ஞாயிறு, 16 டிசம்பர், 2012


உள்ளன்பு இருந்தும்
வெளிக்காட்ட முடியாது
இதயத்தின் உணர்வுகள்

வயிற்றுப் பசியின் கொடுரம்

குடல் சுருங்கி அழுகிறது
வறுமையின் வெளிப்பாடு

பட்டம் பதவி கௌரவம்
அப்படியே தந்தை மாதிரி
தன் குருதி

கவிதை எழுது கவிதை எழுது
வாசித்துக் கொண்டேயிருக்கும்
வானொலி

பொறாமையை விட
பொறுமைதான் தான் முக்கியம்
பெண்ணுக்கு அழகு

சோதன வராமலிருக்க
பிராத்தித்துக் கொண்டிருக்கிறது
மனசு

இதயத்தின் வாரிசு
பிரசவம் இல்லாமல் பிறந்தது
நட்பு

சுவாசிக்க முடியாமல்
மூச்சு அடைபடுகின்றது
தோழியின் நினைவு ...
உயிரான அன்புடையவர்களின்
இதயங்களை நினைக்கையில்
தனிமை கூட சுகமே...
சகீ
என்னை நினைத்துப் பார்க்காத
மனசு
உன்னை மட்டும் நினைத்து துடிப்பது
ஏன் ..?

கன்னி யான் மலரே என்னைக்
காளையோர் தேனின் வண்டாய்
பின்னியே நாளும் சுற்றிப்
பிரியமாய்க் கூடு கின்றான்
மன்னவன் அழைப்பில் யா னும்

மகிழ்கிறேன் சொர்கம் கண்டே


காதலே கொண்டான் என் மேல்
காந்தமாய் கவர்ந்து கொண்டான்
மோதலோ மெக்குள் இல்லை
காதலே வருநாள் மட்டும்
சத்தம் இணைந்து நிற்போம்

தேவதை என்றான் என்னில்
தேன் வதை உண்டு நின்றான்
காவலன் என்றான் என்னைக்
கள்வனாய்க் கவருகின்றான்
பாவலன் அவனின் கையில்
பாவிதழ் ஆனேன் நானும்


வாழ்வெனும் பூங்காவிற்குள்
வந்தநல் தென்றற் கற்றாய்
சூழ்ந்துமே என்னை நாளும்
சுகத்தினில் ஆழ்த்துகின்றான்
ஆள் கடல் அன்பில் தோய்ந்து
அணு தினம் மகிழ்கின்றேன்

சேனைப் பயிரைத் திருட வரும் கிளியினத்தை
தேனளைய குரல் காட்டித் திரத்துகின்ற - மானைப்
பெண்ணெற்று சொல்லின் பெரும்பிழையே தேவதையின்
கண்ணிரண்டும் காதற் கயல்

சோலைக் கிளியைச் சூவென்று நானோட்டும்
சேலையுடுத்த கிளி செல்வந்தி -ஆளை
மயக்கும் மாறனவன் மலர்ப்பே விழி மலர்கள்
நயதொழுகும் அவை நின்று நறை

சோளக் கதிரோ சுவையான மாதுளையோ
வாளென்ன நிற்கும் வடிவமது -காளை
இதய்த்தைக் கண் மூடிக் கண்ட படி குத்துவது
ஏது வென்று புரிய வில்லை ஏய்


வெண்டைவிரல் வடிவம் வேல் வடிவம் உள்ளங் கை
கொண்டை சிறு பூசணிக்காய் கோலை யிதழ்தண்டும்
கரங்கள் காலிரண்டும் செங்கதலி கன்னியவள்
அருங் காதல் நெஞ்சத்து அலை

வெடித்த வெள்ளரியின் விதை போன்ற பற்சிரிப்பு
கடித்துண்ணத் தூண்டும் கன்னங்கள் -இடித்த
ஏலக்காய் போலே இவள் பேச்சு தமிழ் மணக்கும்
காலத்தால் அழியாத கலை..
தமிழ் மண்ணிலே தோன்றியே-நல்ல
பாவினை ஊட்டினான் மனங்களிலே
சுவையுடன் கவி பாடினான் -தமிழ்
உணர்வு யில்லாதோரைத் தூற்றினான் /தூண்டினான் /

ஆழமாய் கவிதைகளைப் படைத்தான் - கெட்ட
சாதி பேதங்களை மாற்றினான்
உழைத்து வாழப் பாடினான் -வீணே
சோம்பரியாய் கிடப்போரை விரட்டினான்

கெட்ட உள்ளங்களைச் சாடினான் -அதை
உயர்வாய் மதித்து போற்றினான்
பாவினிலே மெரு கேற்றினான் -தமிழ்
பற்றின் உயர் வினைக் கூட்டினான்

பெண்ணின் பெருமையை போற்றினான் -அவர்களை
மதித்து நின்று வாழ்த்தினான்
மண்ணின் மாணிக்கம் அவளென்று --என
பாடிப் புகழ்ந்து காட்டினான் மானிடர்க்கு

அடிமைத் தனத்தை சாடினான்
நாட்டின் நடப்புக்களையும் பாடினான்
சாவுக் கஞ்சாது எழுதினான் -மண்ணில்
மாறாப் புகழினை பெற்றிட்டான்

பாரதிக்கு பா வடிக்கவே -என்
சிந்தனை துளி உற்றெடுக்கும் வெள்ளமே
மண்ணில் பிறந்தவன் கவி மனங்களிலே -அந்த
மா கவி பாரதி விண்ணிலே
கலைமகளின் கவிதைக்குள் ஒரு கவி ...!

மாவனெல்லை மண்ணு பெற்றெடுத்து பெருமை கூறும்
தவப் புதல்வி சைபா மலீக்யெனும்
புகழ் பரப்பும் இவள் புதுமைகளால்

பூத்து மணக்குமாம் புவி ..!


இலக்கியக் கவிதைகளை வாயி லெந்தி
வாசிக்கின்ற படையல்கள் தமிழே யாகும்
துலக்கிடும் இலக்கியங்கள் தூரமே நடந்து
தூது விடும் கலையாம் கண்கள் ...!

கவிதைக்குள் நாகொட்டி வாசிக்கு மிவனின்
கலையழகு கலைமகளின் மடியில் வாழும்
புவி வெல்லும் பூரணப் பெட்டகத்தின்
புதுயாம் இவள் திறப்பு ..!

ஆயகலை பலதும் இவள் கைகளால்
ஆடி மகிழுமாம் தமிழை வணங்கி
தூயவை தொட்டு கட்டிடும் தாலி
தொடரும் பணியாம் வேலி!

கவிதை நாவி லேந்திவாசிக்கின்ற முத்துக்கள்
எழுந்து நடக்கணும் மனித/மனதிலும் / மண்ணிலும்
மா ளாது வாழும் மா பணி உச்சம்
மச்சத்தைப் பதிக்குமாம் மகிழ்ந்து ...!

பாவரசி காணுகின்ற /பாவாசிக்கின்ற / முகம் நீ
பக்கத்து துணையானாய் பாவுக் குள்ளே
நாமுரசு கொட்டும் நல்லினிய வாழ்த்து
நலம் பெறுமாம் நயந்து

பாவரசி கலைமகள் ஹிதாயா றிஸ்வி இலங்கை

(குறிப்பு இலங்கை மண்ணில் இருந்து முதல் தடவையாக என் குரல் ஒலித்தது என் சகோதரியை பாராட்டி வாழ்த்திய கவிதைஇது (first audio london lovdo)