வியாழன், 9 மே, 2013



முனிவர்களுடைய தவத்தின் வலிமையை-விட 
பெண்களின் கற்பின் வலிமை சிறந்தது

பெண்மைகளை சிதைந்திட்ட உண்மைகள்




கறைகளை பூசி 
மறை வேதம் மறந்த
எழுத்து நர்த்தனங்கள் !

பொல்லாத வாதங்களிலும்
பொய்மையின் தழுவலிலும்
புளித்துப் போய்
புழு அரித்துப் போன
பேச்சுக்கள் ...
..
பெண்களை சுரண்டியே
அவரவர்
தரங்களை நிரணயித்த
அசிங்கங்கள்

வலிசல்களைப்
புறக்கணித்தே எழும்
எம்
புதுமைத் தத்துவங்கள்

இன்று உமதுடா ....!
நாளை எமதே ..!என்ற
எங்களின் இலட்சியங்கள் !

அன்பில்லா மனதில் மகிழ்சி யில்லை -
பகர்ந்திட மனதில் ஒன்றுமில்லை !

பிறந்தவுடன் மகிழும் மனிதன் 
இறந்தவுடண் மறந்திடுவான்

இது தான் மனித வாழ்க்கை !

அன்பு உற்றெடுக்கும் கிணறு -பாசத்தில்
பற்றெனக் கூறு !















மனிதனுக்கு இல்லாத இந்தஅரவணைப்பு
மிருகங்களுக்கு உள்ளதே !





















தீயைப் பொசுக்கும் திறன் கொண்ட பெண்ணினமே
தாய் குலத்தின் வலிமை -ஆயினும்
கற்பினை தவமாகக் காத்திடும் பண்பாடு
பெண்ணினத்தின் பெருமை (கதை ) இது!