செவ்வாய், 22 ஜூலை, 2014



உயிர் வாழும் போதினிலே
ஆரோக்கியத்தை யாஅல்லாஹ் தந்திடுவாய்
ஊசி துளையாமல் உடலினை
வியாதியின்றி காத்திடுவாய் ..!

நோயற்ற வாழ்கையை
குறைவற்ற செல்வமாக்கிடுவாய்
அல்லாஹ்வே உன்னருளினை
தொழுகையில் தந்திடுவாய்!

அவதிப்படும் நோயாளிகளை
வேதனையில்லாது காத்திடுவாய்
நலம் பெரும் வழியினை
நிறைவாக காட்டிடுவாய்!

கலீமாவுடன் மறையும்
பாக்கியத்தை யாஅல்லாஹ் தந்திடுவாய்
உறுதியான ஈமானை
நிலையாக வைத்திடுவாய்!

சோதனையான வாழ்க்கையை
பொறுமையோடு தாங்கிடச்செய்வாய்
மனித நேயம் காத்திட
அருளினை கொடுத்திடுவாய்!

இறையருள் கட்டளைகளை
ஏற்று நடத்திடச் செய்வாய்
பாவம் செய்யும் மனதினை
தந்திடாது காத்திடுவாய்!


என்
தொழுகையால் ,
பிராத்தனைகளால்,
நல் அமல்களால்
அல்லாஹ்வின்
அருட் கொடைகளை
என்னால்
பெற முடியுமென்றால்
ஜன்னத்துல் பிர்தௌஸ்யெனும் சுவர்க்கத்தை
உறுதிப்படுத்தி தருமாறு
ஐந்து நேரத் தொழுகையிலும்
தூஆ செய்து கொள்வேன்.....!

வேறு எதையும்
உலகில் -நான்
எதிர் பார்த்து வாழப் போவதில்லை ..!

முத்தமிட்டு மகிழ்ந்த எண்ணிக்கை ...!



தொடரும் கடல் அலை போல்
நிறைகின்ற உறவு
இந்த மீனவர்களுடையது..!

கடலினுள் தோணி பயனிக்கையிலும்
சவலின் துணிவு
விசிறித்தரும் சிறகு
இயந்திரமொன்றின் பரிமாற்றம்

இவை,
மீன்களை பிடித்துக் குவித்த எண்ணிக்கையினும்
அலைகளை முத்தமிட்டு மகிழ்ந்த எண்ணிக்கை அதிகம்

பணங்களின் மதிப்பை விட
இதயங்களின் இழப்புக்கள் அதிகம்..!

பணம் ,பிணம்
இரண்டுமே சரித்திரமாகும்
தரித்திரம் ஒன்று இல்லாத வரையில்

இன்று காலையில் சிக்கிய
வலையில் சடலமொன்று
ஒரு உயிரை மாட்டிக் கொள்ள ,
தண்ணீருடன் தனனிறகை அடித்துக் கொன்டது
திமிங்கிலமொன்று ..!

இறக்கும் வரை கடத் தொழிலைநம்பியிருக்கும்
மீனவர்களின் முன்னால்
கடலோ இறை கொடுக்கும்
அருட் கொடையாய் தவமிருக்கின்றன !

வாழ்விலும் ,சாவிலும்
குறையாமல் தான் கொடுக்கின்றன
மனிதர்கள் தான்எதையும் நிறைவாக பார்ப்பதில்லை ..!


நட்பு ஓர் அழகிய கண்ணாடி 
அது
ஓர் அற்புதச் சித்திரக் கிண்ணம்!
ஆனால்
உடைந்து விட்டால் ஒட்டவே முடியாது


விட்டுக் கொடு
விருப்பம் நிறைவேறும்

மன்னிப்புக் கொடு
தவறு குறையும்

மனம் விட்டுப் பேசு
அன்பு பெருகும்


நீ
எதை எழுதினாலும்
அது
கவிதையாகத்தான் விளங்கும்

உன்
சிந்தனை .
எழுத்து
அன்பு
பாசம் எல்லாமே
பேசப்படுகின்றன முக நூலில்

நீயே
என் நட்புக்கு மூச்சாக
சுவாசிக்கும் போது .
சகீ
தடவிக் கொள்வாய் என்ற
உணர்வோடு தான்
தொட்டுச செல்கின்றது
தென்றல் கூட..!


நட்பு எனும் நந்தவனத்தில்
மலர்ந்திட்ட அன்பு
நித்தம் பூத்திடும் நின்மதியில்
நினைவின் அலையாலே
நிம்மதி தந்திடும் அது
நிஜத்தின் நிழலாகவே