ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014


நான் நானாக இருகின்றேன்
நீ
நீயாக இரு ..!

கவிதை நம் உயிர் மூச்சு
நல்மனதோடு யோசித்துப் பாரு
துன்பம் துய
ம் போக்க நீ வாழு
போட்டி பொறாமையின்றி எழுது

எழுதிடாதே நீ மனம் நொந்து
வேதனை நுகர்ந்திடுமது உன் மனது
இறைவனை நினைத்து கவிதை பாடு
வந்திடாது உனக் கொரு நாளும் கேடு..!

எப்படி படிக்க...


எப்படி சொல்வது
நாளை என்ன நடக்குமென்று
எதை எதை சந்திப்பது என்று ......?

எப்படி யோசிப்பது
யோசிப்பதெல்லாம் உண்மையாய்
நடக்கும் என்று.....?

கவிதையாவது எழுதியிருக்கலாம்
வாழ்க்கை என்பதன்
வரைவிலக்கணங்கள் எப்படி என்று .....?.

மரணம் ஒன்றே நிச்சய வாழ்வு
என நினைத்திருந்த என்னிடம் ....

வாழ்க்கை ஒரு புத்தகமென்று சொன்னால்
எப்படி படிக்க முடியும் ?
எனக்குத் தெரியாததைப்பற்றி ....

நொந்து வெந்து


துடி துடிக்கும் மீனாய்
நீரில்லாத நிலத்தை நோக்கி
என் உயிர் கொதித்து அலர்கின்றது

இறைவனின் சோதனையென வியாதிகள்
உடல் வலியெடுத்து

நாடி நரம்புகளில் ஊர்ந்து 
குருதியில் உறைந்து உருவத்தை மாற்றும்

இன்சுலினை உறிஞ்சி சுவாசிக்கும் மூச்சு

மெக்போமின் ,டானியல் சக்கரையின் சமநிலை கட்டுப்பாடு
நொந்து வெந்து வேதனை சுமக்கின்றன
உச்சி முதல் உள்ளன்க்கால் வரை

காச்சலாய் ...தலையிடியாய் ....
நடு நடங்கும் உறுப்புகளாய் ...
நாவுகள் வரண்டு அருவியாய் பாய்ந்தோடும் வியவைத் துளிகள்

மூச்சு வாங்கும் உணர்வுகளின் உறுப்புக்கள்
இருளாய் மாறியும் ... மங்களாய் தோன்றியும் ...
பார்வைகள் தூரப்பார்வையாய் தெளிவற்றுக் கிடக்கும்

சங்கிலித் தொடராய் மாற்றங்கள் தொடர ...
உடம்பில் ஒட்டிக்கிடக்கும் வலி

சாவடிக்கும் நோவு
சோதனை நிறைந்த விதி
பொறுமை சோதிக்கும் வியாதி
தன்னை தங்கவைக்கின்றது வைத்திய சாலைகளில்

வாழ்க்கயின் போலி பிறப்பு
வயிற்றில் கருவாகி , உருவாகி
மண்ணில் சங்கமமாகின்றது

மனதை தடவிய அவள் பாசம்
என்றும் என் சுவாச மூச்சு
இதயம் முக(ர்)ந்த அன்பு
உயிராய் தானே வாழும் ...!

மனம் - பணம் ...!

மனம்
கடலை விட
விசாலாமனது
பணம் -
பிணத்தை விட துருநாற்றமானது

துன்பத்தில்
வாழ்ந்தவனுக்கு 
வாழ்க்கையின் உயர்வு தெரியாது
மகிழ்வு தெரியாது

வசதியில்
வாழ்ந்தவனுக்கு
ஏற்றத் தாழ்வு தெரியாது
பசி கஷ்டம் தெரியாது

படைப்பெல்லாம் இறை படைப்பே
வித்தியாசம்
ஏழை -பணக்காரன்

பணக்கார வாழ்வில்
ஆரோக்கியமான சுகம் இருக்காது
ஏழைகள் வாழ்வில் கோடிப் 
பணமிருக்காது ...!

மறைத்து வைத்தாலும்
பச்சை கற்பூரம்
வாசம் வீசும் ..!

அதே போல்
உன் நினைவுகளை
ஆசைக் கனவுகளை
மனதில்
மூடி மறைத்தாலும்
(மறைத்துப் புதைத்தாலும் )
மரணம் தடவும் வரை
அது மாறாது மனதில் நிலைத்திருக்கும் ...!