வியாழன், 8 நவம்பர், 2012

சகீ 
இதயப் பூவுக்கு மணமாக 
சுவாசப் பூமிக்கு நீராக
அன்புக்கு வேராக 
எனக்கு உயிராக வா
இதயம் எதையும் தாங்கும் பூமியாய் 
இருப்பதை 
மனிதர்கள்
உணர்வுகளால் அறியும் 
அதிசய இடம்.

இது
பொறுமையும்
பொக்கிஷம்

.போட்டி பொறாமை வஞ்சகம்
சூது வாது புறம்
எது வந்தாலும்
மங்கிப் போவதுமில்லை

எது நடந்தாலும்
சகித்துக் கொள்ளும்

வெறுப்பதுமில்லை,
.

இது ஓர் சூரியன்
அன்பான வெளிச்சமிருந்தால் போதும்
பசி பட்டாணி
துன்பம் துயரம்
கஷ்டம் நஷ்டம்
எது வேண்டுமானாலும்
தாங்கிக் கொள்ளும்

ஏன்
மண்ணிலிருந்து விண்ணைக் கூட
தொட்டு வரலாம்


இங்கு உங்களுக்கு
வரம் கொடுக்க
இடம்
தவம் கிடக்கின்றன.

இங்கு வரும்
எவரும்
அன்பை இழப்பதில்லை
வளர்க்கின்றார்கள்

இது இதயத்தின்
சேமிப்பு உண்டியல்
பாசம் உள்ளவர்கள் மட்டுமே
உறவை சேகரித்துக் கொள்ளுங்கள்

நிமதியை தடவிக் கொள்ள
உங்களுக்கு இது
தென்றல் காற்று .

இங்கு மட்டும்தான்
இதயம்
அன்புள்ளங்களைதேடி எடுக்கின்றது .
சகீ
கல்லுக்குள் ஈரம் கட்டாயம் இருக்கும்
அதே போல்
என் இதயத்துக்குள்
உன் நினைவு நிறைந்து இருக்கும்
 
நான் என்னை விட
உன்னை நினைப்பேன் ..

என் இதயத்தை விட உன் 
இதயத்தை விரும்புவேன்.
.
மூச்சை விட உன்னை சுவாசிப்பேன் . ..
காரணம் அதற்குள்ளே தானே
நிஜமானஉன் சுவாசம் ஒளிந்திருக்கிறது..

அந்த நிஜம் நீ தான் என்பது
கவிதை வரிகளில் எழுதினாலும்
வாசித்துப்புரிய முடியாத உண்மை..

புதன், 7 நவம்பர், 2012

உழைத்து உழைத்து நாமுந்தான் ஓட்டாய் தேய !
உளையாதார் ஊதித்தான் பெருக்கக் கண்டோம் !
இழைத் தே நாம் இடுப் பொடிய ! ஈ ரம் மில்லா ..
இதயத்தார் இருந்துறிஞ்சி "மேலே "சென்றார் !

முதுகினிலே ! கூ டையினை தாங்கி நாமும் !
முது கொடியக் கொழுந்தெடுத்துக் கொணர்ந்து சேர்ந்தோம்
புது வாழ்வு ! நாம் கண்டதில்லை !
புல்லர்கள் வாழ்வுக்கே ! உரமாகிப் போனோம் !

ஓட்டை'லயம் 'தானெமது உலகும் வாழ்வும் '
உழைப்புத் தான் உயிரெமக்கு !ஓய்வோ தூக்கம்
காட்டையெல்லாம் கழனிகளாய்ச் செய்தோம் எங்கள்
கனவுகளோ ! கண்ணீரில் கரையக் கண்டோம் !

மலையகத்து இலைகளுக்குப் பசுமை சேர்க்க !
மணி மணியாய் வியர்வையினை வடித்து தந்தோம்
நிலை மாறி எம் வாழ்வில் பசுமை பூத்து
நின்மதியாய் வாழும் நாள் எனறு பூ க்கும் !

வெள்ளி, 13 ஜூலை, 2012

என் தங்கையே ,
நீ என்னோடு பேசாத போது
மனதின் வலி கூட தெரியவில்லை

ஆனால் -நீ
நேற்று என்னோடு பேசிய போது
என்
இதயத்தின்
துடிப்பு கூட வலிக்கின்றது ..!
நம்பிக்கைகள்
சில நேரம் ஏமாற்றிவிட்டு
என்னை விட்டு நகர்கின்றது


நாம்
நம்வார்த்தைகளை

கொட்டிய பிறகுதான்

வேதனைகளை புரிந்து கொண்டு

நிதானமுடன் நடக்கிறோம்..!



சிலருக்கு

ஒரு சில நட்பு மேலாகப்படுகின்றது

உண்மையாய் நேசிப்பவர்கள்
கீழாகமதிக்கப் படுகிறது

எனக்கு இவைகளைப் பற்றி

கனவுகளும் இல்லை
நினைவுகளும் இல்லை
கவலைகளும் இல்லை
வேதனைகளும் இல்லை ...!