திங்கள், 18 நவம்பர், 2013



தலைக்கணம் கொண்டு
தன்னைத் தானே
போற்றிப் புகழ்பவன்
சாதனை -
புரிவதற்கு
தகுதி அற்றவன் ..!


நண்பா
முக நூலை
மதிக்கா விட்டாலும்
பரவாயில்லை
அனால் -
அதில் உள்ள உறவுகளை
நீ
மதித்து நாட
மிதித்து நடந்து விடாதே ...!


ஆயிரம்
எதிரிகளுக்கு
மத்தியில்
நீ -
வாழ்ந்தாலும்
நீ நீயாகவே
இருந்து கொள் ..!


தோழி
உயிர்
பிரியும் -போதும்
திருக் கலிமாவை
உரத்துச் சொல்லு


அறிவுள்ளோருக்கு
சொந்தமானவை
நல்ல நண்பர்கள்
நல்ல நூல்கள்

பொறாமைக் காரர்களுக்கு
சொந்தமானவை
இழி மொழிகள்
தீய குணங்கள்

நல்லதை உணர்ந்து எடு
தீயதை அகற்றி விடு


பெண்மனதினை பூவிலும்மென்மையென எழுதுகின்றீர் --முகப்
பொலிவினைப் ரோஜா இதலென்று வரணிகின்றீர் ;
கண்களை மீன்னெச் சொல்கின்றீர் --மலர்
பெண்மையினை ஏன் வசைமாறி பொழிகின்றீர்..?


பெண்கள் எழுதுவதுண்டோ –ஆணினத்து
புலம்பல்கள் யாவையும் கவிதையின் வரிகளில்
என்றுமே வடிப்பதுண்டோ ?
வேதனை தருவது துண்டோ- அந்த
வேதனை விவாதங்களில் எழுதிடும் யாவும்
ஆணினத்தை தூற்றுவதுண்டோ?