ஞாயிறு, 13 ஜூலை, 2014
காலத்தால் அழியாத கலை ..!
சேனைப் பயிரைத் திருடவரும் கிளியினத்தை
தேன்னிய குரல் காட்டித் திரத்துகின்ற -மானைப்
பெண்ணெற்று சொல்லின் பெரும் பிழையே தேவதையின்
கண்ணிரண்டும் காதற் கயல் !
சோலைக் கிளியைச் சூவென்று நானோட்டும்
சேலையுடுத்த கிளி செவ்வந்தி -ஆளை
மயக்கும் மாறனவன் ! மலரம்பே விழி மலர்கள்
நயந்தொழுகும் அவை நின்று நரை !
சோளன் கதிரோ ! சுவையான மாதுளையோ !
வாளென்ன நிற்கும் வடிவமது ?- காளை
இதயத்தைக் கண் மூடிக் கண்ட படி குத்துவது
எது வென்று புரிய வில்லை ஏம !
வெண்டை விரல் வடிவம் !வேல்வடிவம் உள்ளங்கை
கொண்டை சிறு பூசனிக்காய் !கோலையிதழ் தண்டுக்
கரங்கள் :காலிரண்டும் செங்கதலி ! ,கன்னியவள்
அருங்காதல் நெஞ்சத்து அலை !
வெடித்த வெள்ளரியின் விதை போன்ற பற்சிரிப்பு !
கடித்துண்ணத் தூண்டும் கன்னங்கள் - இடித்த
ஏலக்காய் போலே !இவள் பேச்சு தமிழ் மணக்கும்
காலத்தால் அழியாத கலை ..!
மனதின் வலி
அந்த முள்ளி வாய்க்கால் கனவுடனே வரும் சுசியுடைய
நினைவினூடே நான் நடக்கையில்
அதிசீக்கிரத்தில் மாறாது மனதின் வலி.
அன்பின் தோழியாக இருந்த உறவின்
நெருக்கத்தில் இழப்பின் தாக் கம்.
நாடி நர்ம்புகளுடனே ஓடிய
குருதி யோட்டங்களுக்குப்
பின்னால் உயிருக்கு
வழிவிட்டு
முள்ளி வாய்க்காலில் நான்.
தாமதமாகத்தான் தெரிந்தது அது
தாக்குதலிருந்து கசிந்து போனது
நான் ஊட்டிய என் சுசியுடைய
ரத்த வாடை என்று....!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






