ஞாயிறு, 6 ஜனவரி, 2013

மனம் நொந்து கண்ணீர் வடிகின்றது 
இதயம் துடிக்கின்றது 

உறவினர் முதல் ஊர்றவர் வரை 
பேரதிர்வு

மனம் சோர்ந்து போன
மாணவர் கூட்டம்

படித்து படித்துக் கொடுத்தே
மாணவர்களை முன்னேறச் செய்து இருபத்தாறு ஆண்டுகள்
கடந்து விட்டன

உயர் பட்டங்களும் பதவிகளும்
பெறப் பட்டு
குடும்பம் சந்தோசப் பட்டது தான் எத்தனையோ ...?

இதனால்மகிழ்ச்சியில் நிறைந்து போனது
மனசும் ஆசிரிய சேவைகளும் தான் ..

பழுத்த ஓலை இருக்க பச்சோலை விழுந்த கதை
வாழ்வில் மேடையேறியது

சோர்வற்ற உறுப்புக்கள்
சுவாசங்கள்
உயிர் மூச்சுககளையே அடைக்க
மரணமானது என் மைனி தான்

பாசம் நிலைக்கட்டுமே யென நினைத்திருக்க
உயிர் மறைந்தறக்கான காரணம் தான் என்ன ...?

பகட்டாணனவாழ்க்கை.......'
போலியான வார்த்தை .....
பொறாமையான உள்ளம் .....
கோபமான மனம், ......
வீணான பேச்சு ......
தீய செயல்கள் ......எதுவுமே இல்லை

அன்பான உள்ளம்
பாசமான உறவு
[பொறுமையான மனசு
நேர்மையான இதயம் எவ்வளவோ இருக்க
உயிர் உடலை விட்டுச் சென்றது

உறவின்றி உயிர் பிரிந்து
போன பின்னும்
நானிருந்து என்ன பயன் ...?
தேச ராஜ்யத்தின் 
அத்து மீறல்களும் 
ஆர்ப்பாட்டங்களும் 

ஏ ...!தோழனே 
எப்படியும் எதுவும் இருக்கட்டும் !
நாம்
தோளோடு தோள் சேர்வோம்
விரைந்தது வா !


புதிய தலை முறைகளின்
தலையீ டுகள்
புதுயுகம்செத்திட
அனுமதிக்க முடியாது

சாஸ்திரம் பார்க்கும்
சம்பிரதாயங்களில் தான்
இவர்களின் சரித்திரம்

காவிய அந்தசத்தைப் பெற
கல்லறைத் தேடும்
இவர்கள்
கோழைகள்!

நாங்கள்
கல் வெட்டுக் காலத்தின்
வாரிசுகள் அல்ல
நவுயுகத்தின்
புத்திரர்கள்

எங்களைப் பிரிப்பது
தடைகள் அல்ல

தலை முறைகளின்
போலிச்
சாக்கடைக்குள்
அவர்களே விழட்டும்


தோழனே
விரைந்தது வா ..!
நாம்
புது யுகம் படிப்போம் ...!
மரண வேதனையால் வரும் துயரமே 
அழும் நயனங்களால் உதிருமே கண்ணீர் 
பிரியும் உயிர் மரணம் நோக்க 
துடிப்பால் அழியும் உறவு
புது வருடம் போகும் வருடம் 
இவற்றுக்குள் இப்படி ஒரு நினைவு 
உடலை விட்டு உயிர் போகும் வரை 
துயரம் யாரை விட்டுப் போகும் ...?
மனமகிழ பிறந்த கவிகளின் சிறப்பால் 
கொடிய வேதனை எதுவும் இல்லையாம்
புண்ணிய உலகினிற் பயின்ற பாவினை 
நன்றியோடு நினைப்பது எமது கடமையே
அழுது கொண்டே 
மண்ணில் பிறக்கின்றோம் 
குறைகூறிக் கொண்டே
மண்ணில் வாழ்கிறோம் 
ஏமாற்றத்துடனே மரணிக்கின்றோம் 
நாம் எதையும் சாதிக்கவில்லை
தேடிய எதுவுமே கூட வருவதில்லை 
நல்ல அமல்களை தவிர ..
இன்ப வேதனை 
கண் முன்னே விரிந்த
கண்கள்
அவன் விழிக் குளத்தில்
நீர் முத்துக்களைக்
கோர்க்க ......

அவன் சொன்னான் :
கண்ணே கலங்காதே !
காலமெல்லாம்
உன் கண்கள்
கலங்காமற் பார்ப்பது
என் பொறுப்பு

காதல் கனிந்து
காவலானது
நனவாகாமற் போன
கனாக்களால்
அவன் விழிக் குளத்தில் ....
மீண்டும் உடைப்பு

அட்டச் சீ .....
அழு மூஞ்சிகளைக் கண்டாலே
பிடிக்காது எனக்கு
அவன் சொன்னான்