ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

சிரிப்போடு :
ஆரம்பிக்கும்
அனேக காதல்
கண்ணீரோடு கரைகிறது ..!
துயரோடு மறைகிறது ..!!
வேண்டாம் கண்ணே
என் உறவு உனக்கு
இல்லாமலே போகட்டும்.....!

என் நினைவு உன்னை
துயரங்களுக்கு தழுவிச் செல்லும்.....!
காணாமல் போன நினைவுகளை
எண்ணி எண்ணி
உன்னை நோவினை செய்யும்.....!

சொந்தமென்றும்
பந்தமென்றும்
பாசமென்றும்
பற்றுயென்றும்
உன் மனதை
அழிக்கச் செய்யும்....!

வேண்டாம் கண்ணே
என் தொடர்பு உனக்கு
இல்லாமலே இருக்கட்டும்.....!

என் உறவு உந்தன்
மனதினை மாற்றும்
சுகமான சுகத்தில்
ஒரு தீச்சுடராய் சுடும்....!

துயரங்களையெல்லாம்
உடம்பில் -
பாரமாய் சுமத்தும்
கலங்கமற்ற உள்ளத்தில்
தொடரும் சந்தோஷத்தை
பிணியாய் மாற்றும்!

அதனால் வேண்டாம்
கண்ணே.....!
என் உறவு
உனக்கு
தொடராமலே
நகரட்டும்....!
போட்டி....பொறாமை :
சூது ...வாது:
பொறாமை ...வஞ்சகம் :
இல்லாத _
மனமிது:
நீ
கைபிடிப்பதற்கு முன்பு ..!
தோழி :
உன்-
பெயர் சொல்லி
அழைக்கமா ட்டேன் ..!
என்னுள்ளே_
வாழுகின்ற நீ
பார்க்காமல் போய் விடுவாயோ
என்ற அச்சத்தினால் ...!
தண்ணீரை:
வீ ன் விரயம் செய்யாதே
அது_
மழையை விடமேலானது....!
குருதியை விட சிறந்தது...!!
உயிரை விட பெருமதியானது !!!

வெடிக்கப் பார்க்கும் எரிமலைகள்.....!

துடித்துக் கொண்டிருப்பவர்கள்
எல்லாம் என்னை
இடித்துப் பார்த்துவிட்டுச்
சொல்கிறார்கள்
நான் தூங்கிக் கொண்டிருக்கின்றேனாம்
அவர்களுக்கு எங்கே
தெரியப் போகிறது
எனக்குள் ஒரு
எரிமலை
ஏற்பாடகிக் கொண்டிருப்பது....
உருவம் சிதைந்திட்ட
உண்மைகள்....

கற்களைப் பூசி -
மறை வேதம் மறந்த
எழுத்து நர்த்தனங்கள்!

பொல்லாத வாதங்களிலும்
பொய்மையின் தழுவலிலும்
புளித்துப் போய்...
புழு அரித்துப் போன
பேச்சுக்கள்....

தகவல் தொடுத்ததே
அவரவர் -
தரங்களை நிர்ணயித்த
அசிங்கங்கள்!

'புதிய சக்தி'களைப்
புறக்கணித்தே எழும்
என் -
புதுமைத் தத்துவங்கள்!

இன்று உனது...!
நாளை எனதே!என்ற