திங்கள், 2 டிசம்பர், 2013

கவி பாடினான்
தமிழ் மண்ணிலே தோன்றியே-நல்ல
பாவினை ஊட்டினான் மனங்களிலே
சுவையுடன் கவி பாடினான் -தமிழ்
உணர்வு யில்லாதோரைத் தூற்றினான் /தூண்டினான் /

ஆழமாய் கவிதைகளைப் படைத்தான் – கெட்ட
சாதி பேதங்களை மாற்றினான்
உழைத்து வாழப் பாடினான் -வீணே
சோம்பரியாய் கிடப்போரை விரட்டினான்

கெட்ட உள்ளங்களைச் சாடினான் -அதை
உயர்வாய் மதித்து போற்றினான்
பாவினிலே மெரு கேற்றினான் -தமிழ்
பற்றின் உயர் வினைக் கூட்டினான்

பெண்ணின் பெருமையை போற்றினான் -அவர்களை
மதித்து நின்று வாழ்த்தினான்
மண்ணின் மாணிக்கம் அவளென்று –என
பாடிப் புகழ்ந்து காட்டினான் மானிடர்க்கு

அடிமைத் தனத்தை சாடினான்
நாட்டின் நடப்புக்களையும் பாடினான்
சாவுக் கஞ்சாது எழுதினான் -மண்ணில்
மாறாப் புகழினை பெற்றிட்டான்

பாரதிக்கு பா வடிக்கவே -என்
சிந்தனை துளி உற்றெடுக்கும் வெள்ளமே
மண்ணில் பிறந்தவன் கவி மனங்களிலே -அந்த
மா கவி பாரதி விண்ணிலே ..

1 கருத்து:

 1. வணக்கம்
  கவிதையின் வரிகள் மிகச் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்.. இனி என் வருகை தொடரும் தங்கள் வலைப்பூ பக்கம்

  எனது வலைப்பூ முகவரி-http://2008rupan.wordpress.com.எனது பழைய வலைப்பூ.
  எனது புதிய வலைப்பூ முகவரி-http://tamilkkavitaikalcom.blogspot.com
  வாருங்கள் அன்புடன் என் பக்கம்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு