வியாழன், 15 ஆகஸ்ட், 2013



விதந்தரும் சுதந்திரம் இதந்தரும் எனவே

நிதநிதம் உதைபடும் வதைதரும் வலியால்

சிதைந்திடும் கதியிலும் துதிபுரி பெரியோர்

பதமிணை எதனிலும் முதலெனக் கருதே!

இலந்தை

திங்கள், 5 ஆகஸ்ட், 2013




மரணம் -
மண்ணில் தான் உள்ளது 

மனிதர்கள் வாழும் 
வாழ்க்கையில் தான் இன்னும் 
நம்பிக்கையில்லை ...!

உள்ளத்து உணர்வுகளுக்கு 
நிஜம் காட்டும் 
கனவுகளை மட்டும் 
நம் நயனங்கள்
ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டால் ....?

விடிந்து எழும்
உதயத்திலிருந்து
நம் செயற் பாட்டினை
மனசு -
நம்பிக்கையுடன்
தொடங்கி வைக்கும் !

எம் இதயங்களில்
படர்ந்திருக்கும்
குருதி ஓடையின் பாசிகளை
நீக்கியபடியே -
நன்மைகள் வந்து நம்மை
காப்பதற்கு
நோன்பாய் வந்து காத்து நிற்கும் !

பாவங்களை பாராதிருக்கும் -நம்
செயல்களைப் பார்த்து -
பொறாமைகளை பூரிக்கும்
பூவையர்களும்
புன்னகை சிந்தும் !

இறை அடியானே
நோன்பினியில்
அமல்புரியும்
நற்காரியங்களை
கைவிடாதே (நழுவ விடாதே)!

பிறகு ....
நன்மைகள் எதுவுமின்றி
தீமைகளுடன் தான்
மண்ணறையெனும் கப்ர்தனில்
மனம் நொந்தழுவோம் ...!

நம் உடம்பினை
கடிக்க துடிக்கும்
புழு பூச்சிகளின் வேதனைகளை
தாங்கிக் கொள்ளவும்

நம் உயிருக்கு
சோதனை தந்து
வேதனை பார்க்கும்
அவஸ்த்தை உள்ளங்களை
சம்பாலாக்கும் படியும்

படைத்த நாயனிடம்
தொழுகையில்
துஆ கேட்போம்

ரமளானில் ...
நம்மை -
பாவச் செயல்களால்
வேதனை தரும்
மனித ஆத்மாக்களை
பாசத்தால் திருத்துவோம் !
அன்பால் வெல்வோம் ...!!



சொத்து சுகம் தேடிப் பெண் 

தொல்ரித்துப் பாடாமல் 

சத்தியத்தின் குரல் தொனிக்க 

சகா கவி படைப்பேன் !



நெஞ்சம் உறன்டு 
நினை வோடுங்கி மெய் சோர்ந்து 
கண் பஞ் சடைந் திருளும் 
காலம் வரை என் கரங்கள் 
ஓயா தெழுதும் பா 
உண்மை ந்தழைத் திடவே !



பெண் ணெழுத் தாளர் தம்மின் 

பேற்றினை மதிக்க வேண்டும் 

புண்படா நிலையில் பண்பு 

பொலிந் துற வாட வேண்டும் ..!

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013




ஏக்கம் சுமந்த உள்ளம் 
தாக்கங்களில் மூழ்கும் 

காலச் சுழற்ச்சி வேகம் 
கற்பனைகளை ஜனித்து 
ஆசைக் கோட்டைக்கு 
அத்திவார்மிடும் 

ஏழ்மை வாழ்வுத் தீயில் 
இளமைத் தண்ணீர் 
வேகும்

நாதியற்ற தனிமை
நரகக் கோலம்
பூணும்

கனவு வேர் -அறுந்தே
கன்னிக் கொடி
தள்ளாடும்

பெண்மைப் பூவின் உதிரம்
மண்ணுக்கே -நல
உரமாகும்


மரணத்தை நாடிப் பிறந்தவர்கள் 
நாம் -
வாழப் பிறந்தவர்கள் அல்ல 

இதயம் உண்டு 
எதையும் சுமக்க 

வாய் உண்டு 
கொடுமை மறைக்க 

மானம் உண்டு
மரியாதை காக்க

உள்ளம் உண்டு
அன்பை சுமக்க

அச்சம் உண்டு
இரையை வணங்க

எல்லாம் இருந்தும் ஏது பயன் ..?
உயிர் அற்றுப் போகும் உடம்பாச்சே
உடலை விட்டுப் போகும் உயிராச்சே ..!