வியாழன், 9 மே, 2013



சொற்களால் 
கல் வீசி அடித்தாள் 

தொலைந்தபணம் போல 
மனதெல்லாம்
நிம்மதியின்றி சோகமானது 

வார்த்தைகளின் தாக்குதலால்
சிதறிப் போன குருதி போல
மனப்புண் வாங்கியது இதயம்







என் உள்ளத்து உணர்வுகளில் கசிந்து
ஊற்றாய் சுரக்கின்றது கவிதை !

எழுத்துக்களின் எண்ணிக்கைகளுடன்
போராடிக் கொண்டிருந்தேன்!

இப்போதான் மனசு ஆறுதலடைகின்றது
பேனா -
சுமைகளை சுமப்பதால் !

நிம்மதி தேடி நிம்மதி தேடி
அலுத்துப் போய் அழைக்கிறேன்!
உலகம் -
என்னைப் பார்த்து சிரிக்கின்றது
நான்
உலகத்தைப் பார்த்து சிரிக்கின்றேன்

கண்ணெதிரே பெண்களின்
பெண்மை தொலைகிறது
அவமானம் நடக்கின்றது



பொறுமையை இழக்காதே
பொறுமையலாருடனே-
அல்லாஹ் இருக்கின்றான்


பெண்ணின் பெருமையைதாங்கியே
உலகம் -
பெருமைபடுவதை காண்கின்றேன்


இன்னும் !இன்னும் !

பெண்மை பாதுக்காக்கப் படவேண்டுமென்கிகின்றது
புனித மறை

பெண்மை
எப்படியென்று புரிந்தாயிற்று !
நல்லது கெட்டதுஅறிந்தாயிற்று !!
அல்லல்களும் அவமானங்களும்தெரிந்தாயிற்று !!!

இனித் தான்
தைரியமாய் தலை நிமிர்ந்து வாழப் போகின்றேன்

வாழ்க்கையை
மனசு கற்றுக் கொண்டது
பெண்மை உணர்ந்து கொண்டது !
 


ஒழுங்கின்றித் தருபவரும் 
பிழைப்பிற்கு வழியற்றுப்,
பெரும் பாவம் புரிபவரும் 
சளைக்காமல் வாழுகின்ற 
சந்தோஷ நேர முண்டு !


நாளை வரும் என்று மனம்
நம்பிக்கை கொண்ட தெலாம்
பழாகிப் போன தந்தோ
படித்திட்ட மாந்த ரெலாம்
ஏழைகளை எந் நாளும்
எரிச்சலுடன் நோக்குகிறார் !


நாட்டிற்கு முது கெலும்பு
நா மென்று வார்த்தைகளால்
பாட்டிசைத்து வாழுகின்ற
பாவிகளே எங்களது
வீட்டிற்கும் பணம் தேவை
வியர்வைக்குப் பணம் கொடுங்கள்!



சுடு காட்டுத் தணல் வீசும் 
இந்த பெண்ணிணத்தின் அக்கினிக் கிடங்கை 
இன்னும் நாம் காவிக் கொண்டு 

பெண்ணினத்துக்கு 
பயவுணர்வுகள் உரசுவது 
இந்த சில வலிசல்கலால் தான்

கையினில் -
உயிரைப் பொத்தியும்
ஏதோவொரு அத்தரிப்பில்


சதை சப்பி உமிழ்ந்து
குதறுவதான கனாக்களோடு
புரளுகிறது இரவுகள்


மீந்திருப்பவைகள்
விழி நீர்க் கசிவுகளும்
மாயைகளுமாய் .....

ஒருமித்துப் போராடுவோம்
இனி
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையேல்
நிம்மதிக் காற்றினை
உள் வாங்கிட -
அண்ட வெளிசென்றாவது
முண்டங்கலாக்கிடபயிற்சி பெறுவோம்


கலையுலகப் பயணத்திலே -சகீ உன்றன்

அன்பினைப் பெற்றிருந்தேன்

பிறந்த மண்ணிலே உன்றன் கரம்

பிடித்து நடந்திடக் கற்றிருந்தேன்


தடுத்தடுமாறி நடந்தவுடன் -உனக்குநான்

தொல்லை தந்து வந்தேன்

குதலை மொழிபேசியவுடன் உன்னருள்

போதனையைக் கற்றுத் தந்து விட்டாய்



உயிர் மூச்சின் மேலாய் - என்னைத்

சுவாசித்துப் பார்த்தவள் நீ

உனக்கும் எனக்கு முள - உறவை

எப்படிச் சொல்லி அழைப்பது ?



எனக்கு தோழியானால் -என்ன

என்றும் நீ ஆசானல்லவோ?

காலத்தின் நகர்வினைப் -மறந்து

உயிரென நேசித்திட வேண்டுமம்மா?



மனதிலே பாசம் ஊட்டி -உள்ளத்து

உணர்விலே நேசம் காட்டி

இதயமென இடம் -தந்தே

உரிமையுடன் உறவாடச் செய்வாய்


கண்ணுக்கு எட்டாத தூரம் வரை -வாழ்க்கை

மாறிடும் நானறிவேன்

சுடராகி என்னுயிரே -தினமுமே

சூரியனாய் வந்துவிடு அதுபோதும் !