புதன், 26 ஜூன், 2013



"பொறாமைப் படுபவர்கள் தன்னைப்பற்றி சிந்திப்பதில்லை 

நல்லோர்கள் மனசை அவர் கள் புரிந்து நடப்பதுமில்லை "


மனித நேயம் செத்து விட்டது மண்ணில் -ஆனால் !

மனிதர்கள் வாழ்ந்து கொண்டு தான் உள்ளார்கள் உலகில் !!

அண்ணல் நபி பெருமானார்




மக்கத்து மண்ணில் பிறந்தே -நல்ல 
மார்கத்தை வளர்தனன் மனங்களிலே !
நேயமுடன் போதனை ஊற்றினான் -படு 
பாவிகளை அன்பினால் மாற்றினான் !

இஸ்லாத்தை உலகில் பரப்பினான் -கொடும்
அடிமைத் தளையினை உடைத்தெரிந்தான்!
கூலித் தொழிலை மதித்தான் -வீணே
உண்டு மகிழ்வோரைத் தடுத்தான் !

கெட்ட குணங்களை விரட்டினான் -அல்
குர் -ஆணை ஓதிக் காட்டினான் !
இவ்வுலகை :விதை நிலமென்றான் -மறுமை
அறுவடையின் மகிழ்வினை சொன்னான் !

பெண்ணின் அருமையினை விளக்கினான் -பூவையரை
வாடிடாது காத்திடக் கூரினான்!
மண்ணில் அவளொரு மாணிக்கம் -உயர்வாய்
மதித்து காத்திடக் கூ ரினான் மாந்தற்கு !

சாதி மத பேதங்களை வெறுத்தொதிக்கினான் -நீதி
நேர்மை நியாங்களையும் மதித்து நடந்தான் !
அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறிடாது வாழ்திட்டான் -மனித
மனங்களின் அன்பினை வென்றிட்டான் !

அண்ணலை மதித்து நடப்போமே -இனிய
அருள் கிடைக்கும் எமக்குமே !
அருள் மறை ஹதீஸ் இரண்டும் மனிதரிடமே -அமல்களின்
சுவர்க்கம் நரகம் அல்லாஹ் ஒருவனிடமே !



துயரத்தின் நெருப்பு அனலாய்பட்டுத் தெரிக்கும் மனசுகளில் 
மௌனம் -
தலை விரித்து கோலமிடும் !
கோலமாடும் !!
கோலம்போடும் !!!

உள்ளத்தின் உணர்வுகள்
ஆசைகள்
எதிர்பார்ப்புக்கள்

நிம்மதியை
சந்தோசத்தை
அமைதியை
நொறுக்கி வீசியபடி

மனக் கஷ்டத்தால்
துயரச் சுமைகளால்
வேதனைத் தழும்புகளால்
இதய விழிகளினால்
அழுது தீர்க்கும்
வடித்துக் கொட்டும் !

நிலையற்ற உலகில்
நிச்சயமற்ற வாழ்வில்
எதிகாலம் -
கேள்விகளாய் தொடரும்
விடையற்றுப் போகும் !

அமைதியும் நிம்மதியும்
காணாமல் போய்விட்டதால்

வாழ்வே -
அகதியானதால்
முகாம்களின் வரவேற்பு
கண்ணீரை தணலாக்கும்
தணலை குருதியாக்கும் !!

அப்பாவி முகங்கள் (வயிறுகள் )
வறுமை கொடுரத்தால்
ஊமையாகிப் போகும் !

பிரயோசனமற்ற வாழ்வை
முதலாளித்துவம்
விரும்மி நேசிக்கும்
ரசித்து மகிழும் !

சமூக அரங்கில்
அகதிகள் தினம்
போற்றப் படுபவர்களால்
நினைவு படுத்தப்படும்

சுரண்டி வாழும்
மனம் -
ரசித்துச் சுவைக்கும்

அட்டை இதயங்களால்
உயிர் குருதி -
உறிஞ்சிப் போகும்

வாழ்க்கையோ
சிவப்புச் சாற்றினால்
சிதறித் தெறிக்கும் !

சடலமான (சவமான )ஆத்மாக்களின்
உயிர்கள் -
இரங்கல் உரைகலாகும்
ரூபங்கள் பிம்பமாகும் !

நாய்
நரி
காகம்
பேய்
பிசாசு
கொசு
எறும்பு
இத்தியாதி
இத்தியாதி

இவைகளுக்கு
சடலங்கள் உணவுகளாகி !

சுதந்திரத்தை புதைத்தபடி
நிம்மதி தொடர்வதாய்
வானலைகள் -
போலிக் கீதம் பாடும்
செய்தி சொல்லும் !

அகதி மனிதம் -
நிவாரணப் பொட்டலங்களின்றி
மாறும் வரை
இங்கே -
அகதிகள் தினம்
மன ரணங்களால் பதிவாகும்

வேதனைகள் -
சோக கீதங்களாய் ஒலிக்கும்!

தரித்ததிரம்
சரித்திரம் சொல்லும் !

வறுமை பூமியில்
விதை நிலமாகும் !


சிந்தனையை உருவாக்கி ஏட்டில் 

கவி யெழுத உட்கார்ந்தேன் 

வீட்டில் உப்பில்லை புளியில்லை 

உணவுக்கு வழி காணத் துப்பில்லை 

என்றால் பெண்டா ட்டி !



மச்சான் என்றலறுகிறாள் மச்சி 

அவனோ லண்டனிலே வானான் 

எத்தனையோ கனவுகளை 

இதயத்திலே சுமந்த இவள் 

பித்தானால் வாழ்வு இணி வீணாய்



இதயத்தை பசுமையாக்கி உறவில் 

அன்பினைபெற காத்திருந்தேன் 

நட்பில் புரிவில்லை நம்பிக்கையில்லை 

தொடர்புக்கு பயன்பெற வசதியில்லை 

என்றால் தோழி !
!