ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

பெண் பூவை வாழ விடு.....!




மண்ணோடு 
மண்ணாகிப் போகும் 
இந்த மனித நேயம் -
பயிர்களுக்கு
உரமாகத் துடிக்கின்றது ..!
காம வெறிபிடித்த குண்டு விதைகள்
பெண் பூக்களின்
உயிரிதழ்களைத் தேடுகிறது
இறை படைப்பில்
நிறம் மாறாத
குருதிக்குள்ளும்
ஏன் இத்துனை வேற்றுமைகள் ...?
மனிதனை
மனிதன் கொல்லும்
கொடுமைச் செயலை
எந்த தலைமைத்துவத்தின்
ஆட்சியில் -
முற்றுப் புள்ளி வைக்கப்போகிறார்கள்...?
மரணத்திற்கு அத்திவாரம்
கொலை .களவு .கற்பழிப்பு
துப்பாக்கிச் சப்தம்
இந்த கொடுரம்
எம் மண்ணில் எதற்கு ...?
பொறுமையாய் வாழும்
பெண்புறாக்கள் 
செத்துப் போகட்டுமென்றா .?
ஊமையாய் வடியும்
மனிதப் பிணங்களில்
வெள்ளைப் புறாக்கள்  நீந்தட்டும் மென்றா ...>
மண்ணோடு மண்ணாகும்
மனித நேயமே !
உன் நிழலிலாவது
பெண் பூவை வாழ விடு
சுத்தந்திரப் பூவை
மணக்க விடு ..!
சமாதனம் தேடும் இதயங்களாவது
மானத்தை காக்கும் பெண்களாவது -அதனை
முத்தமிடட்டும
எமது மூதாதையர்
மூளையுடன் நடந்திருந்தால்
எம் பெண்கள்
மானம் இழந்திருக்காது
எமது கால்கள்
இன்று
சருகு களாயிருக்காது
சிந்திய குருதிகளை
சேகரித்து -
கவிதையெழுதும்
எம்முயிருக்கும் -
என்ன உத்தரவாதம்
உணர்வுகள் வரண்டு
நிம்மதியின்றி வாழும
எமக்கு
என்ன 'நாமம '
தெரியுமா ?
காலத்தால் மாறாத
மனித நேயங்களின்
அகராதியில்
நாம்
'அகதி' என்று ...!
அல்லது
பிண மென்று ....!

புதன், 4 செப்டம்பர், 2013

ஏன் படைத்தான் இறைவனும் ....?



கூரையிலே ஆயரங்கண் !கொளுத்தும் வெயில்
குடியிருக்கும் உள் வீட்டில் ! மாரி க் காலம்
வாடையிலே உடலுறைந்து போகும் !எங்கள் 
வாழ்க்கையெலாம் துன்பமாய் மாறிப் போகும் !

பாயில்லை படுப்பதற்கு எழுந்து நாங்கள்!
பசியாற உண்பதற்கு உணவு மில்லை !
நோயில்லா வாழ்மெக்கு அமைய வில்லை
நொடிப் போதும் எமையின்பம் தழுவவில்லை!

கால்வயிற்றுக் கஞ்சிக்கும் கடும் போராட்டம்
கருணையிலா சமூகத்தில் நாமோர் கூட்டம்
ஏழ்மை நிலை தா னெமக்குத் தோழ ராகும் !
இம்மையிலே நமது இடம் நரகமாகும் !

பசி வரவே மாத்திரைகள் உண்போர் வாழும்
பாரினிலே வாழுகிறோம் !தனவந் தர்கள்
வசிக்கின்ற வீட்டினிலே நாயக ளுண்ணும்
வகையான உணவுகளும் எமக் கில்லை !

பெற்றெடுத்த செல்வரினைக் கல்வி என்னும்
பெருங் கடலில் நீந்தவைத்துக் கரையில் சேர்க்க
பற்றெமக்கு மிகவுண்டு !பணத் துடிப்பு
பகையாகிப் போனதனால் வீணில் வாழ்ந்தோம் !


இத்தரையில் எமைப்போன்ற மாந்தர் தம்மை
ஏன்படைத்தான் இறையவனும் ?உயிரைத் தந்து
நித்தமுமே துயரத்தில் ஆழ்த்தி விட்டு
நித்திரையா செய்கின்றான் நம்மை விட்டு ?


நித்திரையோ செய்யவில்லை நிமலன் விட்டு
நெறி யில்லா மாந்தர்கள் புரியும் சதியில்
இத்தரையில் கிடந்து நாம் உழ வர் எல்லாம்,
இனியுந் தான் மாறிடவே வழிகள் காண்போம் !

உண்மை ....!



பொறுமை வாழ்கையின் வெற்றி ...!
பொறாமை வாழ்கையின் தோல்வி ...!!


உங்கள் மனங்களில் என்னை நட்பாக வைத்துக் கொள்ளுங்கள்...!



என் அன்பை 
புரிந்து கொள்ள முடியாதென்று 
சொல்பவர்கள்
உங்கள் மனங்களில் 
இருந்து என்னை அகற்றி விடுங்கள்!

என்னைத் தெரியாது 
என்று சொல்பவர்களும்
உங்கள் மனங்களில் 
இருந்து என்னை நீக்கி விடுங்கள்!

என்னை நேசித்துப் பார்க்க
வெண்டும் என்ற
விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே
உங்கள் மனங்களில்
என்னை நட்பாக வைத்துக் கொள்ளுங்கள்...!

நட்பு



ஒரு உண்மையான நட்புக்கு இதயமாக இரு ...!
துரோகமாய் வாழ்ந்து (மாறி )விடாதே ...!

படைப்பு.....!




இறைவன் படைப்பதை மனிதன் பிறப்பிக்கின்றான் 
மனிதன் பிறப்பிப்பதை இறைவன் படைப்பிக்கின்றான்..! 


உயிரின் நாடி



எல்லையி(ல்)லாக் கல்வியெனும் ஒளியைப் பெற்று 
இவ்வுலக வாழ்க்கையிலே ! ஏற்றம் பெற்று 
தொல்லையி(ல்)லா திவ்வுலகில் துருவ மாகத் 
துலங்கிடவே தூய்மையொடு கல்வி கற்போம் !


குருட்டு நெறியால் மனதைக் குரூர மாக்கிக்
கொண்டிழிவு புரிவதனை அறவே நீக்கி !
புரட்சி யினால் இவ்வுலகில் புதுமை பூக்க
பொலிவோடு கல்வியினைத் துணையாய்க் கொள்வோம் .!


கடல் போன்ற சொத்தெல்லாம் அழிந்து போகும்.
காலமெலாம் சேர்த்த பணம் கரைந்து போகும்
உடலோடு உயிரொன்றி வாழு மட்டும்
உயர்வான கல்வியது இணைந்து வாழும் !

ஒன்று குலம் ஒரு ஜாதி ஒன்றே மக்கள்
ஒற்றுமை தான் வையத்தின் உயிரின் நாடி
என்ற நிலை யோடு தினம் இணைந்து வாழ !
இணையில்லாக் கல்விய தன் துணையே வேண்டும் !


இளமையது வாழ்க்கைய தன் வசந்த காலம்
இவ்வுலகின் பொறுப் பெல்லாம் மனிதர் கைக்கே !
தெளிவுடனே இளமையிலே கல்வி தன்னைத் ,
தேடிடுவோம் வையத்தை திருத்தம் செய்வோம் !