ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

மழை பொலியாத வரண்ட பூமியில்
தென்றலுடன் மோதிக்கிளம்புகின்ற
புழுதியை நுகர்ந்தவாறு:
வரண்டு தவிக்கும் நாவுடன்
நகர்ந்து செல்கிறேன் !

உச்சி வெயில் பொழுதில்
நீர் ஊற்றுக்களாய் வடியும் வியர்வைகளோடு
தோனி வலை கைறுகளையெல்லாம்
கரையோரத்தில் நங்கூரம் விட்டு விட்டு :
வீ ட்டை நோக்கி நடக்கிறேன் !

மீன் படாத சோகத்தில்
பதறியழும் -
வயிற்றுப் பசியினைப் போக்கிடவென்று
குரும்பை ஒன்றை பறிக்க முனைகிறேன்...!

செழிப்பு வராத வறுமைக்குள்
உதிரும் மரக் கிளைகளாய் வாடி வதங்கி
பாலைவனமாகிப்போன
வரண்ட சஹாராவில்ஓடி ஓடி
ஹஜராவாய் நீர் தேடுகின்றதொரு
உணர்வு....
இரவைப் போல் அமைதியாய் இருந்து பார் ...!
சூரியனைப் போல் சுடராய் வாழ்ந்து பார் ...!.!!
ஏசி திருத்தும் ஆணை நம்பு ...!
போற்றிப் புகழும் ஆணை நம்பாதே ...!!
தூய நட்பு சுகம் தரும் ...!
அசுத்த நட்பு நோவினை தரும் ...!!
நன்மைக்காக வாதாடுவோம் ...!
தீமைக்காக போராடுவோம் ...!!
மொழிகளால் நட்புள்ளங்களை பிரிக்காதே ...!
பொறாமையால் உறவுகளை அழிக்காதே...!!
இன்பங்களை நினைத்து வாழ் ...!
துன்பங்களை மறந்து போ ....!!