செவ்வாய், 22 ஜூலை, 2014

மகா கவி பாரதி








தமிழ் மண்ணிலே தோன்றியே-நல்ல
பாவினை ஊட்டினான் மனங்களிலே
சுவையுடன் கவி பாடினான் -தமிழ்
உணர்வு யில்லாதோரைத் தூற்றினான் /தூண்டினான் /

ஆழமாய் கவிதைகளைப் படைத்தான் - கெட்ட
சாதி பேதங்களை மாற்றினான்
உழைத்து வாழப் பாடினான் -வீணே
சோம்பரியாய் கிடப்போரை விரட்டினான்

கெட்ட உள்ளங்களைச் சாடினான் -அதை
உயர்வாய் மதித்து போற்றினான்
பாவினிலே மெரு கேற்றினான் -தமிழ்
பற்றின் உயர் வினைக் கூட்டினான்

பெண்ணின் பெருமையை போற்றினான் -அவர்களை
மதித்து நின்று வாழ்த்தினான்
மண்ணின் மாணிக்கம் அவளென்று --தினம்
பாடிப் புகழ்ந்து காட்டினான் மானிடர்க்கு

அடிமைத் தனத்தை சாடினான்
நாட்டின் நடப்புக்களையும் பாடினான்
சாவுக் கஞ்சாது எழுதினான் -மண்ணில்
மாறாப் புகழினை பெற்றிட்டான்

பாரதிக்கு பா வடிக்கவே -என்
சிந்தனை துளி உற்றெடுக்கும் வெள்ளமே
மண்ணில் பிறந்தவன் கவி மனங்களிலே -அந்த
மா கவி பாரதி விண்ணிலே ....
 

பெண்மையா வேண்டும் ...?








இறையோன் அருளொளியை எழுது!
இயற்கையின் எழிலை எழுது!
உலகின் அற்புத வளத்தை எழுது!
சுரக்கும் சுகந்தம் தன்னை எழுது!
தூய நட்பு உள்ளத்தை எழுது - நண்பா
அனைத்தையும் மனம் திறந்து எழுது!
பெண்மை தனை எழுதி - தாய்மை
பொங்கி யெழும் கருணையை யேன் மறந்தாய் ?

வானம் பூமியை எழுது!
ஆழ் கடல் அற்புதத்தை எழுது!
வான் பொழியும் மழையை எழுது!
தரை மேல் விழும் சுடரை எழுது!
பசி பட்டாணி பஞ்சத்தை எழுது!
மரம் செடி கொடியை எழுது!
எண்ணிலா இயற்கை அழகை எழுது!
தாய் குலத்தை வர்ணிப்ப தேன்...?

கலை இலக்கியத்துள்ளே நகரும்
போட்டி பொறாமை தன்னை எழுது
கவிதைகளை அருமையாய் எழுது - பாரில்
எழுந்துள்ள பஞ்சத்தை எழுது!
மின்னலாய் பிரகாசிக்கும் இயற்கையை எழுது
உலகின் அழகினை போற்றி எழுது!
ஆயிரமுண்டு எழுத,அவற்றை யெல்லாம் விட்டு..!விட்டு -
உலகினில் பெண்மையா வேண்டும் எழுத ....?
 

எட்டிப்பிடிக்காதயிவள்


நவம்பர் டிசம்பர் மாதம் கிழக்கில் குட்டை குளம் நிரம்பும்
குளிர் கால மழை வந்தாலே போதும் -அவள்
ஒட்டி உறவாடி நித்திரையில் காதுக்குள்
மதலை மொழி பேசி மகிழ வருவாளாம் 
சட்டென அடித்து விட்டு சனியனே போ என்றாலும்
வெட்கப்படாமல் திரும்பி வருவாளாம் அவள்
பாசமுடன் நம்முடலை உறிஞ்சி எடுக்கலாமென்ரென்னி
சட்ரென்று முத்த மழை பொழி வாளாம்

கட்டில்படுக்கையானாலும் கல்யாண வீடே யானாலும்
போகுமிடமெல்லாமே காதல் -நாம்
மண்ணிலே கிடந்தாலும் மாடி வீட்டில் வாழ்ந்தாலும்
உறவெனக் கொஞ்சி மகிழ் வாளாம்
அனுமதியின்றி எமையானுகி குருதியை வயிறா ர
உரிமையுடன் தானுறிஞ்சுவாளாம் -இந்தக்
பென்னழகி தன்னை யொரு காளையனும் விரும்பாத
காரனத்தை என்ன சொல்வேனான் ...?

பாசமற்ற இப் பேரழகி எதிரியாய் எமையணுகி
விரக்திக்குட் படுத்துவாளாம் -தினம்
நள்ளிரவு நேரத்திலும் நம்முடைய உறக்கத்தை
எழுப்பி விட்டு விடு வாளாம்
எட்டிப்பிடிக்காதயிவள் கட்டிப் பிடிக்கத்தான்
சங்கிதம் பாடி வருவாளாம் மிக
கெட் ட உறவாலே மலேரியா டெங்கு தந்துயிரை
மரணத்துக்குத் தள்ளி விடும் பாவியிவள் நுளம்பு

கொம்பியூட்டர் யுகம்



உள்ளதின் விரிப்புகளில்
மதுவாக இனிக்கும்
கலைக் களங்கள்
புதுக் கவித் தளங்கள்--- 

பேனாவின் சக்தியில்
பிறந்து வரும்
எழுத்துச் சிசுக்கள்
கற்பனைத் தெளிவில்
விரியும்
புதுக் கவிதை பூக்கள்!

ஒருயுக விடிவில்
கலை நோய் பிடித்த
உள்ளங்களின்
வெளியீட்டு நோக்கில்
குணப் படுத்த -
மருந்தாய் மலிந்த
புதுக் கவிதை தொகுதிகள்----

தளம்பி வீழும்
மரபுகளில்
ஒரு சிறு
வழுக்கலை நீக்கும்
புது வடிவங்கள்!

கசிவுகளாய்
உள்ளத்து ஊற்றுக்களில்
நிறையும் கவிதைப் பதிவுகள்
தனி ரகமாய் ஜொலிக்கும்

விமர்சனம் வீச -
மனப் பூ மலர்ந்து
பாராட்டு மலர்களால்
தூவ....
அதற்குள்
பொன்னாடை போர்வைகளின்
மகிழ்ச்சி பொங்க
இதயம் தடவும்......

கவிதைகளின் பிறப்பு
கலை நயம் சுரந்து
பதிவுகளின் பரப்பில்
நாமங்கள் வீச......

வலிமை இலக்கியத்தின்
ஷேமம் விசாரிக்கும்
சில தளங்கள்!

கால நகர்வில்
கற்பனை வாத
அடித்தளத்தில்
கறுமைத் திரை கிழிய
கவிதை கருவாகும்....!

கவிதை பதிவுகளில்
முளைத்த வித்துக்கள்
நாளை
விருட்சமாகி
மனித வாழ்வின்
ஆழ அகலங்களை
வேரோடிக் களையும்

இலட்சிய நோக்கில்
தாமாக எழுச்சியுறும்
உண்மைச் சொரூபத்தில்
உயர்ச்சி -
காண விழையும்...

தேங்கிக் கிடக்கும்
அறிவின் புழுக்கம்
வேர்த்துப் போக
ஒப்பீட்டளவில்
இவை ஒரே ராகம்!
இது ஒரு -
கொம்பியூட்டர் யுகம்
சர்வதேச பதிவுகளின் தளம்
பதிவுகளோ நவ யுகம்.....

யா அல்லாஹ் ...!





கருணை உள்ளமாய் என்னை படைத்தாய்
யா அல்லாஹ்
நன்றி செலுத்திடல் வேண்டும்
என் மனமாற உன்னை நினைத்து தொழுது 

பிறப்பிலே தந்திட்டாய் முஸ்லிம் நாமம்
மார்க்கத்திலோ பற்றுள்ள மனசு

அருள் மறை திரு மறையில் உலகின் அத்தாட்(ச்)சி
தஜ்விதாய் ஓதிட அவை மனதில்
நிச்சயம் கிடைக்கும் பயன் (பலன் )
உலகம் உள்ளவரையில்

உள்ளத்தில் வஞ்சகமில்லா அன்பு
ரத்த நாளங்களிலே பாசத் துடிப்பு
மெல்லிய் இதயமென என் உள்ளத்து உணர்வு
குறை யேது மின்றியே பொழியுது
நபி வழியே சுவாசிக்கும் மூச்சு

கருணை உள்ளமாய் என்னை படைத்தாய்
யா அல்லாஹ்....!
நன்றி செலுத்திடல் வேண்டும்
என் மனமாற உன்னை நினைத்து
 


படைத்த நாயன் அல்லாஹ்விடம்
எதைக் கொண்டு
மண்ணறைக்கு செல்வாய் ?

பணமா ?
வீரமா ?
சொத்து சுகங்களா ?


வானம் மேலே
பூமி கீழே
நாடுவில் நாம்

என் சகீ
எது வந்தாலும் ,
நான் -
கலங்கிப் போகவே மாட்டேன்