புதன், 4 செப்டம்பர், 2013

விட்டுச் சென்ற தாய்க்கு தொட்டுச் செல்லும் வரிகள்!




பத்து மாதம் சுமந்தே என்னைப் 
பரிவுடன் வளர்த்தவள் உம்மா !
இத் தரை தன்னில் இவளருந் தியாகம்
எழுந்தே தொட்டிடும் விண்ணை .!

கண்ணே !என்று இமையைப் போலே !
காத்திருப்பாள் இவள் நிதமே !
பொன்னே என்றும் பூவே என்றும்
பொலியும் அன்போர் விதமே !

ஈ யோடெறும்பு எதுவும் அணுகா (து )
இனிதாய் வளர்த்த உள்ளம் !
ஒளிரும்(தோயும் )அன்புச் சுடரால் என்னைத்
துலங்க வைத்தால் !உய்வோ,ம் !!

பள்ளிப் பாடம் சொல்லித் தந்தே !
பண்பாய் அனுப்பி விடுவாள் !
வெள்ளி பூத்தே விடியும் வானாய்
விளங்க அனைத்தும் இடுவாய் !

பட்டம் பெற்றே பதவிகள் பெற்றுப்
பாரினில் துலங்க வைத்தாள் !
தொட்டுப் பேசித் துணையாய் நிற்கும்
தூய உள்ளம் உம்மா !

உதிரம் தன்னைப் பாலாய் உதிர்த்து
ஊ ட்டி வளர்த்தவள் உம்மா
உள்ளத் துணர்வில் வாழும் இதயம்
இவளை மறவேன் மண்ணில்

மனித வாழ்க்கை




பகலுக்குள் இரவும
இரவுக்குள் பகலும் 
மறைந்து இருப்பது போல் தான் 
மனித வாழ்க்கையும் 

வாழ்வுக்குள் மரணமும்
மரணத்துக்குள் வாழ்வும் 
ஒழிந்து இருக்கின்றது..!

தாய் ...!



என் இதயத்தில் 
சுரப்பது கவிதை அல்ல
என்னுயிர் தாயாரின் 
குருதித் துளிகள்


என் நினைவு....!



கடற் கரை மணற் பரப்பில்
இரவின் இருளில் நிழலொழுகும்!
அலைகளின் இன்னிசையூடே
நிலாவை(நிழலை ) ரசித்திருப்பேன்!

மௌனமான இரவிலும்
என் இதயம் இறைவனை தரிசிக்கும்!
நல்லுள்ளங்களை தடவிக்
கொள்ளும் தென்றல் நான்!

உள்ளத்தின் பாச சுரப்பை
இந்த இரவில் பெருக்கினேன்..

காற்றின் தடவல்களை
தனிமையின் ஸ்பரிசத்தை
இயற்கையின் தழுவலை
வழிந்து நிறையும் மனதின் பரிவு!

வான் முழங்கும் மின்னல் ஒளியுறைவில்
கார் மேகங்களின் புற நீக்கல்
இதயங்களின் வளர்ச்சியும்
ஆழலின் மாறு தவிப்பும்..

நட்சத்திரங்களின் சிதறல்களில்
சுடரைக் காண்போர் எவருமில்லை

கடலை பார்க்கிறேன்
ஆண் அலையும் பெண் அலையுமாய் சீரி பாய்ந்து
என் முகம் கழுவிச் செல்லும்..
தடவிக் கொண்ட சுகத்தால்
சுவாசிக்கும் மூச்சுக்களாய் உணர்வுகள்!

என் இதயத்து லயங்களிலும்.........
நாடி நரம்புகளிலும்............


தென்றலூடே
ரத்தம் சுரக்கும் எலும்பிலும் மச்சைகளிலும்.....
சுற்றி தவழும் என் நினைவு....!

ஒன்றே ..!



கரையை தொடும் - அலை 

மரணத்தை தடவும் - உயிர் 

சுவாசமும் மூச்சும் ஒன்றே ..!

அலையும் கரையும் ஒன்றே ..!

மனசு....!



கல்லிலும் ஈரம் கசியும், 
மணல் உறிஞ்சிக் கொண்டு 
ஈரப்பதத்தோடு இருக்கும்.
ஆனால் -
சில மனசுகள் 
வரண்ட பாலை வனப் பூமியை விட 
கொடுரமாய் இருக்கும்
காய்ந்து போய் கிடக்கும் ..!

பார்த்திட வருவார் யாரு ?




ஏழைக்கு இல்லை இன்பம் 
இருப்பது யாவுந் துன்பம் 
கூழையே கண்டால் இன்பம் !
கொடுமை தான் வறுமைத் துன்பம் 
நாளையோர் விடிவை எண்ணி
நலமுடன் வாழ எண்ணும்
வாழை போல் ம்டியு மிந்தப்
மாந்தருக் கென்று இன்பம் .?

மாடென உழைத்தே ஈற்றில்
மனத் துயர் மட்டும் மிஞ்சும் !
பாடுகள் பட்டே பின்னால்
பலனது பூ (ஜ் )ஜியம் தான் !
மாடியை நிமிர்ந்து நோக்கும்
மனிதர்கள் இவர்க் ளாலே
மாடிகள் தன்னில் வாழ்வோர்
வதிகிறார் பணத்துக் குள்ளே !

குழு குளுப்பான இல்லம் !
குடித்திட "உயர் ரகங்கள் "
வழு வழுப்பான காரில்
வாழுவர் ,அவர்க்குச்சொர்க்கம்
அழுகையே காணும் ஏழை
அன்னவர்க் இது நரகம்
பழுவான வாழ்க்கைப் பேறு
பார்த்திட வருவார் யாரு ?