சனி, 14 ஜனவரி, 2012

மண்ணில் மரணிப்பது மெய் ,ஆனால்
மரணித்தும் மறவாது பேசப்படுவது ,
அவன் விட்டுச் செல்லும் நூல் ..!
விட்ட மூச்சுக்களாய்,
நீ -
என்னை
நினைத்து விடலாம் 1
ஆனால் -
நான்
சுவாசமாய் உன்னில்
மூச்செடுப்பதை உணராமல்
நீ ..!
நல்லவை நினைத்தால் கேட்டவை அகன்றிடும் ,
தூய மனசுடன் வாழு ..!
நட்பைப் பெற்றிடப் பொய்மை உரைக்காதே
உறவை தொலைக்காதே - உந்தன்
பாசத்தை இழக்காதே ..!
நட்பு சுவாசம் தரும் மூச்சு -உறவை
வளர்த்தல் அன்பெனக் கூறு ..!
நட்பினை உயிராய் பேணு -நீ
அன்பினை தூய்மையெனப் போற்று ..!
துன்பம் ,துயரம் கோபம் போக்கு ,
தன் நட்பென நோக்கு ..!
அன்பை மனதில் வளர்ப்பது சுலபம் ,
பிரிவை சுமப்பது கடினம் ...!
பிரிவு என்பது கால் தூசு ,
நட்பினை உயிராய் பாரு ...!
தேடிவரும் நட்பினை அணைத்துக் கொள்ளல் ,
பிரியாது காக்கும் உறவு ..!
நட்பும் உறவும் மண்ணில் கோடி-நீ
என்னிதயத்தை தடவும் தோழி ..!
இறக்கும்போது புரிவதில்லை துக்கம் -நட்பு
பிரியும்போது தொடர்வது துன்பம்..!
''துன்பம் நிறைந்தத தோழி ,-உன்
வேதனையொரு துசாய் -நினைத்து
இறைவழி நோக்கி நகர்வாய்'' !
நட்பை தொலைத்திட காரணம் தேடாதே
பாசத்தை பிரிக்காதே -உன்றன்
அன்பைத் தொலைக்காதே ...!
என் உள்ளம் குளிர உலா வந்த
என்ன்னுயிர்த் தோழியே !
இதயத்துனர்வில் நல் மனதில்
தூய உறவில் மகிழ்ந்து வாழ்க ...!
வளர்ப்போம் பாசயுறவை துன்பம் துயரம் களைத்தெறிவோம்,
வீசுவோம் நறுமணமாய் சுவாசக்காற்று சாதிவெறி தொலைய
காப்போம் தமிழுணர்வு கொண்டு கலை வளர்ப்பதற்கே
வாழ்வோம் ஒற்றுமையாய் நட்புக்கோர் இடம் கொடு
கவிக் கூயிலே .. கவிக் கூயிலே ,
எதை வைத்து எழுதினாய் ,
உள்ளத்தை வெளிப்படுத்தி எழுதினாயோ ..?
நல்லவராய் மனிதர் வாழ எழுது
நாட்டின் கொடுமை தீர எழுது!
பிடிவாத உள்ளங்கள் மாற எழுது!
எழுது...எழுது...எழுது.
உயிர் உள்ளவரை எழுது
மானிடம் மதித்திட எழுது..!
இதயங்கள் திருந்திட எழுது..!!
ஒரு மனிதன் , ஒரு இரத்தம், ஒரு உயிர் - இந்த உலகம்
ஒரு பூமி , ஒரு வானம் ,ஒருமையின் ஒறுமை தான்
இறைவனின் படைப்பு ......... .மனிதன் ...!,

உதிரங்களின் உதிர்வுகள் ....!


கொதித்தலரும் மனதில்
ஆறுதலான...;
குளிர்ந்த தடவல்கள்....!

நீ...,
மூட்டும் தீயில்
நான் -
பாதம் பாதிப்பாதா.....?
அல்லது -
பாதத்தைக் காப்பதா...?

பாலைவனப் பூமியில்
வரட்சியால் துடிக்கும்
நாவுகளின் -
தாகம்
எனதானது....!

புரிகிறதா தோழி
மனதின் துயரம்.....?
ஈழத்தின் அவஸ்த்தை -
போராட்டமாய்
உயிரின் ஊசலாட்டம்...!

இதோ -
எனது விருப்பம்
கடற் கரையின்
ஈர மணலை
கூட்டி....கூட்டி....
மண் வீடு கட்டி உடைக்கும்
சின்னக் குழந்தைகளின்
விளையாட்டுத் தானே
என் இதயத்தின் விருப்பு......!

யார் சொல்வார்....
பாச வெளிச்சம்
இருளாய் மாரிப்போனதேன்று...?

சுனாமியின் வரவு
தந்த -
உதவிகள் தானே;
உனதான உயர்வுகள்...!

எண்ணிப் பார்த்து விடலாம்
துட்டுக்களின் -
தொகைஎன்றால் -
இது....,
உதிரங்களின் உதிர்வுகளாயிற்றே....!

என்ன சொல்வதாய் ....
உத்தேசம்....?
யோசித்துக் கொண்டே இரு...!
கிடைக்கும் உனக்கு,
மன ஆறுதல்
அது தானடி
நொந்து சருகாகும்
இதய இழைகளின்
எதிர் பார்ப்பு.....?

தோழி.....!
இப்போ....
புரியுதா....உனக்கு....!

உன் நினைவுகள்!!!!.

விரக்தியாகிப் போன
மன வேதனைகளுடன்
காத்துக் கிடக்கிறேன்
காலமெல்லாம்!

உன நினைவுகள் நிழலாடும்
ஒவ்வொரு நிழல்களும்
தடவிச் செல்கிறது - ஆனால்
உன்னை நேசித்த நான் மட்டும் தான் இன்னும்
உனக்காக தவம் கிடக்கிறேன்!
.
இதயங்களின் உணர்வுகளோடு
சுவாசிக்கும் மூச்சுக்களாக
நகர்ந்து.....நகர்ந்து...செல்கிறது
உனது ஞாபகங்கள்
.
செழித்து மலர்வதற்கும்
மலர்ந்து வாடுவதற்கும்
இழையுதிர் மரமாகிப் போனதா
இந்த பரிசுத்த இதயம்!

தாகத்தால் நா வரண்டாலும்
உடலின் வியர்வைத் துளிகளால்
ஈர மாக்கும் இதயம்
மறக்க நினைத்தாலும்
மறவாது வாழும் இதயம்.

கல்லாகிப் போனாலும் - காதலை
குளிர வைக்கும் இதயம்
தினம் தினம்
கண் சிமிட்டல்களாய்
உன் நினைவுகள்!!!!.

குளிர்ந்த மலைகள் சிவப்பேறும்....!

முத்து,கருப்பன்,மூக்காயி - எங்கள்
முனியன்,வேலு,முருகாண்டி...!
கொத்திப் பிளந்தனர் மலையினையே
கூடை சுமந்தனர் முதுகினிலே......!

எறும்பு போலச் சோம்பாது - நிதம்
எந்திரம் போல உழைத்தனாராம்
கரும்பு,கதலி,கனி மரங்கள் - நல்ல
காய்கறி யாவும் விதைத்தனராம்

ஆணும் பெண்ணும் சமமாக - அங்கு
ஐக்கியமாக உழைத்தனாராம்
பாணும்,பருப்பும் பசிக்குண்ண - அவர்
பறந்து உழைத்து மெலிந்தனாராம்

கொட்டும் மழையும் குளிரும் பனியும் - நன்கு
கொளுத்தும் கொடிய வெய்யிலினிலும் ;
அட்டைகளிரத்தம் குடிக்கையிலும் - அவர்
அனுதின மோயா துழைத்தனராம்

ஓட்டை "லயத்தில்" உறங்கிடினும் - நிதம்
ஓயா துழைப்பில் இறங்கினாராம்
காட்டை அழித்துக் கழனிகளாய் - அவர்
கடிய உழைப்பால் மாற்றினராம்...!

உதிரம் தன்னைத் தேயிலைக்கே -
நல்ல உரமாய் இட்டு வளர்த்தனராம் !
மதுரமான தேனீரும் - அந்த
மாண்பினைக் கூறிச் சிவந்ததுவாம்...!

மாடாய் உழைத்து ஓடாகி - அந்த
மன்னர்க் கெல்லாம் தோய்ந்தனராம்
கேடாய் உழைப்பைத் திருடியவர் - நன்கு
கீர்த்தி பெற்று உயர்ந்தனராம்

இந்த -
கொடுமை நெருப்பைத் தாங்காது - அந்த
குளிர்ந்த மலைகள் சிவப்பேறி...!
திடமாய் வெடித்துத் தான் சிதறும் - ஈனத்
திருடர் வாழ்வை குடித்து வைக்கும்...!
 
நோயாகி மனவருந்தி வேதனையினைத் தேடிச்
செல்லாதே !
உறவாகும் நட்புள்ளங்கள் உனக்குண்டு..!
இதயம் இன்றேல் நட்புக்கள் இல்லை,
எழுந்திடும் அன்புத் தொல்லை ..!
அனலாய் கொதிக்கும்
கடற்கரை மண்ணில்
சிலந்திவலை பின்னலாய் பின்னிக்கிடக்கும்
அடம்பங்கொடியை பிடுங்கிபிடுங்கி
பழகிப்போய் விட்டது
மனசு ...!

இ ங்கே :
பயங்கரவெயிலில் வடியும்
வியர்வைத் துளிகளினுடே:
சோகமாய் _
வந்து போகும்
தாகமும் ..!
துயரமும் ....!!

தொல்லைகளின் _
வேதனைச் சுமைகள்
பாரமாய் வந்து குவிகையில்...

நிம்மதி மூச்சு தடைபடும்
சுவாசங்கள் ...:
சளித்தொல்லைகளாய் ..:
சனியன் தொல்லைகளாய் ..:

நாட்டின் நடப்புக்கள் இன்று
விலையேற்றத்தின் உயர்வினை
குறைத்துக் கூட்டும் ..!
கழித்துக் காட்டும் ..!!

தேர்தலில் _
வாக்குபறிக்க
போலி வார்த்தைகளை
செயலாய் காட்டும்
வீண் பேச்சுக்கள் ...!
போலி வார்த்தைகள் ...!!

ஏழைகளின் _
வேதனைச் சொற்களை
தூசுகளாய் தட் டிவிடும்
திமீர்பிடித்த மனசுகள் ...!
பணம் படைத்த இதயங்கள் ...!!

வறியவர்களின்
உரிமைகள் போட்ட
வாக்குக் கூட:
தெரியாமல் போய்விட்டது ..!
காணாமல் மாறிவிட்டது ..!!

ஏழைகளின் மனசுகள்
ஏங்கித் தவிக்கும் ..!
கூட்டில் அடைத்த பறவைகளாக ...!
திசையறு கருவியற்ற கப்பலாக ...!!

எதிர் பார்த்த கனவுகள்
ஏமாற்றங்களாகப் போனது ...!!
இதயப் பூவில் மணம்வீசாத நட்பு
உறவில் தொடரும் துர் நாற்றம் ...!
நட்பு மனதுக்கு ஆறுதல் சுகமாகும் '
தூய்மையாய் நேசித்துப் பழகு ...!
உன்னை நேசிக்கும் பாசமான உறவு ,
நட்பாய் நினைத்துப் பழகு ...!
காதலை உருவாக்கும் நட்பு உறவு ,
புனிதமாய் காத்து வாழு ..!
நட்பின் மீது நம்பிகையது வைத்தல்,
உரிமையாகும் உறவுக்குப் பரிசு ..!
பிரிவுகள் வருவதை தடுத்து நிருத்தல ,
உதயமாகும் உறவுக்கு வழி ...!
தேடி வரும் நோய்களை தடுத்துனிருத்துமாம்,
தலை காக்கும் தருமம் ...!
விட்டுக் கொடுத்து வாழும் நட்பு ,
தடவிக் காக்கும் உறவு ...!
எதிர் பார்த்து வருவோருக்கு கொடுத்துதவுதல் ,
குளிந்த மனதின் தர்மம்...!
நட்பு போல தொரு பாசம் எதுவுமில்லை ,
இதயம் கொடுக்கும் பரிசு ..!

ஒரு பெரு மூச்சில்விழும் காட்சிகள் !

விழிக் குளங்கள்
கண்ணீரை இறைக்கும் !

விசனமில்லாத
முகங்களுக்குள்
விஷமேறிய தோள்களாக
சில முகவரிகள் ....!

கிடைக்காத போதும்
கிடைத்த பொழுதும்
கேள்வியையே
வெளியிடும்
மூச்சுக்குள் ...!

பாலையும் நீரையும்
பகுத்தறிந்து
நோக்கும்
அன்னமும் இதுகண்டு
அலறித்துடிக்கிறது ..!

ஓ...,
அந்த இருளுக்கும்
வேலையில்லை
மனிதர் மனங்களில் தான்
குடி கொண்டது ..!

கொடுமையும்
கொடிய பார்வையும்
என்னில்படுவதனால்
என் விழிகள்
என்றுமே ......!