திங்கள், 15 செப்டம்பர், 2014

எனக்குள் நானே..!



பெண்ணுக்கு சிறப்பு பொறுமை ...!
ஈரமாகும் மன மெல்லாம்
சிரிப்பு ....!
உன்னில் கண்டேன்
அந்த மதிப்பு ....!
இரட்டைத் தாயின்
ஒற்றைக் குழந்தை போல ....!
பொறாமையில்லா பொறுமையினை
உன்னில் கண்டேன்
அந்த மதிப்பு !
பெண்ணை தூற்றி வசை பாடும் உலகத்தில்
பொறுமையோடு
பெருமை தேடும்
ஒருத்தி நீ ....!
கவியாற்றலை
வரமாய் வாங்கி வந்த நீ
பொறாமை பிடித்தவர்கள் மத்தியில்
பொறுமையைவரமாய் பெற்றுக் கொண்டாய்.....!
சிந்தனை கிணற்றை தோண்டின்
மரியாதை ஊற்று உறைந்து போகுமோ?
மானம் மரியாதையாய்
நீ
இருந்தாலும்-வாழ்ந்தாலும்
போட்டி , பொறாமை , சூது , வாது இல்லாத
மனசு உன்னிடம்...!
உன் நட்பினை பின் தொடர
என் மனசோ ஏங்கித் தவிக்கும்....!
ஒரு நதியாய் பாய்ந்தோடுவாய்
பள்ளத்தை நோக்கும் வெள்ளமாய்
என்னைக் மூழ்கடிப்பாய் ....!
தாகம்மெடுக்கின்ற நேரத்தில்
வரட்சியாய் இருப்பாய் ....!
வரட் சியாய் இருக்கும் நேரத்தில்
குளிர்சியாய் இருப்பாய்.....!
உன் மௌனம்
வெளியேறிச் செல்ல காத்திருந்து
மனசு உருகித் தவிக்கையிலே
உன் சிந்தனைதுளிகளால்
ஒவ்வொரு நாளும்
நான்
குளிர்த்து கொண்டிருக்கின்றேன் .....!
மழைக்காலத்தில் துளிர்க்கும்
புல் பூண்டாய்
எனக்குள் நானே
மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழுகிறேன்.....!

வரமாய் தந்திடுவாய் ...!



போற்றிப் புகழப்பாடுகிறாய் - என்பதை
அல்லாஹ் நானறிவேன்
தொழுகை சுஜுதினில் – அல்லாஹ் 
மனமுருகியான் தூஆ செய்திடுவேன்....!

உன்னருள் சுரப்பினால் –  உலகம்
குளித்து சுத்தமாகிறது
பாவக்கறை அகற்றிடவோ - சுவாசத்தை
விட்டு அகன்றோடுகிறது.....!

துன்ப துயரங்களை – அகற்றி
உற்றெடுக்கும் ஸம்ஸம் கிணறோ 
உள்ளமெங்குமே – பரவி
இயற்ககைச்சுகம் தருவது 

அருள்மறை திருக்குர்ஆன் - ஓதி
கல்பு மகிழ்கிறது
நன்மை தான் சொறியுமது? – பரக்கத்
பொங்கி நிறைகிறது....!

பொறாமை மறைகிறது - பொறுமையோ
உள்ளத்தில் சேர்கிறது
சாதி வேற்றுமையகன்றே - என்னுளம்
நபிவழி வாழ்கிறது!

உன்றன் நிலையில்லா – வாழ்வில்
மறுமையின் பின்னலே
என்றன் கல்புக்கு - அல்லாஹ்வே
வரமாய் சுவர்க்கம்தந்திடுவாய் ....!


மறந்து விடாதே !
வளரும் கவிஞரை
வளர்த்து விடு....!
கருத்துப் போட்டு
கத்தரித்துவிடாதே....!
கலையுலகில் உனக்கெனப்
புகழ் பாடும் -
இன்னொரு கவிஞன்
இவனாகவும் இருக்கலாம்
மறந்து விடாதே .....!

யார் பறிப்பது .....?



கவிதை
எழுத்தாளர்களின் சிந்தனைத் துளி 
நான் வேர்
நீ -
ஈரமண்
நகர்த்தி நகர்த்தி ஆலமரமானேன் நான்!
.
பாக்கள் வடித்தால்
கவிதை பூக்கும்
உன் வதனத்து வரம்புகளில்
கவிதை
தேனாக இருந்தால்,
ஊரிஞ்சிக் கொண்டே இருப்பேன்
பூவாக இருந்தால்,
மணந்து கொண்டே இருப்பேன்
என்றது களை வண்டு .
கவிதைகள் பூப்பதை யார் பறிப்பது ?
பாக்களை நுகர்ந்த பின்
துன்ப துயரங்களை எழுதிக் கொண்டு
கால நேரத்தை கடத்தினால் கூட,
மனசு வலிக்கவில்லையே
வேதனை சுமந்தால்
பாரம் கூட பாக்களாய் வடிந்து விடுகிறது .
கவிதை
கருங்கல்லுக்குள்ளும்
ஈரமிருப்பதை காட்டி விடக் கூடியது ...!

அற்புதம்...!



சுவாசம்
மூச்சு
இரண்டையும் ஒன்றாக்கி விடுவது 
உயிர்
சொல்லப்படுகின்றது
இறை படைப்புகளுக்கு
உயிர்
கொடுக்கப்படுமென்று .
இறைவனின் அற்புதம்
சிறு துளியில்
உதயமாகின்றது
உலகில் மனித வரலாறு
வாழ்கை
அதில் -
எழுதிச் செல்லாத பல கவிதைகள்
ஒரு புத்தகம்
கவிஞன் எழுதுகிறான்
வாழ்க்கை நிலைக்கும் என்று
இறைவன் தடுக்கின்றான்
வாழ்க்கை நிலைக்காது என்று ..!

நீரில் ஒரு தாமரை..!



தாகம் தீர்(க்)கின்ற
சிவப்புத் துளி
நீரில் ஒரு தாமரை போல 
நோண்ட
நோண்ட
வளர்கிறது
மகிழ்கிறது
என் கரத்தின் நகம் 
உன் நிறை சுமை தான்
அதனால்
விண்ணைத் தொடாத மண்ணாய்
மண்ணைத் தொடாத விண்ணாய்
என்
நாட்டில் பொருட்களின் விலை வாசி
கோடி
கோடி
செல்வத்தை
தேடி
தேடித் தந்து
நாட்டின்
வருமானத்தை கூட்டிச் செல்லும்
கொழுந்து கூடைகள்
நீயென
கவிதைகள் பாடுகிறது
உறிஞ்சி துளைக்கும் அட்டைகளின் அக்கரமிப்பு
என்னை
தேனீ ராக மாற்றி,
உன்
வரண்ட நாவுகளுக்கு
சிவப்பைக் கொடுக்கலாம்
இனி -
குருதி துளிகளும்
தேயிலையாய் மாறலாம்.....!


தாய்மை அடைந்தும்
பலனும் இல்லை
பயனும் இல்லை 
பார்க்க 
கவனிக்க
யாருமில்லாமல்
போராட்டம் ...!