வியாழன், 15 ஆகஸ்ட், 2013




சிந்தனைகளை சிதறியபடி 
கலையுலகில் 
பவனி வரும் கவியாத்மாக்களே 
உங்கள் பேனாவில் 
உயுர் லட்சியத்தையும் 
ஊற்றிக் கொள்ளுங்கள் !

உலகிலெங்கும் 
பெண்மை 
அவமானப்படுத்தப்படுகின்றது 
அந்த-கேவலம் 
கவிதைவரிகளில் 
உங்கள்  எழுத்துக்களையும் தழுவாமலிருக்கட்டும் !

நம் 
பேனா முனைகள் 
போர் வீரர்களின் துப்பாக்கி முனையை விட 
சக்தி வாய்ந்தவைகள் 

பெண்மையை மதிக்காது மிதிக்கும்சிலகயவர்களின் இடியை 
தாங்கிக் கொள்ளவும் 
சுமந்து கொள்ளவும் 
ஓராயிரம் 
தைரியத்தை 
ஏற்படுத்திக் கொடு !

அத்துடன்
கண்ணகியாய் 
ஒளவையாய்
சீதையாய் 
மாதவியாய் 
நாளாயினியாய் 
பெண்ணினத்திற்கு பெருமை பெற்றுத் தந்த முன்னோர்களின் பாதையில் 
உன்னை நீயே 
நகர்திக் கொள் !

அதில் போவது நானாகவும் இருக்கலாம் 
மனிதவுள்ளங்களாகவும் இருக்கலாம் 
பேயாகவும் இருக்கலாம் 
பிசாசசாகவும் இருக்கலாம் 




உரசிக் கொண்ட கனவு 
காயமாகிப் போனது 

போலி உறவுகள் 
கொண்ட -
மனித ஜென்மங்கள் 


விலையேற்றம் 
உயிரை  பேயாட்டம் போடச் செய்கின்றது 

காற்றும் -இனி 
காசு கேட்கும் 
தென்றலை தடவிக் கொள்வதற்கு !

காசு இல்லாமல் 
மண்ணில் 
என்னதான்வாங்க  உண்டு 

பொருளாதாரம் -
மனித உழைப்பாளிகளின் ]
இயந்திர சக்தி


வறுமை
ஏழை எளியோர்கள் 
பாடி மகிழும் 
இன்னிசைக் கீதம் 

யாசகம் 
பணத்தில் மிதக்கும் 
பிணங்கள் மீது பீச்சும் 
போலி ஈக்களின் 
இரைச்சல் 


பசிக் கொடுமையை 
இலங்கை மண் 
கற்றுத் தந்த பாடம் 

சந்தோசம் 
படு பாவிகளின் 
உள்ளத்து உணர்வில்

கண்ணீர் 
போர் சுழல் 
கற்றுக் கொடுத்த 
அரிச் சுவடி !

நாங்கள் 
மனிதர்கள் என்ற போர்வையில் 
சோக சுமைகளைச் சுமந்து கொண்டு 
ஆறாத வடுக்களை அணைத்துக் கொண்டு 
வேதனை தார் போட்ட 
சோதனை  தெரு வழியே 
விரகத்தி 
பயணம் போகும் 
விடியலின் பிறப்புக்கள்! 


மண்ணின் மாந்தர்கள் !!
யுகத்தின்  விலங்குகள் !!!
விடியலின் கைதிகள் !!!!
பொறுமையின் வாரிசுகள் !!!!!
இறைவனின் படைப்புக்கள் !!!!!!



மனம் 
குரங்கு போல் 
மரம்விட்டு மரம் தாவும் போதெல்லாம் 
(குணம் மாறும் போதெல்லாம் )
மனிதயினம் புலம்புகின்றது 
இதயங்கள் துடிக்கின்றது 

யாழ்மண்ணை விட்டு 
துரத்தி யடிக்கப்பட்ட 
மனித ஆத்மாக்கள் 
இன்று -
லண்டன் 
சுவீஸ் 
இத்தாலி 
இந்தியா 
இத்தியாதி இத்தியாதி 
நாடுகளில் 
தஞ்சமாகி விட்டது 
வசிப்பிட மாகி விட்டது 1

பிறந்து வளர்ந்த மண்ணில் 

ஆணி வேர்களுடன் 
பிடிங்கி வீசப்பட்ட 
ஏழை எளியோர்கள் 
நாயிலும்  கேவலமாய் 
அகதி முகாம்ங்களில் !

குருதிப் பாலில் 
நக்கி சுவைக்கும் (உறிஞ்சிக் குடிக்கும் )
யுத்த அட்டைகள் 
காம உணர்வுகளில் 
மரித்துப் போகும் !

மனிதாபிமானத்தை இழந்து போகும் !

சுதந்திர மார்பில் 
அத்து மீறல் செய்யும் 
சப்பாத்துக் கால்கள் 
மான மரியாதைகளை 
மிதித்துப் புதைக்கும் !

தோண்டிப் பார்க்கும் 

அதனால் 
வேலிகளே  பயிர்களை மேய்வதால் 
மனிதயினம் புலம்புகின்றது 
இதயங்கள் துடித்தழுகின்றது !


உருவம் சிதைந்திட்ட 
உண்மைகள் 

கறைகளைப் பூசி 
மறை வேதம் மறந்த
எழுத்து நர்த்தனங்கள் 

பொல்லாத வாதங்களிலும் 
பொய்மையின்  தழுவலிலும் 
புளித்துப் போய் 
புழு அரித்துப் போன 
பேச்சுக்கள் 

போட்டி போட்டே 
அவரவர் -
தரங்களை நிர்ணையித்த 
அசிங்கங்கள் !

பழைய சிந்தனைகளை 
புதைத்தே எழும் 
என் -
புதுமைத் தத்துவங்கள் 

இன்று உனது 
நாளை எனதே என்ற 
என் இலட்சியங்கள் !


கதறும் குரலோசை காதில் கேட்டிடாது 
உள்ளம் நோக தாயுள்ளம் -பாசமாய் 
அள்ளி அணைத்திடுவாள் பெற்றமகளை அன்போடு 
மனம் மகிழ்சியினைக் கண்டு 




இதயம் -
அழகாத்தான் உள்ளது ,
உணர்வில் தடவும்
அசிங்கத்தைத் தான் இன்னும்
கழுவிய பாடியில்லை ..!

இறை இல்லங்களுக்கு
தாக்குதல்களை ஏற்படுத்தும்
ஈரமில்லா இதயங்களை மட்டும்
நம் நேசக் கரங்கள்
கிழித்து விட்டால் .....?!

துரத்தி வரும்
இன்னல்களிலிருந்து
நம் இறை இல்லங்களை
அல்லாஹ்வின் -
நம்பிக்கையுடன்
காப்பாற்றி வைப்போம் ...!


எம் ஈமான்களில்
ஒட்டி யிருக்கும்
பொறுமையினை
பாராட்டியபடியே
காலம் -
சுவாசத்தில் கலந்து நம்மை
மூச்சோடு நிலைத்து
கோடி ஜென்மங்கள்
விண்ணும் மண்ணுமாய் வாழ்வதற்கற்கு
வாழ்த்தி நிற்கும் !

நோன்பினை பிடிக்கும் -நம்
இறை நம்பிக்கையினைப் பார்த்து
பொறுமை காக்கும்
வயிறும்
மகிழ்ச்சிகளை துவி மகிழும் !

நேச உறவுகளே ...
உள்ளங்களில் பதிந்திருக்கும்
நம்பிக்கை (பிடிவாத கொள்கைகளை )
இழந்து விடாதீர்கள்
நழுவி விடாதீர்கள் ...!

பிறகு .....
நன்மையெதுவுமின்றி
தீமைகளுடன் தான்
பொறாமை ஊற்றுக்களில்
விழி கழற்றியழுவோம் ....!

நம் பள்ளிகளை
தாக்க முனயுயும்
கடையர் உள்ளங்களை
ஈமானுக்கு மாற்றும் படியும் ,

நம் மதத்தினை
அழித்துவிட துடிக்கும்
அவஸ்த்தை மனங்களை
சிந்திக்கும் படியும்( மாற்றும் படியும்)

படைத்த நாயன்அல்லாஹ்விடம்
தொழுகையில்
பிராத்திப்போம்
முஸ்லிம்களே .....!

மொத்தத்தில்
நம்மை -
வேதனைச் செயல்களால் ......
மூடத் தனங்களால .....
பொறாமை உணர்வுகளால் ...
சாதி பேதங்களால் .....
பிடிவாதக் கொள்கைகளால் ....
பலத்கார மனங்களால் ....
உருட்டி விளையாடும்
பந்த்தடிக்கும் மனசுகளை
நேசத்தால் வெல்வோம் ...!
பாசத்தால் இணைப்போம் ..!!


இதயத்தில் இருள் தன்னைக் களைந்தெடுத்து--நல்ல
இசை தரும் வினையாயாய் குடைந்தெடுத்து !
உதயத்தில் பூபாளம் மீட்டிடுவேன் --உன் 
உயர்வுக்கு நல்வழி காட்டிடுவேன் !

தீமையை முளையிலே தீயிடுவேன் -- எந்த 
தீயவர் வாழ்க்கையையும் திருத்திடுவேன் !
ஆமைபோல் அமைதியாய் வாழச் சொல்வேன் -நெஞ்சில்
ஆறுதல் வார்த்தைகள் கூறி வெல்வேன் !

பேசும் மொழி உயிர் மூச்சு என்பேன்-- மனிதருக்குள்
பேதைமை பாராதார் உயர்ந்தோரென்பேன் !
கூசும் நா வேற்றுமை கூறி நின்றால் --மனிதா
கூடி நாம் வாழ்ந்தாலோர் குறை வருமோ ?

எல்லா மதங்களும் ஒன்று என்பேன் --அதில்
எல்லா இறைவனும் ஒன்று என்பேன் !
இல்லை என்றால் தெய்வம் இவ்வுலகிலில்லை --மனிதா
அல்லாஹ் துணையின்றி ஏதுமில்லை !

ஜாதிகள் ஆண் பெண் இரண்டு என்பேன் --இங்கு
யாவரும் சரிசம மாந்தரென்பேன் !
நீதி நிலை கெட்ட மனிதர்களை --கண்டு
நெஞ்சமே நெருப்பாக வேகுதடா !

ஏழையர் யாவரென் உடன் பிறப்பே --அவர்
ஏற்றம்காண சேவை செய்திடுவேன் !
கோழையாய் வாழ்வதை நான் வெறுப்பேன்--அவர்
குறுக்கு வழி சென்றால் நான் தடுப்பேன் !

அன்பு தான் என் மனச் சாந்தி யென்பேன் --அதை
இதயத்தில் வைத்து நான் பேணிடுவேன்!
பண்பான மாந்தரை வர வழைபேன் --கவி
பாவாலே அவர் வாழ வாழ்த்துரைப்பேன் !

கரைந்தோடும் நெஞ்சங்கள் துணையிருப்பேன் !
நிலையில்லா வாழ்வில் நான் நிறைந்திருப்பேன் --எந்த
நிலை வந்த போதும் நான் --வாழ்வில்
செய்நன்றி கொல்வேன் !

கூடாதே கூடாதகூட்டத்திலே --உன்
குணம் கெட்டுப் போகும் அக்கூட்டத்தினால் !
நாடாதே மது மாது சூது தன்னை --அவை
நாளெல்லாம் உன் வாழ்வை அழித்தொழிக்கும் !

கண் முன்னே கயவரைக் கண்டேனென்றால்--நான்
காறியவர் முன் உமிழ்ந்திடுவேன் !
என் மனத் தோட்டத்தில் ஏங்குகிறேன் --நாட்டில்
இன மூன்றும் ஒற்றுமை காண்பதென்று ?

பொல்லாத காலமினி மாற வேண்டும் --அதில்
போலிகளும் புரட்டல்களும் ஒழிய வேண்டும்
இல்லாமை நிலை முற்றாய் மாற வேண்டும் --பொருள்
இருப்பவர் இல்லாருக்கு ஈய வேண்டும் !

இந்த நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும் --இங்கே
இன மூன்றும் ஒற்றுமை காண வேண்டும்
வன்முறையால் நன்மைகள் சேர்க்கலாமோ --நல்ல
வழி கண்டு அமைதி நிலை நாட்டலாமே !