்துக்குள் தந்தாலும் ஏற்றுக் கொள்வோம் நாங்கள்


ஹிறாக் குகையிலிருந்து வஹியைத் தானே

வாழ் நாளில் அருளெலாம் நிறையக் கண்டீர்

உள்ளத்தை விட எங்கள் மக்கத்து மாளிகை

தருகின்ற பாக்கியத்தை பெற வாரீர்


எங்களைப் போல் உயர்ந்தோர்கள் எவருமில்லை

அல்லாஹ்விடம் கூட எமக்கு பாவமில்லை

இங்கெமது இறை வீட்டில் அருளைக் கேட்டு

இருக்கிறார் !அல்லாஹ்வினது ! அருளுக்கீடுயில்லை !
பாராட்டுக்கள் வந்து 
குவியும் மனதின் 
ஆழத்தில் ...
நிறையும் சந்தோசத்துக்கு 
காத்து நிற்கும் 
உள்ளத்து உணர்வு

மன மாளிகையில்
எங்கே உன் தோழி.?
அன்பைக் கொடுத்து
ஆசிர் வாதம் பெற்றாயா ...?

பாச உறவோடு
நீயும்..சந்தோசமாய்
மனம் குளிந்து


உன்னை நினைத்திருக்கும்
இனிமையான நேரம்
என் கண்கள் தேட ..!

நினைவுகளின் முதுகில்
மறைந்து உனக்கென்ன
இங்கு பார்வை..?

உன் நினைவுத் துளிகள்
எனைக் கழுவியது .
வான விசித்திரம் நீ
எனிதய நிலவே ..!

உன் வடிவழகு
மேகத்தோடு
வித விதமாய்..
மின்னல் கீற்றாய்
தூது விட்டு..
என்னை ஏன் ..?
துரத்துகிறாய்..

சொல்ல மாட்டேன்
உன் உறவுகளுக்கு

இரவெல்லாம்
மனதோடு உன்
ஏக்கம்
அறிந்தால் .
வேதனைப் படுவாய் ..!

இதயத்தின் ..!நினைவு
உன்மீது தேடல்


வந்து விடு என்ற
புலம்பலாய் . .!

இதயத்தின்
ஜீவ ராணி
என்னுயிரே ...

உனக்குமா மனதில்
போராட்ட அலைகள் ....?
சகீ 
இதயப் பூவுக்கு மணமாக 
சுவாசப் பூமிக்கு நீராக
அன்புக்கு வேராக 
எனக்கு உயிராக வா
இதயம் எதையும் தாங்கும் பூமியாய் 
இருப்பதை 
மனிதர்கள்
உணர்வுகளால் அறியும் 
அதிசய இடம்.

இது
பொறுமையும்
பொக்கிஷம்

.போட்டி பொறாமை வஞ்சகம்
சூது வாது புறம்
எது வந்தாலும்
மங்கிப் போவதுமில்லை

எது நடந்தாலும்
சகித்துக் கொள்ளும்

வெறுப்பதுமில்லை,
.

இது ஓர் சூரியன்
அன்பான வெளிச்சமிருந்தால் போதும்
பசி பட்டாணி
துன்பம் துயரம்
கஷ்டம் நஷ்டம்
எது வேண்டுமானாலும்
தாங்கிக் கொள்ளும்

ஏன்
மண்ணிலிருந்து விண்ணைக் கூட
தொட்டு வரலாம்


இங்கு உங்களுக்கு
வரம் கொடுக்க
இடம்
தவம் கிடக்கின்றன.

இங்கு வரும்
எவரும்
அன்பை இழப்பதில்லை
வளர்க்கின்றார்கள்

இது இதயத்தின்
சேமிப்பு உண்டியல்
பாசம் உள்ளவர்கள் மட்டுமே
உறவை சேகரித்துக் கொள்ளுங்கள்

நிமதியை தடவிக் கொள்ள
உங்களுக்கு இது
தென்றல் காற்று .

இங்கு மட்டும்தான்
இதயம்
அன்புள்ளங்களைதேடி எடுக்கின்றது .
சகீ
கல்லுக்குள் ஈரம் கட்டாயம் இருக்கும்
அதே போல்
என் இதயத்துக்குள்
உன் நினைவு நிறைந்து இருக்கும்
 
நான் என்னை விட
உன்னை நினைப்பேன் ..

என் இதயத்தை விட உன் 
இதயத்தை விரும்புவேன்.
.
மூச்சை விட உன்னை சுவாசிப்பேன் . ..
காரணம் அதற்குள்ளே தானே
நிஜமானஉன் சுவாசம் ஒளிந்திருக்கிறது..

அந்த நிஜம் நீ தான் என்பது
கவிதை வரிகளில் எழுதினாலும்
வாசித்துப்புரிய முடியாத உண்மை..

புதன், 7 நவம்பர், 2012

உழைத்து உழைத்து நாமுந்தான் ஓட்டாய் தேய !
உளையாதார் ஊதித்தான் பெருக்கக் கண்டோம் !
இழைத் தே நாம் இடுப் பொடிய ! ஈ ரம் மில்லா ..
இதயத்தார் இருந்துறிஞ்சி "மேலே "சென்றார் !

முதுகினிலே ! கூ டையினை தாங்கி நாமும் !
முது கொடியக் கொழுந்தெடுத்துக் கொணர்ந்து சேர்ந்தோம்
புது வாழ்வு ! நாம் கண்டதில்லை !
புல்லர்கள் வாழ்வுக்கே ! உரமாகிப் போனோம் !

ஓட்டை'லயம் 'தானெமது உலகும் வாழ்வும் '
உழைப்புத் தான் உயிரெமக்கு !ஓய்வோ தூக்கம்
காட்டையெல்லாம் கழனிகளாய்ச் செய்தோம் எங்கள்
கனவுகளோ ! கண்ணீரில் கரையக் கண்டோம் !

மலையகத்து இலைகளுக்குப் பசுமை சேர்க்க !
மணி மணியாய் வியர்வையினை வடித்து தந்தோம்
நிலை மாறி எம் வாழ்வில் பசுமை பூத்து
நின்மதியாய் வாழும் நாள் எனறு பூ க்கும் !