ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

உண்மையான நட்பு



ஒரு உண்மையான நட்புக்கு இதயமாக இரு ...!
துரோகமாய் வாழ்ந்து (மாறி )விடாதே ...!

தாங்க முடியாத சுமைகளோடு ...!



சுவாசித்து தொலைத்த
மூச்சுக்களும் 

நரைத்துப் போன 
வாழ்க்கையின் முடிகளும் 
ஒருபுறம் நகர்ந்து கொண்டிருந்தாலும்

வாழ்க்கை
அதன் போக்கில்
போய்க் கொண்டுதானிருக்கிறது

தாங்க முடியாத
சுமைகளோடு ...!

சனி, 24 ஆகஸ்ட், 2013

தன்னுரிமையை காப்போம் ..!



நம்மில் ...
நம்பிக்கையற்றவர்கள் 
ஏமாற்றக்காரர்கள் 
உள்ளவரையில் 
எம்முரிமை 
கேள்விக் குறிகளாகவே 
கணிப்பிடப்பட்டுக் கொண்டிருக்கும் .

தேர்தல் காலங்களில்
போலி வார்த்தைகளை
தேனாய்க் கொட்டும்
துரோகிகள் (பொய்யர்கள் )
எமக்குத் தேவையில்லை

மக்களுக்கு
பாசம் காட்டி
வேஷம் போடுவோருக்கு
தன்னுரிமையை வழங்கிடாது காப்போம் ..!

எங்களுக்கு
தொழில் வாய்ப்புக்களை
பெற்றுத் தருவதாக
வாக்கு உரிமைகளை
விட்டுச் சென்றவர்கள்
எங்களிடமிருநத
மன நிம்மதியினையும்
இழக்கச் செய்து விட்டனர் .

தான் தோன்றித்தனம் தான்

இவர்களின்
குள்ள நரிப் புத்திகளால்
மிதிக்கப்பட்ட
துவைக்கப்பட்ட
நம் சமூகம் இன்று
சுடர் விட்டு எரியும் பிரச்சினைத் தீயில்
சாம்பலாகிக் கொண்டிருக்கின்றது ..!

மத பேதம் எதுவுமின்றி
மான மரியாதையோடு
வாழ்ந்து கொண்டிருந்தசமூகமும்
சித்ரவதைகளுக்கு -
உள்ளாக்கப் பட்டுவிட்டன .

அராஜக அடக்கு முறை
அட்டகாசங்களினால்
தன மானம்
தலை குனியும் வேளைகளில்
வாயிருந்தும் ஊமையர்களாய் ...,
காதிருந்தும் செவிடர்களாய் ...
கண்ணிருந்தும் குருடர்களாய்
பணம்
பட்டம்
பதவிகளுக்காய் ..
முண்டமாய் மாறி நிற்கின்றன ..!

இதயங்களை இழந்து விட்டு
செல்வாக்கில்
வளம் வந்து கொண்டிருக்கும்
பச்சோந்திகள்
அரசியலில் உள்ளவரை
மண்ணில் வாழும் வரை
எங்கள் சமூகம்
என்றென்றும்
திசையறு கருவிய்ற கப்பலாகவே
பயணிக்கும் ..!

நட்பு



உள்ளத்தை உள்ளபடி காட்டும் 
கண்ணாடி -
உண்மை நட்பு !

புரியாத புதிர்



எழுத்துக்களைப் பார்க்கும்போது
புரியாத புதிராகிப் போகிறது

மனித வாழ்க்கை



மனித வாழ்க்கையொரு விசித்திரமான பயணம் ,
வழி கண்டு விழி

தமிழே வாழி



வள்ளுவன் இளங்கோ கம்பன் ,
வழி தனில் புலவர் கோடி !
தெள்ளிய கவிதை பாடி
தென்னச் சுவைக்க !நாமும் !
அள்ளியே ! பருகி இன்ப !
அருவியில் குளித்து நித்தம் 
தொல்லைகள் மறக்க வைக்கும்
சுந்த்தரத் தமிழே வாழி !


பாரதி உமறு ! நல்ல
இலந்தை பாரதி தாசன் ,போன்றோ
ஆரமாய்ச் சூடி யுன்னை
அழவிலா இன்பங் கண்டார்
சேர்ந்திடும் வறுமைத் துன்பம் !
சிதைவுறு வாழ்க்கை கண்டும்
சோர்ந்திடாது துன்னைப் பாடி
சுகம் பல கண்டாள் அம்மா !


வாழ்வினைத் துறந்தோர் கூட
வடிவுனைத் துறந்தா ரில்லை
தாழ்விலா நிலையி லிந்தத்
தரரணியோர் புகழ்ந்து போற்றும்
நீள் பழம் பெருமை யோடு
நித்தமும் வாழு மெங்கள் !
வீழ்வுறா மொழியே !என்றும்
வீறுடன் வாழ்க நீடே !