புதன், 26 ஜூன், 2013





சீதனத் தென்றலாய் 
சித்திரத் தேராய் 
பெண்மை நலங்கள் 
பூத்துக் குலுங்கினும் 
சீதனச் சந்தையில் 
வரதட்சனைத் தராசில் 
நிறுத்துப் பார்க்கும் 
வக்கிர மனங்கள் 
தெரு நாய் கழுத்தில் 
சீதனச் சத(ல)ங்கை 
ஒழிக்க
டீ வீ -காணி
வீடு வளவும்
மின் விசைப் பொருளும்
தாங்கி வந்தால்
தழுவிக் கொள்ளும் !


தமிழிடம் உருவம் உண்டாம் 

தமிழிடம் ஓசை உண்டாம் 

தமிழிடம் வளங்கள் உண்டாம் 

தமிழிடம் வரலாறு உண்டாம் 

தமிழிடம் வீரம் உண்டாம் 

தமிழிடம் காதல் உண்டாம்

தமிழிடம் பாடல் உண்டாம்

தமிழிடம் கவிதாயினிகளும் உண்டே !



தமிழினைத் தாயம் என்பார் 

தமிழினை அமுதாம் என்பார் 

தமிழினை விழியாம் என்பார் 

தமிழினை உயிராம் என்பார் 

தமிழினை பழசாம் என்பார் 

தமிழினைப் புதிதாம் என்பார்

தமிழினை இனிதாம் என்பார்

தமிழினை எளி தென்பாரே


ஞாயிறு, 12 மே, 2013



உன் வாசமே என் சுவாசமாக,
உன் நினைவே என் எண்ணமாக,
உன் வண்ணம் என் ஒளியாக,
உன் அன்பு வாழவைக்குது என்னை.


சூரியகாந்திப்பூவாக உன்னையே சுற்றும் என் நினைவுகள்,
நிஜத்தைக் காணாது நிலைகுலைந்து துடிப்பதை நீயறிவாயோ ?


திறமையும் , அயராத உழைப்பும் ,நல்ல சூழலும், உயர்வினைத் தரும்

உலகின் அனைத்து அன்னையர்களுக்கும் அன்பு வாழ்த்துக்கள்......!




பத்து மாதம் சுமந்தே என்னைப்

பரிவுடன் வளர்த்தவள் அன்னை!

இத் தரை தன்னில் இவளருந் தியாகம் 

எழுந்தே தொட்டிடும் விண்ணை !


கண்ணே ! என்று இமையைப் போலவே

காத்திருப்பாள் இவள் நிதமே !

பொண்ணே என்றும் பூவே என்றும்

பொழியும் அன்போர் விதமே !


ஈயோடெறும்பு எதுவும் அணுகா(து)

இனிதாய் வளர்த்த உள்ளம்

தோயும் அன்புச் சுடராய் என்னைத்

துலங்க வைத்தாய் உய்வோம் !


பள்ளிப் பாடம் சொல்லித் தந்தே

பண்பாய் அனுப்பி விடுவாள்

வெள்ளி பூத்தே விடியும் வானாய்

விளங்க அனைத்தும் இடுவாள் !


பட்டம் பெற்றே பதவிகள் பெற்றுப்

பாரினில் துலங்க வைத்தாள்

தொட்டுப் பேசித் துணையாய் நிற்கும்

தூய உள்ளம் அன்னை !


உதிரந் தன்னைப் பாலாய் உதிர்த்து

ஊட்டி வளர்த்தவள் அன்னை

இதயத் தரையில் வாழும் உள்ளம்

இவளை மறேவேன் மண்ணில் !