சனி, 2 ஜூன், 2012

இது ஏழைகள் வடிக்கும
கண்ணீர்
எனக்கு சம்பந்தமில்லை

தூசுக்கள் கிடந்தவள்
அழுக்குகளை
கழுவிக் கொண்டாள்

பட்டமரத்து விறகாய்
பிரகாசமற்ற வாழ்க்கை

துயரத்தில் வாழ்ந்தவள்
இன்று கை ஏந்தி வாழ்கின்றாள்

லயங்களில் வாழ்ந்தவள்
இன்று மாடி வீட்டில்
வாழ்கின்றாள்
சில்லறை காசுக்காக சொல்லடி பட்டவள்
இன்று ரூபாய் நோட்டுகளில்
புரலுகிறாள்!

என்ன ஒரு மாற்றம்
ஏழை பணக்காரனாகவும்
பணக்காரன் ஏழையாகவும்
மாறிய வாழ்க்கையின் அற்புதம் ..!
மனமாறும் உணர்வு
..........................................
தன் மனைவியை வைத்துக் கொன்டு
தரம் கெட்ட வாழ்கையொன்றை
தமதாக்கிக் கொள்வது சரிதானோ...? ...

மனமாறும் உணர்வுக்குள்
முகமாறும் சூழ்ச்சிக்குள்
மூச்சுக்கு வழிதேடி
மோசத்தில் விழுந்தது
தேவை தானா ..?

.மானத்தை விற்ற பின்
பொருமையிழந்த தூக்கத்தை
ஏனந்தக் கண் தேடுது ? - அது
இரவை நோக்கி ஏன் இருளை சாடுது?

சுகமான நிகழ்வுகள்
சுமையாகும் நினைவுகள்
சுமைதாங்க்கு ம் போது மனைவியை தேடுது..?

தூசாய் பறக்கின்ற அழுக்கெல்லாம்
புழுதியாய் போகின்ற
துரு நாற்றத்தின் நிலையாகினாய்- வெறும்
காசுக்கு அவமானமானாய் ...?
இழிவுக்கு உள்ளானாய் ..?

இச்சைக்கு ஆசை காட்டும்
பேதயை வெறுக்காது
அழகெனப் புகழ் கிறாய்! - அவர்
காமத்தை சரியென்கிறாய்?

காமத்தில் வீச்சுக்குள்
விழுகின்ற விட்டில்கள்,
வெளிச்சத்தின் தூது கொண்டு - அந்த
லாம்புக்குக்கும் பங்கங்குண்டு!

வீசுகின்ற வேகத்தில்,
விளையாட்டு வேடத்தில்,
விடியாத இரவானது! - விட்டில்
விலைபேசும் உறவானது!

விலைபேசும் விட்டில்கள்
விழைகின்ற போதெல்லாம்
விருந்தாக லாம்பான்தேன்? - அது
லாம்பிடம் சொலலாததேன்?

வெஞ்சுடரின் தீ
விதையான சாம்பல் தான் !
நல்லவற்றைப் புரியாதவள்! - நான்
நன்மைகளைப் அறியாதவள்!
பாவத்தை விளங்காதவள்
கலைமகள் ஹிதாயா றிஸ்வி
Mohammed Kalaimahan தாத்தா உங்கள் கவிதையோடு நானு மிணைந்து...
--------------------------------

மனைவியை நீ மண்ணவியாக்காதே
மறைக்கு மவளின் மகிமைநீபார்!
மனைவிளக்கும் துணைவி அவளேதான்
மகிமைசேர் - மாண்பினைப்பார்நீ!

சதைத்துண்டத்திற் கலைகிறாய் காமாநீ
சகத்திலனைவரும் ஞமலி யென்பர்தினம்
நாதியற்று அவள்சென்றிட நிலைபார்உன்
நன்மை யவளிலே யுண்டு நீதெளி!

விட்டில்களி னுறவுக்கு ஏங்குகிறாய்
விரைத்துத் தணிந்ததும் உன்நிலையேது?
முட்டாள்தனம் நீநீங்கி அவளைச்சேர்
மிருகக் குணத்தை நீக்கிடு இன்றே!

உன்னிலைகண்டு இருளும்கூசுதுபார்
உறவினை விலக்கி உறவாடுகிறாய்நீ
தன்னிலை அறிந்து அவளைச் சேர்நீ
தரமான காதலன் நீயெனச் சொல்வா ளவள்!

-தமிழன்புடன் கலைமகன் பைரூஸ்....

கலைமகள் ஹிதாயா றிஸ்வி வாழ்க ...!

கவிஞன்
கதை சொலபவ னல்ல
கற்பனைத் தீயை
கலங்கரை விளக்காக்கி
சமுதாய இருட்டுக்கு
வெளிச்சமிடுபவன்

மானுட உறவுக்குள்
மறு பிறப்பெடுக்கும்
ஊத்தைகள்
கவிதைக் கரங்களால்
சலவை செய்யப் படுகிறதென்றால்

கவிதை
மரணிக்கவில்லை என்பது
அர்த்தம்

கலைமகள் ஹிதாயா றிஸ்வி
இலக்கிய உலகில்
நிறுத்திக் கொண்ட
ஆளுமைப் பங்கை
இங்கே
கவிதைகள் மூலம்

பிரசவத்தை
பிரசுரத்தின் மூலம்
செய்து காட்டிவருவது
இலக்கியத்துறையில்
அவள்
இறுகிக் கொண்ட இணைப்பை
இனங்காட்டி வைக்கிறது .

வாழ்வுச் சுவட்டை
அநுசரித்துபோன
சகோதரி ஹிதாயாவின்
அர்த்தமுள்ள
சிந்தனைக் கரங்கள்
அமாவாசைக் கருப்புக்கு
நிலவுகளை அழைத்து வந்து
நிறுத்தி விடுகிறது

கற்பனைகளின்
மெல்லிய சுவாசங்களால்
வாசகர்களுக்கு
தீனி போட்டுவருவது
பாண்டிய த்தை
விவாகரத்துச் செய்து விட்டு
படிக்கின்ற உள்ளங்களை
இலக்கிய பந்தலுக்குள் வைத்து
பழந் தமிழ்
தாலி கட்டுகிறது

இலக்கிய உலகில்
அறுவடை செய்கின்ற
கலைமகள் ஹிதாயாவின்
இலக்கியக் கனிகள்
ஒரு
நலிந்த சமூகத்தின்
அவலப் பசிக்கு
சோறு போடுமென்பது
என் கணிப்பு ...!

பாரதி கண்ட
புதுமைப் பெண்ணின்
நெஞ்சுறுதிச் சாயல்கள்
கவிதைத் தொழிலில்
புலப்படும் போது
இந்தச் சகோதரியாலும்
கலையுலகின் காவலனாய்
கணிக்கப் படுகிறாள்

பாவை இவளின்
பா -தொகுதி
முதன் முதலில்
முஸ்லீம் பெண் வரிசையில்
பெண் இனத்தின் வரிசையில்
இலக்கிய வரலாற்றில்
ஈ ழத்திற்கொரு
பெருமைக் கொடு

கலைக்காக
கலைமகள் ஹிதாயா
எழுது கோலைநிறுத்தியிருப்பது
சமுதாய ஏட்டில்
ஒரு
பற்றுக் கோட்டை
வரைந்து காட்டப்
பாடு பட்டிருக்கிறாள்
என்பது புலனாகின்றது !

இறுதியாக ,
கறுப்புச் சுவரின்
வெள்ளைச் சித்திரங்களாக
இவளின்
கலை வடிவங்கள்
ஆளுமை பெற்று
வாழ்ந்து வழி காட்ட
இதயப் பிரியமுடன்
பிரிய வாழ்த்துகள்....!

ஈழத்த பாவரசு
கரங்கள் இரண்டும் காதுகள் இரண்டும்
மாறி மாறி
பேசிக் கொண்டிருந்தது!

தொலை பேசியின்
தொல்லை சத்தம்...

நாவு
வரண்டு போய்
தாகம் தீர்க்க
நீர் தேடிக் கொண்டிருந்தது.

சூரியன் விடை பெற
மெல்லமாய்,
இரவு தடவும் நேரம் அது!

முற்றத்துப் படியில்
அவனும் அவளும்...

தாயின் தொப்புள்
கொடி உறவு போல்
தொட்டுக்கொண்டிருந்தனர்.

இருவரும் பேச ஆரம்பித்தது
இன்றாகவும் இருக்கலாம்.

சின்ன கொஞ்சல்கள்!
செல்ல கோபங்கள்!!
மெல்லிய வருடல்கள்!!!
இவைகளுக்கிடையில்
அவர்களின் பேச்சு
மூச்சு வாங்காமல்
சங்கிலித் தொடறாய்
நீண்டுகொண்டிருந்தது.

சேட்டுப் பையிலிருந்து
சட்டென்று ஒரு
நம்பரை எடுத்தான் அவன்!

தீடிரென்று
அழைத்துப் பேசினான்
அந்த அழைப்பு
ஒருவேளை அது
காதல் தொடர்பாய் இருக்குமோ?
யோசித்தாள் அவள்!

அவன் தூரத்தில் நின்று ..பேசினான்
அவளோ தள்ளி நின்று சிரித்தாள்!

காதல் பேச்சு அல்ல அது!
தொல்லைப் பேச்சு
தொலையும் பேச்சு

அம்மா காதலியோடு பேசிக்கொண்டு உள்ளேன்
கையோடு
அழைத்துக் கொண்டு வரவா என்று கேட்டான்

அதற்க்கு அவள் சொன்னாள்
நான் ஒரு குழந்தையின் தாய் என்று ...


அங்கங்கே மெல்லமாய்
சலிக்க ஆரபித்தாள்.

கடைசியில்
வரலாறு பேசி முடித்தான் அவன்...
அவளோ புன்னகைத்தாள்!

பேசியது எப்படியிருக்கு
என்றான் அவன்.

கொட்டும் மழை போ(ல்)லிருந்தது என்று
மனதார பாரட்டினாள் அவள்.

கதை பேசிய - இந்த
கை பேசிக்கு
ஆயிரம் ரூபாய் ரீலோட் போடலாம்
என்றாள் அவள்.

அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை!
என்
நண்பனின் கை பேசி
தன் கணவனின்
காணமல் போன தொ(ல்)லை பேசி
என்று..!
ஆழ்ந்த தூக்கம் ஒரு மரணம் என்பது உண்மைதான் -ஆனால்
மரணித்தவர்கள் எழும்ப முடியாது
தூங்கியவர்கள் எழும்ப முடியும் ..!
துயரமாய்
உன் -
கண்ணீர் துளிகள் ...
என் மனக் கன்னத்தோடு
வெள்ளமாய் கலந்து
இதய தூசை
அகற்றுகின்றது .... தோழி ...!
என்னிதயத்தை
மேலிருந்து
நீ -
காவல் காக்காதே தோழி

உனக்கான ,
என்னிதயத்துக்குள்
உன்னைத் தவிர
யாரும் வர முடியாது தோழி

அது
உன்னைத் தவிர யாருக்கும்
சொந்த்தமில்லை தோழி ...!