வியாழன், 15 ஆகஸ்ட், 2013

உன் நினைவுகள்


என் கண்ணீரில் கரைந்து விடுமா

உனதான என் நினைவுகள் 

உன் புன்னகையில் மறைந்து விடுமா

எனதான உன்  நினைவுகள் 

இங்கு நான் வருந்தி என்ன பயன்.?

ஒடியே வந்திடுவேன் வெகு விரைவில்

மழலையாக உன் மடியில்..

மாறாத பாசம்  கொண்டு மார்போடு அணைத்திடு

மறந்திடும் அப்போது என் துயர் அனைத்தும்

எழுத்து வீரமும் எழும் கவிதைகளும் ...........................................




நேர்மையின் விலகல்கள் 
உண்மைகளை  மறைக்கும் 

போலி வேஷங்கள் 
நாசத்தின் கருவாகி 
நடை போடும் 

தொடர்பறுந்த
சுகங்களைத் தேடி 
மனித உயிர் 
மண்டையை பிளக்கும் 

வாக்குக்குகளை வாதமாக்கி 
உலகியல் 
ஞானம் புதைக்கும் 
எழுத்து வீரம் 
எளிதில் மறையும் 

நிறமாறுதலும் 
நெளிந்தகோஷங்களும் 
நேர்மை விளிம்பில் 
கருகிப் போக -
கவிதை பிறக்கும் !










பெண்கள் உலகின் கண்கள் .............!





 உலக முகத்திற்குக் 
கோடி கோடியாக்  கண்கள்!
இன்றேல் -
உலகம் விழித்திருக்க 
முடியாது  !
ஒளி பிறந்திருக்க முடியாது !

பெண்கள் என்னும்
இந்தக் கண்கள் இன்றேல் 
பூமி கூட 
ஒரு -
 அக்கினிப் பிழம்பாயிருக்கும்

மரம்



கனி தரு மரமெல்லாம் 
வண்ண நிறங்களில் 
"பல்ப் "பழங்கள் 
தொங்கும் 
பள்ளி முகப்பெல்லாம் 
விஞ்ஞான  வீறாப்பில்  
வர்ண ஜாலங்கள் 
கண்ணா மூச்சி விளையாடும் 

அழுது  வடிந்த
தெரு விளக்கெல்லாம் 
அங்கம் அங்கமாய் 
விமர்சிக்கும் 

அலங்கார மேடையில் 
மௌலவியின் குரல்
 "லௌட்ஸ் பீக்கரில் "
முகாரி பாடும் 

சிதறிப் பரந்த 
ஒளி வெள்ளத்தை 
மக்கள் வெள்ளம் 
இருட்டடிப்புச்செய்யும் 

பாலியற் பேதம் 
மறந்து அங்கே 
பாரதி கண்ட 
"சமத்துவம் நிலவும் !

நாளைய கந்தூரிப் 
"பொரியலின் "    வாசம் 
நாசியை 
மெல்லத் துளைக்கும் 

பட்டானி வயிறுகளின் 
நாவில் ஊறும் எச்சில் 
நாளைய கனவுகளை 
விரிக்கும்!    


தேசம்




காலை பொழுதெல்லாம் 
கறுத்துப் போனதாகவே 
விழித்துக்கொள்ளும் 
 தேசமிது 

தேசத்தின் தேகமெல்லாம் 
இப்போது -
விலையெற்றத்தின் கொடுமை 

வறுமை இங்கேயே 
அகதி முகாம்களில் இருந்து கொள்வதாக 
அடம் பிடிக்கிறது 

செத்துப் போக முன்னரே 
காப்பாற்றப் பட வேண்டும் 
பெண் புறாக்கள் 
வேட்டையாடப் படும் 
விந்தை 
இங்கே விசித்திரமல்ல 

மண்ணின் புழுதிகளை விட இங்கு -
மனிதப் புழுதிகளே 
அதிகம் - 
தேசத்தின் போக்கை 
இப்படியே விட்டால் வறுமையால்
 இறப்பவர்களால் 
ஒரு -
இமய மலையையே 
இங்கே உருவாக்க முடியும் !

உத்தமி



தோழி யென்றொரு அன்பு மலர் .இந்த
அவனியில் உதித்த பாசமலர் .!
என்னை நேசித்த இனிய மலர் ..ஒரு
இன்னலும் அணுகா (து)காக்கும் மலர் ..!

நண்பியாய் என்னை 'பெற்ற'மலர் ..எனை
துயரின்றி காக்கும் மலர் !
எத்தனையோ உறவைப் பெற்ற மலர் ..அவள்
என்றும் என்னுள்வாழும் பாசமலர் !

புன்னகை பூத்த புதிய மலர் ..ஒரு
புனிதமான கற்பு மலர் !
உண்மை நேசம் கொள்ளுமலர் ...ஒரு
உத்தமி யான பெண்மைமலர்

உலகியல் ஞானம்





நேர்மையின் விலகல்கள்
உண்மைகளை  மறைக்கும்

போலி வேஷங்கள்   
நாசத்தின் கருவாகி
நடைபோடும்

தொடர்பறுந்த
சுகங்களைத் தேடி
மனித உயிர்
மண்டையைப் பிளக்கும் 

வாக்குகளை வாதமாக்கி
உலகியல்
 ஞானம்  புதைக்கும்.

எழுத்து  வீரம்
எளிதில்  மறையும் 

நிறமாறுதலும்
நெளிந்த  கோஷங்களும்
நேர்மைப்  பிளமபில்
கருகிப் போக
கவிதை  பிறக்கும் ..!