ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

என் வீட்டும் பூனை



ஒரு பூனை
அடுப்படிச் சாம்பலில்குட்டி போட்டு
கதறித் துடிப்பதாக
கனவு கண்டு 
நித்திரையினை தொலைத்தேன்
நிம்மைதியினை இழந்தேன் ...!

காக்கா கோழிகளின்
சங்கீத ராகம்
என் காதுகளை குடையவே
முற்றத்துப் பக்கம் பாதங்கள்
கோலம் வரைந்தன ..!
கண்ககள் நிஜங்களை
தேடி அழைந்தன ...1


என் ராக் கனவுகள் -
என்னை
ஏமாற்ற வில்லை
துரோகமிழைக்கவுமில்லை .!
சில முக நூல் உறவுகளைப் போல்

மன சந்தோஷத்தால் ...!
என் -
இதய மலர் சிரித்து கொட்டியது
அழகான குட்டிகளின்
பிறப்பினைக் கண்டு ...,
வருகையைக் கண்டு ....!


நீண்ட தொல்லைகளுக்குப்
பின் இன்று தான்
என் சுவாச மூச்சுக்கு
மன நிம்மதி கிடைத்தது


இரவு நேர இருளில்
அந்த உடுப்பு பெட்டிக்குள்
எலிகளின் அட்டகாசமா ....?
அல்லது
விளையாட்டு பொம்மைககளின் ?
குரலோசைகளா ..?.
அல்லது
உணர்வுகளின் சப்தங்களா ....?

உன் சுவாசம் பட்ட
வீட்டு சந்து பொந்துகளில்
மூலை முடுக்குக்குகளில்
சூரியனைக் கண்ட பனி போல
மாறத் தொடங்கியுள்ளன

உடம்பினைப் போர்த்திய
துண்டினைப் பார்த்து
உன் இதயம் -
அழுது வடித்தேன் ..?

அதனால் தான் போலும்
உன் உள்ளத்துக் கதவுகளை
அடிக்கடி மூடி
திறந்து எனக்குள் ,
உண்ணாவிரதம்செய்தனவோ ..?
ஹர்த்தால் ஆர்ப்பாட்டம் புரிந்தனவோ ?

என் ஜீவன் -
எலி ,பல்லி ,கரப்பத்தான் .....,
நுலும்பு கொசு ,எறும்பு
எதுவுமே அற்ற
படுக்கையில் மன நிம்மதி நாடி
உறங்க அழைந்தேன்

உன் குட்டிகளை கண்ட
சின்ன எலிகலெல்லாம்
உன்னைப் போலவே
மரம் விட்டு மரம் தாவும்
மந்திகளைப் போலவே
இடம்மாறி தடம் மாறிப் போயின
நிலை மாறி ..!


சில கனவுகள் பலிக்கும்
நினைவுகள் நிறைவேறும்
என்ற நம்பிக்கைகள்
எனக்குள் வாழ்கின்றன
என் எதிர் பார்ப்புகளின் இலட்சசியங்களில்
ஆரம்பமாகும்
திசைகாட்டும் கப்பலைப் போல் ..!
என் வீட்டும் பூனைகளும் ...!

ஏனம்மா ?



இயற்கை அழகு உனக் கிருந்தால்
செயற்கை மேக்கப் ஏனம்மா ?
மானின் விழிகள் உனக் கிருந்தால்
'மை 'யைப் பூசல் ஏனம்மா ?

இயற்கை கூந்தல் அழகிருக்கு
டிஸ்கோ வெட்டு ஏனம்மா ?
அன்ன நடையின் அழ கிருந்தால் 
அடியுயர் பாதணிகள் ஏனம்மா ?

பவளச் சொண்டு உனக்கிருந்தால்
பளிச்சிடும் சாயம் ஏனம்மா ?
அதிசய வாசனை உனக்கிருந்தால்
அத்தர் வாசனை ஏனம்மா ?

வழிகள் காண்போம் !



கூரையிலே ஆயரங்கண் !கொளுத்தும் வெயில்
குடியிருக்கும் உள் வீட்டில் ! மாரி க் காலம்
வாடையிலே உடலுறைந்து போகும் !எங்கள் 
வாழ்க்கையெலாம் துன்பமாய் மாறிப் போகும் !

பாயில்லை படுப்பதற்கு எழுந்து நாங்கள்!
பசியாற உண்பதற்கு உணவு மில்லை !
நோயில்லா வாழ்மெக்கு அமைய வில்லை
நொடிப் போதும் எமையின்பம் தழுவவில்லை!

கால்வயிற்றுக் கஞ்சிக்கும் கடும் போராட்டம்
கருணையிலா சமூகத்தில் நாமோர் கூட்டம்
ஏழ்மை நிலை தா னெமக்குத் தோழ ராகும் !
இம்மையிலே நமது இடம் நரகமாகும் !

பசி வரவே மாத்திரைகள் உண்போர் வாழும்
பாரினிலே வாழுகிறோம் !தனவந் தர்கள்
வசிக்கின்ற வீட்டினிலே நாயக ளுண்ணும்
வகையான உணவுகளும் எமக் கில்லை !

பெற்றெடுத்த செல்வரினைக் கல்வி என்னும்
பெருங் கடலில் நீந்தவைத்துக் கரையில் சேர்க்க
பற்றெமக்கு மிகவுண்டு !பணத் துடிப்பு
பகையாகிப் போனதனால் வீணில் வாழ்ந்தோம் !


இத்தரையில் எமைப்போன்ற மாந்தர் தம்மை
ஏன்படைத்தான் இறையவனும் ?உயிரைத் தந்து
நித்தமுமே துயரத்தில் ஆழ்த்தி விட்டு
நித்திரையா செய்கின்றான் நம்மை விட்டு ?


நித்திரையோ செய்யவில்லை நிமலன் விட்டு
நெறி யில்லா மாந்தர்கள் புரியும் சதியில்
இத்தரையில் கிடந்து நாம் உழ வர் எல்லாம்,
இனியுந் தான் மாறிடவே வழிகள் காண்போம் !

தீர்வு விரல்



பிணமாக நினைத்துப் போய்
பணமாகத்

திரும்பி வரும் 
மீனவரே ...!

உன் -
வெற்றுடம்பில்
எத்தனையெத்தனை
வேதனைக் கீறல்கள்
அத்தனையும் உன்
வறுமையின் கொடுகள் ..!

மீன்களைப் பிடிக்கும்
மடி வெடிப்புக்கள்
வலைகளின் துண்டுகளை
கிழித்து வீசுவதால்
ஏழை மனசுகள்
கண்ணீர் கசிவுகளை
தண்ணீராய் குடிக்கும்

வானத்து விளக்கு
நூ(ர்)ந்து மறையும்
நடு ஜாமத்தில் மனத்துயரமுடன்
வீட்டரசியின்
கைத்தொலை பேசியும்
தொல்லை தரும் ....,

அறுக்குளா வலை
கீறி வலை
மாயவலை
நெத்தலிவலை
இத்தியாதி இத்தியாதி!!

படகு இயந்திரத்தைவலைகளுடன் செலுத்த
சந்தோசம் நிறைந்து நடுக் கடலில்
நிதமும் மீன்
குஞ்சுகள் நிறையும் ,

சின்ன சின்ன
கனவு வலைகளைக்
கரை சேர்பதற்க்காக
கரங்களில் பொத்தியிருக்கும்
சின்ன நூல்களையும்
இராட்சத மீன்கள்
சில -
அரித்துச் செல்லும் ..!

மாலைச் சூரியனின் மறைவுடன்
கடலில் நுழைந்து
காலைச் சுடருடன்
கரைகள் திரும்பும்
களைப்பு உள்ளங்களின்
உழைப்புக்களை
பணக்கார கரங்கள்
அபகரித்துச் செல்ல
விலை பேசி குறை போடும் ..!

கண் இமைகள்
உரக்கக் கடலில்
சங்கமிக்கும் வேளை
வியாபாரம் செய்யும்
விவஸ்த்தையற்றவர்களுக்கு
மீனவரின் அவஸ்த்தையின் வலிகள்
புரிவதில்லை ...!

கசந்த அநுபவங்களினால்
நொந்த மனசுகளின்
நசிந்த-
வாழ்வுக் கரங்களின்
உரிமைகளை பெற ,
பிச்சை கேட்டு அழையும்
எம்பிமாரும் தம்பிமாரும்
இந்த தேர்தல் மூலம்
தீர்வு விரல் கொடுப்பார்களா ..?


வாழ்க்கை என்பது பொய்யடா
காற்று அடைத்த பையடா
வாழ்ந்து தான் என்ன பயன்டா
எல்லாமே மண்ணின் புதையல்டா


நெஞ்சம் வறண்டு நினைவொடுங்கி மெய்சோர்ந்து
கண்பஞ் சடைந்திருளும் காலம்வரை - என்கரங்கள்
ஓயா தெழுதும்பா உண்மை தழைத்திடவே
தோய்வாயல் லாவென் துணை

மனித ஆத்மாக்கள்




பரந்த பூமியில் வாழுகின்ற
மனித ஆத்மாக்கள் -
மரணத்தை நாடியே 
மண்ணில் வாழுகின்றன !

வயசுத் தரையில்
பதியமிட்ட -
வாழ்க்கைப் பூக்கள்
மரணத்தின் தென்றலிலே
வாசத்தை நூகரச் செய்கின்றன !

இயந்திர உலகில்
ஓயாத இரைச்சல்களாய்
ஓலமிடும் .....
கடல் அலைகள் முதல்

தண்ணீர்
காற்று
நெருப்பு
மழை
பசி
பட்டாணி
நோய்
இன்னும் ..இன்னுமாய்
உன்னை
நேசிக்கின்றன (ஆராதிக்கின்றன )

தூசாய் பறக்கும்
பணத் தாள்களும் ,
கவலைகளெதுவுமின்றி
கறுப்போடு மாறும் வெள்ளை முடிகளும்
வறுமை பாய் விரிக்கும்

கிராமத்து லயங்களின்
தொட்டில் பிடவைகளும்
இதயத்தில்
பல கவிதைகளுக்கு
கருகொடுக்கும் ...!

என்
கவி வரிகளும் ,
இன்னும் பல
நினைவுகளுயும் மரணத்தையே
ஞாபகப்படுத்திக் கொண்டுள்ளன ..!

உன் -
மண்ணறை நாடி
நேசிக்கும் இதயம்

என் -
வெள்ளைநிறப் பேனைத துண்டு
மிஸான் கட்டையில்
அடையாளம் காட்டி
அடக்கம் செய்வது போல ..!

படைத்த மா பெரியோனே .....

உண்மையாக நான்
இந்த மண்ணில்
நடமாடும் ஒரு பிணம் தான்

சொல்லப் போனால்
சொத்து
சுகம்
பட்டம்
பதவி
அந்தஸ்த்துகளுக்கு
சொந்தக் காரணல்ல
நான்...
உன் அளவற்ற அருட் கொடைகளுகளுக்குள்..!


உலக வாழ்வில்
பலநூறு மனங்கள்
பலவிதம் வாழ ....,
ஈமானிய கொள்கைகளை
அனுசரித்து நிற்கும்
இலட்சிய வித்து
நான் .

மனித வாழ்வில்
பிறப்பு -இறப்பினை
அறிமுகப்படுத்தியவனே .....,

இன்று -
எனது கவிதைகள்
மண்ணறை வாழ்க்கை பற்றியும்
எழுதிக் கொள்ளும் .,


நீ -
கடைபிடிக்கச் சொன்ன
நடைமுறைகள்
என் -
இதயத்தின் நாடி நரம்புகளில்
பதிந்துள்ளமையினால்

நீ -
மூச்க்சுக்களாய் தந்துள்ள
இயற்க்கை சுவாசங்களால்
என் -
ஆத்மாவின் உணர்வுகளுக்கு
ஈமானிய உயிப்பினைக் கொடுக்கின்றேன்

புகழ் அனைத்துக்கும் சொந்தக் காரனே ..!

இந்த -
புரியாத மனிதர்களுக்கும்
உயிரை மதிக்காத ஜென்மங்களுக்கும்
வாழ்க்கை பயணத்தில்
நேரான வழியைக் கொடு ..!

என் -
கவிதை வரிகளுக்கு
விமோசனம் காட்டி விடு !

எல்லா மனிதர்களும்
சிந்திக்கட்டும் -இந்த
உற்றெடுக்கும்
கவிதை வரிகளினால்

என்-
உள்ளத்து உணர்வுகளுக்குள்
ஜீவித கரங்களுக்குள்
பிண்ணப்பட்டிருக்கும்- இந்த
முடி தூரிகையினை
முஹம்மது நபியின் போதனையாக
இறைவா நீயே
விளக்கம் கொடுத்து விடு ...!

அப்போது தான்....
சாதி மத வேறுபாடுககின் புற்றிலிருக்கும்
போலி பேச்சுக்களின்
வீண் விவாதங்களை நீக்கி ...
.
மனிதர்களை கெடுக்கும்
முட்டாள்களை விரட்டி

நிம்மதி வாழ்வினை
மண்ணில் நாடலாம் (வாழலாம் )

மண்ணறைக்கு நல்லவற்றை
கொண்டு போகலாம் ....!