வியாழன், 8 நவம்பர், 2012

அன்பை நேசி, 
பாசம் புரியும் 

தோல்வியை நேசி, 
வெற்றி தெரியும்...

உழைப்பை நேசி,
உயர்வு தெரியும்...

இருளை நேசி
உதயம் தெரியும்

உன்னையே நீ நேசி,
உலகம் உனக்கு புரியும்.
மண்ணில் ஈரமிருந்தால்

அது--பல
வேர்களை உருவக்கும்


பூக்களில் வாசமிருந்தால்
அது பல
மனிதவுள்ளங்களை
சுவாசிக்கச் செய்யும்

மனிதனில்
உண்மை அன்பு இருந்தால்
அது பல
உள்ளங்களை உறவினறாக்கும்

சகி
உலகமே உன்னை நேசிக்காவிட்டாலும்
உன்னை
நேசிக்க இந்த உயிர் இருக்கின்றது
கவலைப்படாதே!

என்னை இப் பூமியில் எங்கும் தேடி அழையாதே
உன்
தொப்புள் கொடி உறவுக்கு -
உரிமை தந்த தாயாய் !
நானிருப்பேன்

பூவே நீ எப்போதும்
புன்னகைப் பூவாய் இதழ் விரிப்பாய்
அது
பகைவனைக் கூட சுவாசமாக்கும்
வாடி விடாதே
அது நண்பனைக் கூட சருகாக்கி விடும்
அதனால்
என்றும் செழிப்போடு இரு !

அழகை எதிர்ப்பாக்கும் இதயங்களிடம்
அன்பை காட்டாதே,
உன்னிடம் அன்பு வைக்கும் இதயத்திடம்
அழகை எதிர்ப்பார்க்காதே

உன் உயிரில்,
உன் உறவில்,
உன் மூக்கில்,
உன் நினைவில்,
உன் அன்பில்,
யார் யாரோ இருக்கலாம்...!
ஆனால் யாரும் இல்லாத போது
உனக்காக நான் மட்டும் தான் இருப்பேன்
உன்மையான -
உன் உயிர்த் தோழியாக
 
இதயத்தின்
நாடி நரம்புகளில் 
இது ஊற்றெடுக்கிறது!

உயிரின்இனிமையான 
உணர்வுத் துளிகளால்
இது பதியமாகிறது!

பாசம் விளையும்
மன நிலங்களில்
இது பூத்து சிரிக்கிறது!

அன்பெனும்
பாசநீர் உறிஞ்சி
இது வளந்து வாசம் வீசுகிறது !

கண்கள் காணாமல்
அன்பு முளைப்பதில்லை!
உதடுகள் பேசாமல்
உறவு நிலைப்பதில்லை

இதோ…
சுவாசம் சுமந்து வரும்
அன்பு(பூ )க்களில் தானே
நறுமணம் அதிகம் இருக்க்கும்
சகி 

உன் இதயத்தை 

நான் காயப் ப்படுத்தமாட்டேன் 

ஏன் தெரியமா

அதற்குள் இருப்பது

நான்
நீ வாழ்வதோ 
பெரும் கடலாய் 
நான் இருப்பதோ பரந்த பூமியாய்.....
என் கவிதையினை
யார் வேண்டுமானாலும்
வாசித்துப் பார்க்கலாம் 

ஆனால்
நீ மட்டுமே தான்
என்னிதத்தை
பூஜித்துப் பார்க்கமுடியும்