திங்கள், 18 நவம்பர், 2013



பெண்ணினத்தின் பெருமை நீயென்றே சொன்னார்
முகநூலிலேன் தேவையற்ற கருத்துக்களை நாடி நின்றாய்?
போட்டிபோட்டே பொறாமையில் முன்னேற்றம் கண்டார்
அவமானச் சின்னங்களோடு நீயேன் நட்புவைத்தாய்?

வரும் மாற்றம் ....!



உப்பு நன் நீருள் வீழ்ந்தால்
உடன் கரைந்தழியுமாப் போல்
ஒப்பிலா நட்பும் பொய்மை
குறுக்கிடில் அழிந்து போகும்

ஒளியது மறைந்து போக
உறைந்தும் இருளைப் போல
வளர்ந்த நல் உறவும் தேயும்
வளரும் சந்தேகத்தாலே ....

ஒரு மொழி பேசும் நல்ல
ஈரின மாந்தர் நம்முள்
பிரிவினை எதனால்....?நல்ல
புரிந்துணர் வற்ற தாலே

"சீதனம்"தன்னைச் சாடி
சீற்றமாய் எழுது வோரும்
காதலை மறந்து "காசைக்"
கண்டிடில் மாறுகின்றார்...!

நெஞ்சினில் அன்பு பாசம்
இறைவனின் மாறா நேசம்
விஞ்சிய கல்வி நாட்டம்
விதைத்திடும் உலகில் மாற்றம்....!


கவிதையென்னும் பெயராலே கபடி விளையாட்டு வேண்டாம்
மூச்சு விட்டு மூச்சு வாங்குவது போல் வாசிப்புடன் யாசிப்பும் வளர
மாறா அலை போலென சிறப்பு பெறுவாய்
எதிர் காலம் உன் கையில் வரமாய் பனி புரிவாய் ..!


பெண்ணினத்துக்குப் பாதுகாப்புரிமை வழங்க வேண்டும்
உலமெங்கும் மதித்து வாழுகின்ற நிலைமை வேண்டும்
எழுத்துக்களால் பயனில்லை பெண்களைப் போற்றி
இலட்(ச்)சியத்தாலே உன் திறமை விளங்கச் செய்வாய்!


சேற்றினிலே மிதிக்கின்ற செருப்பை போல
காலத்தை வீணாக்கி கழுவிட வேண்டாம்
இருளையகற்றி யெழுந்தே வெளிச்சமாக்கும்
சூரியனாய் தமிழுணர்வில் எழுச்சி பெறுவாய்!


வாய் பேசும் மனிதரிலும்
மேலானதா
வாய் பேசாத மிருகங்களிளின்
அன்பு

என் உறவு .....!



அன்பு நிறைந்திட பாசம் காட்டிடத் தோழியானாள்
மனதில் நுழைந்தவள் உயிரினில் கலந்திடும் குருதியானாள்

உண்மை நட்பு நெருங்கிட சுடர் தரும் சூரியனா னா ள்
மனம் குளிந்திட பாசம் காட்டிட்டும் அன்னை யானாள்

துன்பம் துளைந்திட இனிமை த ந்திடும் உயிரானாள்
கவிதை எ ழுதிட மனதை தூண்டிடும் கு(க )ருவானாள்

கருணை கா ட்டியவள் சகலமு மறிந்தவள் முக நூலில்
அன்பு தொடந்திட இனிது மகிழ்ந்திடும் என்னுற வானாள்