வீடுகள் தோறும் உள்ளங்கள் மகிழ்ந்து இனிதே போற்றிடும் நோன்பு - அதுசெல்வர்கள் வறியவர் தீப்பசி யுணர்ந்துதிருந்திட அருளிடும் மாண்பு
மண்ணறை முஸ்லிம் மாந்தர்கள் கூடி
வாழ்த்தி வரம் பெறும் திரு நாள்-அது
தண்மதி நபிகள் நாயகம் தந்த
தவத்தால் உயர்ந்தருள் பெருநாள்!
வருடங்கள் தோறும் உருவங்கள் வேறாய்
வந்திடும் பன்னிரு மாதம் -அதில்
அருளொளி வீசி திருமறை ஓதி
அலர்வது ரமழான் மாதம்!
வாழ்வினை யுணர்ந்து தாழ்வினை மறந்து
வாழ்ந்திட வழிகளை காட்டும் -அது
கூழெளினும் ஏழை குடித்திட ஈயும்
குணத்தினை வளர் த்திடும் வேதம்!
தூய நபி சொல்! " நேய இஸ்லாம்''
துதித்திடும் ரமழான் மாதம்-அது
தீயவர் நெஞ்சம் திருந்திடப் பண்ணும்
திருமறையருள் நிதம் பொங்கும்
'
புனித -இஸ்லாத்தின் கட்டாயக் கடமைக்காய் ---நான் -நோற்று வரும் அமல்களின் நன்மைகளை இறை பக்தியினால்
அதிகரிக்கின்றேன் !
என் -
இனிய மார்கத்தின்
கடமைகளின் கரங்களுக்கு
ஐந்து விரல்கள் !
எங்கள் -
ஹிஜ்ரி வரலாற்றுக்கு
1434 ஆண்டுகள் !
இந்த -யுகங்களுக்குள்
நம் -
உயிர் மூச்சுக்களில்
எத்தனை சுவாசங்கள் !
இமைகளின் துடிப்புக்கள் !!
உதடுகளின் சிரிப்புக்கள் !!!
நாவுகளின் பேச்சுக்கள் !!!!
பாதங்களின் நகர்வுகள் !!!!!
கரங்களின் தடவல்கள் !!1!!!
இத்தியாதி இத்தியாதி !!!!!!!
பரிமாறப் பட்டுள்ளன..........................!
எல்லாமே
மனித உணர்வுக்குள்
புதையலாகிப் போயின!
அல்லாஹ்வின் அற்புதங்களால் !
மனங்களினால் மட்டுமல்ல
செயல்களினால் கூட
வாழ் நாள் முழுதும்
தடவிக்கொள்ளும் ரம்ளானை
பக்தியுடன் -
நோக்க முடியாத
பரிதாப நிலை
உலகில்
வாழும் வரையில் தானே ?
இவ்வுலகில்
நன்மைகளை விட
தீமைகளில் தான்
அதிகமதிகமாய்
நாம் நம்
பாவங்களை
அதிகரித்து வருகின்றோம்.
இன்னும் இன்னும்
எத்தனை -
இருள் காலங்களுக்குள்
பாவச் செயல்களில்
பயணம் செய்வது !\?
.மனித ஆத்மாக்களே ....!
இவ்வுலகம் போலியானது !!
எப்படி பிறந்து வந்தோம்
எதை -
எப்படி கொண்டு செல்வோம் ?
மண்ணிலே பிறந்த
நாம் -
மண்ணுக்கே சொந்தம் !
இந்த உலகம்
யாருக்கும்
சொந்தமல்ல !
அடக்ககஸ்தளம் கூட
ஒரு போலி வாழ்கைக்காய்
வாழ்ந்து வருகின்றோம் !
சொந்தமில்லா உயிருக்காய்
உரிமையில்லா உடலுக்காய் !
சுவர்(க்)கம் நரகம் மறுமைவாழ்வில் தான் தெரியுமென்பதை மறுக்கின்றேன் நான் !கண்களை மூடினால் சுவர்க்கம் கண்களைத் திறந்தால் நரகம் !
பஞ்சமா பாதகங்களும்
நன்மை தீமைகளும்
அன்பும் ஆதரவுகளும்
போட்டி பொறாமைகளும்
தொழுகை நோன்பும்
இந்த உலக வாழ்வில் தான் !
உலகில் -வாழும் மானிடர்களின் மனங்களில் தான்
சுவர்க்கமும் நரகமும்!
மறுமையில் அல்ல
என்பதை -
மறுக்கின்றேன் நான் !
சரித்திர வரலாறுகளில்......
இலங்கை -இங்கு
ஆதி பிதா ஆதம் (அலை ) அவர்களின்
பாதம் பட்ட மண்ணாக படித்துள்ளேன் !
ஆனால் இன்றோ
பேய்களும் பேசாசுகளும்
தீவிரவாதமும் அடாவடித் தனங்களும்
மண்ணில் பந்தாய் விளையாடுவதும்
இங்கு -
ஒரு விளையாட்டு அல்லவா ?
தொல்லைகள் சுமந்து வரும்
உள்ளங்களின் வருகையால்
இப்போதெல்லாம்
நல்ல மனசுகள்
காணாமல் போகின்றது !
நோன்பு காலங்களில் தொழும்
தராவிஹ் தொழுகை கூட
மாற்றம் கண்டு
மாறிப் போகின்றன !
சில ஈமானியர்களின்
மனங்களில் பதியாத
திருமறை வசனங்களை
அடுத்த மதத்தவர்கள்
அறிந்து கொள்வதற்காய்
புரிந்து கொள்வதற்காய்
ஆராச்சி செய்கின்றனர் !
சாதி மத பேதம் வேண்டாம்
என்று -
இலக்கணம் கூறியவர்களே -இன்று
காடைத் தனத்துக்கும்
வேற்றுமைக்கும்
மத பேதங்களுக்கும்
தீவிர வாதிகளாய் நிற்கின்றனர்
அருளப்பட்ட
அல் - குர் ஆன் வரிகளை
ஓதாதவர்கள்
புரியாதவர்கள்
அறியாதவர்கள்
குருதித் துளிகளைத் தான்
தேயிலையாய் -
தாகம் தீர்த்துக் கொள்கின்றார்கள் !
பெண் ஆத்மாக்களின் .......
உயிரை விட மேலான -கற்பு
அழிக்கப் படாமலிருக்கட்டும் !
இன்னுமொரு சமூகம்
இறந்து போகாமலிருக்க !
புதைந்து போகாமலிருக்க !!
அல்லாஹ்வின் அற்புதத்திலிருந்து
கருவாகி உருவாகி வந்தவர்களே
" அல்லாஹ்வுக்கு அடி பணிவோம்"என்று கூறிக் கொண்டு
அடுத்தவர்களையல்லவா
அடித்து உதைக்கின்றீர்கள் ?
அப்பாவி உள்ளங்களின் கண்ணீரால்
இப்போதெல்லாம் -
வரண்டு போன பாலைவனப் பூமி கூட
ஸம் ஸம் நீராய் ஊற்றெடுக்கின்றது !
பணத்தைக் கண்டால் குணம் மாறிப் போகும் அது மனிதரை மட்டும் தேடிக் கொள்லும் !தடவிக் கொள்லும் !!
பணம் -
இல்லாவிட்டாலும் தேடிக் கொள்ளலாம்
குணமில்லாவிட்டால் ?
பணம் பிணமாக மாறும்
பிணம் பணமாக மாறும்
குணம் -
எதுவாக மாறும்?
பணத்தை தேடிப் பெற
படைக்கப்பட்டவர்கள் நாம்
குணத்தை பெற்றுக் கொடுக்க
படைக்கப்பட்டவர்கள் அல்ல நாம்!
அது -நீரில் ஒரு தாமரை
கலங்கினால்
மனிதருக்காக ஏங்குவதில்லை
நாம் -
மனிதப் பிறவிகள்
குணம் மாறினால்
ஆத்ம திருப்தியோடு வாழத் தான் முடியுமா ?
பெண்களை நோவித்தபடி கருத்துக்களை -பித்தனாய் எழுதிய படி (போட்டபடி )முக நூலில் பவனி வரும் ராஜாக்களே ....!நட்பில்லா உறவுக்குள்
நுழைய முன்
உங்களுடன் -
மான மரியாதையையும்
உயர் லட்சிங்களையும்
உடுத்திக் கொள்ளுங்கள் !
முக நூல் மூலம்
பெண்களின் எழுத்துக்கள் -
உயர்வுகள்
மதிப்புக்கள்
புகழ்சிகள்
பாராட்டுக்கள்
இத்தியாதி இத்தியாதி
சில-ஆண்களால்
ஏன்
தாங்கிக் கொள்ள முடியாது உள்ளது ?
அவர்களின் ஊடுருவல்
கருத்துக்கள்
எழத்துக்கள்
நாகரிக மற்ற போர்வையில்
ஏன் -
அசீங்கமாகிக் கொண்டு உள்ளது ?
அது
நல்லவர்களையும்
தழுவாமலிருக்கட்டும் !
நாளையெம்
பெண்களின் எழுத்துக்கள்
ஏவுகணையாய் வெடிக்கும் வேளை
பதர் யுத்தத்தை நினைக்கவும்
பிறைக் கொடிகளை சுமக்கவும்
ஓராயிரம் இதயங்கள்
தயாராகி நிற்பார்கள் !
ஒரு -
அன்னை ஆயிஷாவாய் !
அன்னை பாத்திமா சஹ்ராவாய் !!
அன்னை ஆமினாவாய் !!!
அன்னை கதீஜாவாய் !
உலக பிறப்பில்
உங்களை நீங்களே
தீர்மானித்துக் கொள்ளுங்கள் !
அதில் வளர்வது
என் எழுத்துக்களாகவும் இருக்கலாம்!
அல்லாஹ்வின் அருளாகவும் இருக்கலாம்!!
அண்ணலாரின் போதனைகளாகவும் இருக்கலாம்!!!
ஈமான் கொண்டோரின் நன்னோக்காகவும் இருக்கலாம் !!!!
முக நூலில் புதைந்து விட்டஎன் -காணாமல் போன காலங்கள் !என்றும் ....இன்றும் ....
எப்போதும் ...
இனிமையான வை
இளமையான வை
இதயமான வை
நட்பு உறவுக்குள்ளே
நுழைந்து விட்ட-என்
மூச்சுக் காற்றின் நகர்வுகள்
மூன்றாம் வயதைத்
தாண்டியபடி
நான்(ங்)கில்
அமர்கின்றது
என்னுள்ளத்தைப் போல !
எனது
இந்தமூன்று வருடங்களில்
இந்த ''முக நூல் உறவுகள் ''
என்னை -
அடையாளம் கண்டு கொண்டது !
என் -
கலை உலகத்தைப் போல் !
என் இலக்கிய பயணத்தைப் போல் !!
என் இதயத்தின் நாடி நரம்புகளைப் போல் !!!
மூச்சுக் காற்றைப் போல் !!!!
கவி ஊற்றைப் போல் !!!!!
வாழும் காலங்களில்
எனக்கு -
மரம் விட்டு மரம் தாவும் குரங்கு மனமில்லாத
உறவுகளைப் பெற்றுத்தா !
போட்டி
பொறாமை
சூது -வாது
வஞ்சகம்
முன் ஒன்று பின்னொன்று பேசாத
உறவுகளைப் பெற்றுத் தா
என்னை நேசித்த
நான் நேசிக்கின்ற
உறவுகளுடன்
வாழுகின்றேன்
என்றும்
எப்போதும் !
மனசு அழுது தீர்க்கும் போட்டி -பொறாமை வெடித்துச் சிதறும் !வெந்து கருகும் !!
அழுக்கடைந்த
மானுட இதயங்கள்
பாழாய்ப் போன நய வஞ்சக குணங்கள்
திமிறு பிடித்த பிடிவாதங்கள்
உள்ளத்தில் -
அழுத்துப் பதிந்துள்ளதனால் !
சாதி வெறிகளினால்
வளர்க்கப்பட்ட
மனிதாபிமானங்களுக்கு
சுதந்திரக் காற்றும்
எட்டாப் பழத்துக்கு கொட்டாவி(விட்டது ) விடுவது போலத்தான்!
நட்புக் காற்றுக்காய்
முக நூல் பக்கத்தில்
வந்து கொண்டிருக்கும்
சில -
சர்வதேச உறவுகள்
போலி முகவரிகளில்
துய இதயங்களை
நாசமாக்கும் !
கருத்து சுதந்திரம்
புரிய முடியாமல்
பேனாவின் கசிவுகளாய்
எழுத்துக்களும் இதயத்திலிருந்து
வெடித்து விழுந்து
சிதறிப் பரந்து
மமதைகளின் மனங்களில்
புதைந்து போகும்!
நேர்மை
எழுத்துக்களை சுமர்(ந்)த
விமர்சன வரிகளை
சுரண்டல் கரையான்களும்
அழித்தொழிக்கும் !
எழுத்தாளர்களின் சிந்தனைகள்
ஊறிச் சுரக்கும்
ஊற்று வரை -
பேனாவின் துளிகள்
எழுதிக் கொண்டிருக்கும் !
விரைவில்
போலி உள்ளனக்ளின்
கருத்துக்களிலிருந்து
கவிதைகள் வேறுபடும்
தாக்கி எழுதுவோர்
தாங்கிப் பிடிக்காத வரை !