சனி, 8 ஜனவரி, 2011

ஒரு ஆத்மாவின் கதறல்!

சங்கத் தமிழைக் காதலிக்கும்!
தங்கை    என்றன்   உளமின்று
மங்கிப் போன கதை கேளீர்! 
மனதின் நிலையைப் புரிந்திடுவீர்!

மக்களுக்காய் போராடும்!
பாராளுமன்ற சகோதரரே!
கடின உள்ளம் கொள்ளாதீர்!
கண்ணீர் சிந்த வையாதீர்!

விலையேற்ற மென்னே ..?வயிற்றிலே
அடிப்ப தென்ன ..? கூறிடுவீர்!
புள்ளடி வேண்டும் கேளுங்கள்
எங்கள் நிலையைப் பாருங்கள்!

எம். பி. மாரே! தம்பி மாரே!
அழகுத் திருநாட்டின் காவலரே!
உண்மையாக கேட்கின்றேன்!
விலையேற்றத்தை குறைத்துத் தாருங்கள்!

மனம் கலங்கி கேட்கிறேன்!
பாவை  புலம்பிக் கதறுகிறேன்!
விலை ஏதும் ஏற்றாமல் நீங்கள்
எங்கள் ஏழ்மையினைத் துடையுங்கள்

சரித்திரம் அல்ல தரித்திரம்!!!

வரட்சியில் துடிக்கும்
வாலிபத்தின்
மனித நேயமே!
இங்கு-
பாலைவனம் மட்டுமா
வரண்டு  போயின...?
 என்இளமையும்  தான்!
"நா"தவிக்கலாம்
எம்
வலிபமுமா ..?

நிம்மதியை தொலைத்து
இளமையை இழந்து
முகாம்களில் -
அடக்கிலம்  மடைந்து 
உறவுகளைப்  பிரிந்து
அகதிகலாக்கப்பட்டோம்!

வாழ்க்கையே
சஹாராப்பாலைவனமாகிவிட
உஸ்ன நினைவுகளால்
நாம் துடிக்கிறோம்!

எரியும் சுடராக
மனம்-
வேதனை நெருப்பில் சங்கமிக்க
உடம்பில்-தவண்டு  விளையாடும்
உயிர்
புகையாகமாறிக்கொண்டிருக்கும்


எம் வாலிபங்கள்
முதுமையாகிப் போக,
குருதித் துளிகள்-
சிதறிப் போக,
நாங்களென்ன
கருங்கல்லா..?
உணர்ச்சியின்றி கிடப்பதற்கு..!
சந்தோசமின்றி வாழ்வதற்கு

எம் அவலக்குரல் ஓசை
படைத்தவனுக்கு-
கேட்காமளிருப்பதற்கு 
நாங்களென்ன
மீஸான் கட்டைகளா?
அல்லது
உறுகிப்போட்ட
இரும்புத்துண்டுகளா?
உரிமைகள் இழக்கப்படுவதற்கும் 
உடமைகள் எரிக்கப்படுவதற்கும்
உணர்வுகள்-
-புதைக்கப்படுவதற்கும்
மனித நேயத்தின் வாலிபம் -தானா
தேவைப்படுகிறது...?

எம்-
உடலில் நிழலாடும் மூச்சுக்கள்
எதிர்கால சமூகத்தினருக்கு-
சரித்திரம் மட்டுமல்ல!
எம்
சந்தயினரின் தரித்திரியமும் தான்!

உழைத்து வெல்வோம்!!!!

முயற்சியே   எங்கள்  பாதை
 மகிழ்சியே    தேடும்  இல்லம்
உயற்சியே    அடையும்  ஊராம்
  உணர்ச்சியே   பயணத் தேராம்
  அயற்சியை   எதிரிப்  படையாய்
அழித்துநல்  இன்பம்  காண்போம்;
வியர்வையை  வீர  வாளாய்
வீசியே  உழைத்து   வெல்வோம்!
 
 கெட்டதாம்   முயற்சி  காணாக்
கடமையில்   தூய்மை சேரின்
திட்டமாம் கொள்கை நன்றய்
தீட்டிடும் வெற்றி பாரீர்!
தொட்டவை பொன்னாய் மாறத்
துணிவுதான் வேண்டும்! இங்கே
விட்டது அகலும் வினைகள்
வாழ்வது பூக்கும் சிறந்து!

அடுப்பெல்லாம் எரிந்து பசியை
அழித்திடும் உறுதி வேண்டும்!
துடுப்புகள் இளைஞர் நாமே
திருப்பணி தொடங்கி வாழ்வின்
வடுக்களை களைந்து எங்கும்
வெளிச்சத்தை விதைக்க வேண்டும்;
கொடுத்துயர் நீங்கி யார்க்கும் 
களிப்புறும் விடியல் வேண்டும்!

மழைதரும்  மேகம் பார்ப்பீர்!
மண்வளச் சிறப்பை பார்ப்பீர்!
பிழைதராக் கல்வி நெறிகள்
படிகளாய் உயர்வு காட்டும்!
இளைஞரே  எழுவீர்,எங்கள்
இலட்சிய நோக்கம் உழைப்பு
அழைக்கிறேன் வாரீர்! உயர்ந்து
ஆக்குவோம் நிம்மதி வெளிச்சம்!

கரையினில் ஆலைத் தொழில்கள்
திறமொடு கண்டோம்,இன்னும்
கரையிலாக் கடலில் புகுந்து
கொள்ளுவோம்  செல்வத் தொழில்கள்
விரைவுறச் செய்வோம், அறிவால்
விண்ணிலும் அடைவோம் வெற்றி
நிரையெனத்  திரள்வீர்! கணமும்
நன்மைகள் படைப்போம் நெஞ்சே!

அன்பு இதயம்!!!!

நீ-
அன்பை எழுதி எழுதி.....
எனக்குள்
சிறைப்பட்டுப் போய்
நாட்கள் கரைந்து விட்டன!

நான்-
சாதாரணமாய்த்தான்
உன்னை எண்ணினேன்!

ஆனால்-
வாரத்தில் இருமுறைவரும்
உன்-
வசந்த மடல்கள்
உன் இதயத்தை
இமயமென
எனக்குப் பறைசாற்றியது!

அதனால்தானே-
என் இதயத்தோடு
இப்படி
இறுகிப் போனாய்!

ப்ரியோய்...
அன்பு தெளித்த
உன் கடிதங்களை...
நான்
அப்படியே
மனதில் எழுதிடுவேன்!
உன்னை நான்
சிறைபிடித்த வரலாறு
தூய்மையானது!

நான்-
காலத்தை நேசிக்கதாவள்;
இற்றுப் போன
சமுதாய நாற்றத்துக்குள்-
நீ மட்டும்
எப்படி...
எனக்கு
நட்பு மனம் தந்தாய்..?

நீ விரித்த
பாசவலைக்குள் சிக்கி
கனநாள்;

கனவாக ஆக்கிவிடாதே...
என்று கதறினேன்!
இன்று-
என் கதறல்
நிரந்தரமாகிப்
போய்க்கொண்டிருக்கிறது!

நீ-
 வசந்தத்தை தொலைத்திருக்கலாம்!
அன்பைத் தூக்கி வீசாதே!
அது-
ஆயுள் முழுவதும்
உன்னைக் கொல்லும்!

நிச்சயமாய்
நீ என்னை
இதயத்தில் இருந்து
அகற்றவில்லை என்பது!
எனக்கு நன்றாகத் தெரியும்

உன் இதயம்
அன்பிதயம் தானே?

வியாழன், 6 ஜனவரி, 2011

தூசாய் மாற்று!!!!!!!

சமாதானமே! நீயொருக்காய் தென்றலாய்மாறு
அராஜகமாம் அடாவடித்தனத்தை தூசாய் மாற்று!
இப்பூமியில் உன் ஈரநெஞ்சம் காட்டு
புலர் பொழுதில் துயரங்களை சம்பலாகிக்போடு!

பாலகரை கடத்தி நிதம் பணம் கேட்டு
மிரட்டுகின்ற படுபாவி! இதயங் கொண்டு
வாழுகின்ற கொள்ளையர் தம்மை! வாட்டு
வேதனையுற்றிருக்கும் இதயங்களுக்கு மகிழ்ச்சியைக் கூட்டு!

உடமைகளை சுருட்டுவோரை நண்பர்களாக்கி
நல்லவர்களுக்கு அவமானப் பெயரிட்டு
மணமாரும் இதயங்களுக்கு தீயையூட்டும்
அகிலமெங்கும் உண்மைக்கு சுடரைக் கூட்டு!

எரிக்கப்பட்டு   புதைக்கப்பட்டு இவ் உலகில்
உறவிழந்து வாழுகின்ற நாட்டு மக்கள்
நிம்மதி பெற்று உன்னாலே! கவலை மறந்து!
சுதந்திரமாந்தறாய் வாழ்ந்திடவுன் அருளினைக் கூட்டு !

புதன், 5 ஜனவரி, 2011

பிறந்த பிரக்ஞை!

மனம்
சிதைந்து போகிறது 
கொஞ்சம் கொஞ்சமாக!

உயிர் பாக்கி 
உறுப்பு என்பது இரும்புத் துண்டா.........?

வயசு-
கூடிப்போக வேண்டிய மாற்றம்.
பத்தோடு எட்டு 
பதினெட்டா. ...?

சரியாகத் 
தெரியவில்லை!

தலையின்
கறுப்பு முடி 
நரைத்துப் போகிறது
தினம்! தினம்!!!


நிரந்தரமற்ற 
மனித வாழ்வு 
கலங்கும் அவலம் 
இங்கு.....

ஷெல் வீச்சால் 
காயப்பட்ட 
பார்வதியின்
முகம் மறந்து 
நினைவு சிதறுகிறது
கனவில்.

அங்கம் துண்டிக்கப்பட்ட 
 பாணணாய்த் துடிக்கிறது
பிறந்த  பிரக்ஞை!

சமாதானத் தென்றலின்
தடவலை
அவ்வப்போது சுவாசிக்கையில் 
பாட்டியின் மூச்சு
அடைபட்டு 
உயிர் பிரியத் துடிக்கிறது.

முகத்தில் சொட்டுப் புன்னகை.........

போராட்டம் நிறைந்த
நாட்களில் அழிவை மட்டும்
நினைக்கையில் 
மனம்-
சிதைந்து போகிறது
கொஞ்சம் கொஞ்சமாக!

புயல்!!

சகீ...
நகரும் பாதங்களின்
நெடும் பயணத்தை
விசாரித்துக் கொண்டிருக்கிறாய்  
நீ...

போ...
போய் கொண்டே இரு...!
எத்தனை தூரம்
உன்  பயணம்
தொடருமென்பதை
அறிய வேண்டும்
எதிர்பார்ப்புக்களெல்லாம்      
ஏமாற்றங்களாகிப் போன
உனக்காகவா...
நான்
தவமிருந்தேன்..?

என்
தாகத்தின் அவஸ்த்தைக்கு
ஒரு துளி நீர் ஊற்றுவாய்
என்றெண்ணிய என்
எதிர்பார்புக்களை
வெடித்துச் சிதறும்
இந்தோனேசியாப் பூமியாய்
மாற்றுகின்றாய்
என்னையும்...
என் எதிர்பர்புக்களையும்

இம் மண்ணில்
நீ!
நினைத்த படி வாழ்!
ஆனால்
என் வாழ்க்கை பயணத்தில்
புயலாய்  மட்டும் மாறி விடாதே