சனி, 17 நவம்பர், 2012

உலகமெங்கும் எங்களைப்போல் ஏழைகழுண்டோ .........................................................................................


வான் முகத்திலிருந்து கண்ணீர்சிந்தும் மழை துளிகள் 
வந்தெமது லயங்களுக்குள் வழிந்தோடும் 
சோகம் நிறைந்த காட்ச்சியினை காண வாரீர் 
உலகமெங்கும் எங்களைப்போல் ஏழைகழுண்டோ 

உடுக்களெனக் கூரையிலே பொத்தலுண்டு 
சூரிய ஒளி அவ் வழியில் பார்வை யிட 
ஒளி வீசும் கதிர் அங்கே நேரே பார்த்து
தரையதனை முத்தமிடக் காண்பீர் வின் மீன்

குடிசையின் அறைக்குள் தலையைப் போட்டு
தவிக்கின்ற நிலை தென்றற் காற்றிற் கில்லை
இனிமையானசுடர் தன்னை எந்த நாழும்
எம் வீட்டுக்குள் வீசினாலும் ஏற்ப்போம்

வான் முகத்திலிருந்து கண்ணீர்சிந்தும் மழை துளிகள்
வந்தெமது லயங்களுக்குள் வழிந்தோடும்
சோகம் நிறைந் காட்ச்சியினை காண வாரீர்
உலகமெங்கும் எங்களைப்போல் ஏழைகழுண்டோ

எங்களைப் போல் ஏழைகள் எவறுமில்லை
அல்லாஹ்விடம் கூட எமக் கேள்வி கணக்கில்லை
இங்கெமது ஓட்டை லயத்தின் இடத்தை பார்த்து
இருக்கிறனர் நண்பர்களும் எமக்குதவி யில்லை
உள்ளத்து உணர்வில் நட்பை வளர்த்தல் 
பார்ப்பவர்களுக்கு இல்லை தொல்லை
பகை என்பது புகைக்குச் சமன் 
நெருப்பாய் சுடும் மனம்
உள்ளத்துவானில் உதித்து வரும் உதயமாம் 
நல்லத்தை சொல்லும் வார்த்தை
பெரியவரை மதித்து கண்ணியமாய் வாழும் 
இதயம் கண்டு விழி
கற்கும் கல்வியது வாழ்கையின் சிறப்பு 
பொறுமையோடு கற்பது மகிழ்வு
நட்பினை மதிக்கும் மாபெரும் தளம் 
முக நூலின் நட்பு