வியாழன், 15 ஆகஸ்ட், 2013

நிம்மதியற்ற தேடல்



கண்ணுக்கு காணாத தென்றல் காற்று 
வீட்டுக்குள்ளிருக்கும் 
என்னை
எப்படி தடவிச் செல்கிறது ..?

உடம்பு இன்னும் இன்னும் தடவு யென்று 
முற்றத்தை நோக்கி பாய்கிறது. 

மரக்கிளைகளை தேடி 
அலைகிறது காற்று. 

புழுக்கத்தின் தாக்கம் 
வியர்வையின் கசிவு 

பாதங்கள்
காணல் நீரைத் தேடி -
பாலைவனத்தில் தவிப்பதே வேலை. 

நாவில் வறட்சி 
தாகத்தில்  உமிழ் நீர் வற்ற 
தொண்டை அழுது துழாவுகிறது. 

இந்த வாழ்க்கையின் நகர்வுகூட 
ஒரு மண்ணறையை நோக்கித்தான் 

நிம்மதியற்ற தேடலாய்  வாழ்க்கை 
நிலையற்றுக் கிடக்கின்றன 

எதிரிகளைத் தேடும் ஆவிகள்




           
என் உடல் உஷ்ணம் 
வியர்வை சிந்தும் படி 
வேதனைகளால் 
கசிந்து -ஈரம் 
ஊற் றெடுப்பதுண்டு !

சூரியன் தடவ .
கரங்கள் கைக்குட்டையை நாட 
கிளம்பும் புழுதிகளால் 
சுவாசம் 
தும்மலை விட ...
கைக் குட்டையை எடுத்து 
பௌடரைப் போட ...
வாசம் வீசும் 
தென்றலில் கலந்து 

சகீ
வந்து பாரதீ ...
என் 
வீட்டு முற்றத்தின் 
முன்னாலிருக்கும் 
மயானத்தில் 
எல்லாவற்ரையும் 
காணலாம் 
நேரில் ..

எமக்கும் மனப் பயம் 
சுரப்பதால் 
நமக்கு நாமே 
பாதுகாப்புத் தேடுகிறோம் !
துர்  நாற்றம்  வீசுகின்றது
அதனுள்ளே -
-
நரிகளும் '
நாய்களும் ..
பேய்களும் ...
வேட்டையாடுகின்றன !

எதிர் வரும் 
வெள்ளிக் கிழமை 
அவைகளுக்கு 
கொள்ளி வைக்கப் போகின்றேன் 

அப்போ -
சில நேரம் 
தீயிலே பாயும் 
அந்த ஆவிகள்
எதிரிகளை 
தேடிப் பிடிக்கும் !

ரகசியம்



புதைத்த ரகசியங்களை 
கிளரச் செய்கின்றது 
எனக்கான வாழ்கை..!

புரிந்ததுணர்வற்ற வாழ்க்கை



தாய்மையின் அடையாளம் கொடுக்கப்பட்டு 
உரிமையின்றி விவாதிக்கப் படுகின்றது 
புரிந்ததுணர்வற்ற  வாழ்க்கை 

என்னைப் போலவே ..!



மூச்சுக்களின் எண்ணிக்கைகளை அறியோம் 
உணர்வோ உணர்ச்சிகளோ 
சுவாசத்துக்கு நினைவு இல்லை 

வயசும்  நரையும் கூட 
முதுமையை வெறுக்கின்றது 
இளமை தேடி வாழ்வோரின் 
வாழ்கையும் குறைவே 

மனம் மட்டும் அருளை தேடி 
இறைவனை  நாட 
வாழ்வு -
பகலை இழந்த இருள் 

 பூமியெங்கும் 
மனித பிறவிகளின் அடையாளங்களே 
என்னைப் போலவே ..!

நான்




நான் எதுவுமே நினைப்பதில்லை 
காரணம் -
நினைப்பது எதுவும் நடப்பது இல்லையே 
நடப்பது எதையும்  - நான் 
நினைப்பது இல்லையே 

வறுமை




வறுமைக் கனாக்களின் 
வாடிய  கோலங்கள் 

நேசக் கரங்களின் 
நெருடல்கள் 
பட்டுப் போனதால் 
பரிதவிக்கும் வாழ்வு 

துயரச் சின்னங்களாக 
வாழ்க்கை நிகழ்வுகள் 
ஓரத்தில் நின்று 
ஓரக்கண்  சிமிட்டும் 

வீழ்ந்த பொழுதும் 
ஆழ்ந்தத இருளைக் 
கக்கி விட்டு -
ஆறுதல் சொல்லும் 

சாதனைகளை -
சாஸ்திரம் பார்த்தே 
இளைத்துப் போன 
இதயமும் -
களைத்துப்போன 
கால ஊர்வலமும் -
ஒலி  பாச்சி 
ஓவெனக் கத்திய 
உதடுகளும் 
ஊமைப் போராட்ட 
உபன்னியாசம் செய்யும் 

கால நகர்வுகள் 
கடுகதிச் சிறகை 
விரிக்க - 
உயிர்ப்பூ 
உறங்காதியிருக்கும் !
உதிர்வின் ஓரத்தில் 
உயிர்ப்பூ 
உறங்காதியிருக்கும் !