ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

மீட்டெடுப்போம் ..




துடித்து மடியும்
அப்பாவி உயிர்களை
காப்பாற்றும் பணியில்
தவமாயிருக்கும் 
ரஷ்யா நாட்டவரே ...

இந்த குழந்தைகளின்
பிரிவுத் துயரினைப் பார்த்து
போராட்ட தளத்திற்கு
விரைந்து வாருங்கள் !

அமெரிக்காவின் தோழமையுடன்
சகாவாசம் வைத்திருக்கும்
கொடூர வல்லரசுகளுக்கு
உயிரின் பெறுமதியை
செயல்களால் காட்டுவோம் ..!

சிரியா நாட்டில்
அங்கவீணர்களாயிருக்கும்
அப்பாவிமக்களை
காப்பாற்ற பிராத்திப்போம்

உயிர்களை கொலை செய்கின்ற
படு பாவிகளுக்கு
உணர்வுகளின் வலியினை
வேதனைகளாய் கொடுபோம் ..!

எங்கள் உறவுகளில்
இருக்கையை போட்டமர்ந்துள்ள
ஒட்டுண்ணி விரோதிகளை
அடித்துத் துரத்திடுவோம்

அப்பாவி உயிர்களிருந்து
குருதி நீரைப் பிழியும்
மனிதாபிமானமற்றவர்களே ...,

உயிருக்காய் போராடி
அவலக் குரலெழுப்பும்
அப்பாவி உயிர்களை மீட்டெடுப்போம் ..!

தலைக்கனம்பிடித்த மனித நேயமற்ற
தலைவர்களை -
ஆட்சியில்லாமல்
,வல்லரசுகளின் கைப்பிள்ளைகளாயிருக்கும்
துரோகிகளை
காப்பாற்றுவோம் ..!

வாழ்வதற்கும்
சாவுவதற்கும் ...வழி
காட்டிக் கொடுக்கும்
அக்கிரமக்காரர்களுக்கு .
இறைவனின் விலாசத்தினை
விசாலப் படுத்துவோம் ..!...

பணப் போர்வைகளிலுள்ள
பாவிகளுக்கு -
அடிமைச்சேவகம் புரியும்
கொலைகார நாடுகளை
விடுதலை செய்விப்போம் ...!

இஸ்லாமிய மண்ணின்
இனிய பிறப்புக்களே..., ...
அருள் மறை
அல் -குர்ஆனை ஓதி
அல்லாஹ்விடம் தூஆ கேளுங்கள் ..!

திருந்தாத உள்ளங்களினால்
துருப்பிடித்துபோன்
இரும்பு உள்ளங்களுக்கு
ஐந்து நேர அதான் ஓசை
ஆரோக்கியம் கொடுக்கட்டும் ..!

சிரியா நாட்டு
அகதிகளுக்கு -சவூதியாவது
குவைத்தாவது ...
கட்டாரவது ...
.ஈரான் -ஈராக்காவது ..
உதவிகள் செய்யட்டும்...!

மக்களை பிடிக்கும்
போட்டி பொறாமைகளுக்கும் ....
நய வஞ்சகததனத்திற்கும் .

இஸ்ராயிலின் பணிக்கு
அல்லாஹ் -
சுனாமியைக் கொடுக்கட்டும் ...!
அழிவைக் கொடுக்கட்டும்
நாசமாய்போகவைக்கட்டும் ..!

இனிமேலாவது -
இந்த -
தாய்யுள்ளங்களின்
பிறப்பின் வலி புரிந்தாவது
மானிட ஜெனமங்கள் திருந்த்ட்டும்..!
இதயங்கள் திறக்கட்டும் ...!!
நிலையற்ற வாழ்வினை உணரட்டும் ....!!!

புனிதம் மணக்கும் ஹஜ்




மண்ணாக வாழ்வில் முஸ்லிம்
மாந்தரைப் புனிதம் பண்ணும்
புண்ணியம் ஹஜு க்கு முண்டு
புரிந்தவர் கின்பம் உண்டு ..!

பாவத்தை யகற்றி நெஞ்சை
பா வென மாற்றும் ஹஜ்ஜை
தாபமாய் தரிசித் தோர்கள்
தரணியில் ஹாஜி யாவார்


இஸ்மாயில் நபி செய்த
இணையிலா தியாகந் தன்னை
புஸ்பமாய் மணக்கக் கண்டு
பூரிப்போர் ஹஜ்ஜில் தானே


சத்தியம் வாழ்வில் கண்டு
சந்ததி தழைக்கச் செய்து
நித்திய இன்பம் தந்து
நிலைப்பது ஹஜ் நன் நாளே

ஆடைகள் புதிதாய்ப் பூண்டு
அகத்தினில் மலர்ச்சி பூண்டு
வாழ்வோருக் கருளும் நெஞ்சை
வழங்கிடும் ஹஜ் நன் நாளே


ஸம்ஸம் தண்ணீர் மாற்றிப்
தவச் சுகம் தன்னில் நீந்தி
இம்சையே இல்லா வாழ்வில்
ஈ த்திடும் ஹஜ்ஜே வாழி 

என் வீட்டும் பூனை



ஒரு பூனை
அடுப்படிச் சாம்பலில்குட்டி போட்டு
கதறித் துடிப்பதாக
கனவு கண்டு 
நித்திரையினை தொலைத்தேன்
நிம்மைதியினை இழந்தேன் ...!

காக்கா கோழிகளின்
சங்கீத ராகம்
என் காதுகளை குடையவே
முற்றத்துப் பக்கம் பாதங்கள்
கோலம் வரைந்தன ..!
கண்ககள் நிஜங்களை
தேடி அழைந்தன ...1


என் ராக் கனவுகள் -
என்னை
ஏமாற்ற வில்லை
துரோகமிழைக்கவுமில்லை .!
சில முக நூல் உறவுகளைப் போல்

மன சந்தோஷத்தால் ...!
என் -
இதய மலர் சிரித்து கொட்டியது
அழகான குட்டிகளின்
பிறப்பினைக் கண்டு ...,
வருகையைக் கண்டு ....!


நீண்ட தொல்லைகளுக்குப்
பின் இன்று தான்
என் சுவாச மூச்சுக்கு
மன நிம்மதி கிடைத்தது


இரவு நேர இருளில்
அந்த உடுப்பு பெட்டிக்குள்
எலிகளின் அட்டகாசமா ....?
அல்லது
விளையாட்டு பொம்மைககளின் ?
குரலோசைகளா ..?.
அல்லது
உணர்வுகளின் சப்தங்களா ....?

உன் சுவாசம் பட்ட
வீட்டு சந்து பொந்துகளில்
மூலை முடுக்குக்குகளில்
சூரியனைக் கண்ட பனி போல
மாறத் தொடங்கியுள்ளன

உடம்பினைப் போர்த்திய
துண்டினைப் பார்த்து
உன் இதயம் -
அழுது வடித்தேன் ..?

அதனால் தான் போலும்
உன் உள்ளத்துக் கதவுகளை
அடிக்கடி மூடி
திறந்து எனக்குள் ,
உண்ணாவிரதம்செய்தனவோ ..?
ஹர்த்தால் ஆர்ப்பாட்டம் புரிந்தனவோ ?

என் ஜீவன் -
எலி ,பல்லி ,கரப்பத்தான் .....,
நுலும்பு கொசு ,எறும்பு
எதுவுமே அற்ற
படுக்கையில் மன நிம்மதி நாடி
உறங்க அழைந்தேன்

உன் குட்டிகளை கண்ட
சின்ன எலிகலெல்லாம்
உன்னைப் போலவே
மரம் விட்டு மரம் தாவும்
மந்திகளைப் போலவே
இடம்மாறி தடம் மாறிப் போயின
நிலை மாறி ..!


சில கனவுகள் பலிக்கும்
நினைவுகள் நிறைவேறும்
என்ற நம்பிக்கைகள்
எனக்குள் வாழ்கின்றன
என் எதிர் பார்ப்புகளின் இலட்சசியங்களில்
ஆரம்பமாகும்
திசைகாட்டும் கப்பலைப் போல் ..!
என் வீட்டும் பூனைகளும் ...!

ஏனம்மா ?



இயற்கை அழகு உனக் கிருந்தால்
செயற்கை மேக்கப் ஏனம்மா ?
மானின் விழிகள் உனக் கிருந்தால்
'மை 'யைப் பூசல் ஏனம்மா ?

இயற்கை கூந்தல் அழகிருக்கு
டிஸ்கோ வெட்டு ஏனம்மா ?
அன்ன நடையின் அழ கிருந்தால் 
அடியுயர் பாதணிகள் ஏனம்மா ?

பவளச் சொண்டு உனக்கிருந்தால்
பளிச்சிடும் சாயம் ஏனம்மா ?
அதிசய வாசனை உனக்கிருந்தால்
அத்தர் வாசனை ஏனம்மா ?

வழிகள் காண்போம் !



கூரையிலே ஆயரங்கண் !கொளுத்தும் வெயில்
குடியிருக்கும் உள் வீட்டில் ! மாரி க் காலம்
வாடையிலே உடலுறைந்து போகும் !எங்கள் 
வாழ்க்கையெலாம் துன்பமாய் மாறிப் போகும் !

பாயில்லை படுப்பதற்கு எழுந்து நாங்கள்!
பசியாற உண்பதற்கு உணவு மில்லை !
நோயில்லா வாழ்மெக்கு அமைய வில்லை
நொடிப் போதும் எமையின்பம் தழுவவில்லை!

கால்வயிற்றுக் கஞ்சிக்கும் கடும் போராட்டம்
கருணையிலா சமூகத்தில் நாமோர் கூட்டம்
ஏழ்மை நிலை தா னெமக்குத் தோழ ராகும் !
இம்மையிலே நமது இடம் நரகமாகும் !

பசி வரவே மாத்திரைகள் உண்போர் வாழும்
பாரினிலே வாழுகிறோம் !தனவந் தர்கள்
வசிக்கின்ற வீட்டினிலே நாயக ளுண்ணும்
வகையான உணவுகளும் எமக் கில்லை !

பெற்றெடுத்த செல்வரினைக் கல்வி என்னும்
பெருங் கடலில் நீந்தவைத்துக் கரையில் சேர்க்க
பற்றெமக்கு மிகவுண்டு !பணத் துடிப்பு
பகையாகிப் போனதனால் வீணில் வாழ்ந்தோம் !


இத்தரையில் எமைப்போன்ற மாந்தர் தம்மை
ஏன்படைத்தான் இறையவனும் ?உயிரைத் தந்து
நித்தமுமே துயரத்தில் ஆழ்த்தி விட்டு
நித்திரையா செய்கின்றான் நம்மை விட்டு ?


நித்திரையோ செய்யவில்லை நிமலன் விட்டு
நெறி யில்லா மாந்தர்கள் புரியும் சதியில்
இத்தரையில் கிடந்து நாம் உழ வர் எல்லாம்,
இனியுந் தான் மாறிடவே வழிகள் காண்போம் !

தீர்வு விரல்



பிணமாக நினைத்துப் போய்
பணமாகத்

திரும்பி வரும் 
மீனவரே ...!

உன் -
வெற்றுடம்பில்
எத்தனையெத்தனை
வேதனைக் கீறல்கள்
அத்தனையும் உன்
வறுமையின் கொடுகள் ..!

மீன்களைப் பிடிக்கும்
மடி வெடிப்புக்கள்
வலைகளின் துண்டுகளை
கிழித்து வீசுவதால்
ஏழை மனசுகள்
கண்ணீர் கசிவுகளை
தண்ணீராய் குடிக்கும்

வானத்து விளக்கு
நூ(ர்)ந்து மறையும்
நடு ஜாமத்தில் மனத்துயரமுடன்
வீட்டரசியின்
கைத்தொலை பேசியும்
தொல்லை தரும் ....,

அறுக்குளா வலை
கீறி வலை
மாயவலை
நெத்தலிவலை
இத்தியாதி இத்தியாதி!!

படகு இயந்திரத்தைவலைகளுடன் செலுத்த
சந்தோசம் நிறைந்து நடுக் கடலில்
நிதமும் மீன்
குஞ்சுகள் நிறையும் ,

சின்ன சின்ன
கனவு வலைகளைக்
கரை சேர்பதற்க்காக
கரங்களில் பொத்தியிருக்கும்
சின்ன நூல்களையும்
இராட்சத மீன்கள்
சில -
அரித்துச் செல்லும் ..!

மாலைச் சூரியனின் மறைவுடன்
கடலில் நுழைந்து
காலைச் சுடருடன்
கரைகள் திரும்பும்
களைப்பு உள்ளங்களின்
உழைப்புக்களை
பணக்கார கரங்கள்
அபகரித்துச் செல்ல
விலை பேசி குறை போடும் ..!

கண் இமைகள்
உரக்கக் கடலில்
சங்கமிக்கும் வேளை
வியாபாரம் செய்யும்
விவஸ்த்தையற்றவர்களுக்கு
மீனவரின் அவஸ்த்தையின் வலிகள்
புரிவதில்லை ...!

கசந்த அநுபவங்களினால்
நொந்த மனசுகளின்
நசிந்த-
வாழ்வுக் கரங்களின்
உரிமைகளை பெற ,
பிச்சை கேட்டு அழையும்
எம்பிமாரும் தம்பிமாரும்
இந்த தேர்தல் மூலம்
தீர்வு விரல் கொடுப்பார்களா ..?


வாழ்க்கை என்பது பொய்யடா
காற்று அடைத்த பையடா
வாழ்ந்து தான் என்ன பயன்டா
எல்லாமே மண்ணின் புதையல்டா


நெஞ்சம் வறண்டு நினைவொடுங்கி மெய்சோர்ந்து
கண்பஞ் சடைந்திருளும் காலம்வரை - என்கரங்கள்
ஓயா தெழுதும்பா உண்மை தழைத்திடவே
தோய்வாயல் லாவென் துணை

மனித ஆத்மாக்கள்




பரந்த பூமியில் வாழுகின்ற
மனித ஆத்மாக்கள் -
மரணத்தை நாடியே 
மண்ணில் வாழுகின்றன !

வயசுத் தரையில்
பதியமிட்ட -
வாழ்க்கைப் பூக்கள்
மரணத்தின் தென்றலிலே
வாசத்தை நூகரச் செய்கின்றன !

இயந்திர உலகில்
ஓயாத இரைச்சல்களாய்
ஓலமிடும் .....
கடல் அலைகள் முதல்

தண்ணீர்
காற்று
நெருப்பு
மழை
பசி
பட்டாணி
நோய்
இன்னும் ..இன்னுமாய்
உன்னை
நேசிக்கின்றன (ஆராதிக்கின்றன )

தூசாய் பறக்கும்
பணத் தாள்களும் ,
கவலைகளெதுவுமின்றி
கறுப்போடு மாறும் வெள்ளை முடிகளும்
வறுமை பாய் விரிக்கும்

கிராமத்து லயங்களின்
தொட்டில் பிடவைகளும்
இதயத்தில்
பல கவிதைகளுக்கு
கருகொடுக்கும் ...!

என்
கவி வரிகளும் ,
இன்னும் பல
நினைவுகளுயும் மரணத்தையே
ஞாபகப்படுத்திக் கொண்டுள்ளன ..!

உன் -
மண்ணறை நாடி
நேசிக்கும் இதயம்

என் -
வெள்ளைநிறப் பேனைத துண்டு
மிஸான் கட்டையில்
அடையாளம் காட்டி
அடக்கம் செய்வது போல ..!

படைத்த மா பெரியோனே .....

உண்மையாக நான்
இந்த மண்ணில்
நடமாடும் ஒரு பிணம் தான்

சொல்லப் போனால்
சொத்து
சுகம்
பட்டம்
பதவி
அந்தஸ்த்துகளுக்கு
சொந்தக் காரணல்ல
நான்...
உன் அளவற்ற அருட் கொடைகளுகளுக்குள்..!


உலக வாழ்வில்
பலநூறு மனங்கள்
பலவிதம் வாழ ....,
ஈமானிய கொள்கைகளை
அனுசரித்து நிற்கும்
இலட்சிய வித்து
நான் .

மனித வாழ்வில்
பிறப்பு -இறப்பினை
அறிமுகப்படுத்தியவனே .....,

இன்று -
எனது கவிதைகள்
மண்ணறை வாழ்க்கை பற்றியும்
எழுதிக் கொள்ளும் .,


நீ -
கடைபிடிக்கச் சொன்ன
நடைமுறைகள்
என் -
இதயத்தின் நாடி நரம்புகளில்
பதிந்துள்ளமையினால்

நீ -
மூச்க்சுக்களாய் தந்துள்ள
இயற்க்கை சுவாசங்களால்
என் -
ஆத்மாவின் உணர்வுகளுக்கு
ஈமானிய உயிப்பினைக் கொடுக்கின்றேன்

புகழ் அனைத்துக்கும் சொந்தக் காரனே ..!

இந்த -
புரியாத மனிதர்களுக்கும்
உயிரை மதிக்காத ஜென்மங்களுக்கும்
வாழ்க்கை பயணத்தில்
நேரான வழியைக் கொடு ..!

என் -
கவிதை வரிகளுக்கு
விமோசனம் காட்டி விடு !

எல்லா மனிதர்களும்
சிந்திக்கட்டும் -இந்த
உற்றெடுக்கும்
கவிதை வரிகளினால்

என்-
உள்ளத்து உணர்வுகளுக்குள்
ஜீவித கரங்களுக்குள்
பிண்ணப்பட்டிருக்கும்- இந்த
முடி தூரிகையினை
முஹம்மது நபியின் போதனையாக
இறைவா நீயே
விளக்கம் கொடுத்து விடு ...!

அப்போது தான்....
சாதி மத வேறுபாடுககின் புற்றிலிருக்கும்
போலி பேச்சுக்களின்
வீண் விவாதங்களை நீக்கி ...
.
மனிதர்களை கெடுக்கும்
முட்டாள்களை விரட்டி

நிம்மதி வாழ்வினை
மண்ணில் நாடலாம் (வாழலாம் )

மண்ணறைக்கு நல்லவற்றை
கொண்டு போகலாம் ....!

பெண் பூவை வாழ விடு.....!




மண்ணோடு 
மண்ணாகிப் போகும் 
இந்த மனித நேயம் -
பயிர்களுக்கு
உரமாகத் துடிக்கின்றது ..!
காம வெறிபிடித்த குண்டு விதைகள்
பெண் பூக்களின்
உயிரிதழ்களைத் தேடுகிறது
இறை படைப்பில்
நிறம் மாறாத
குருதிக்குள்ளும்
ஏன் இத்துனை வேற்றுமைகள் ...?
மனிதனை
மனிதன் கொல்லும்
கொடுமைச் செயலை
எந்த தலைமைத்துவத்தின்
ஆட்சியில் -
முற்றுப் புள்ளி வைக்கப்போகிறார்கள்...?
மரணத்திற்கு அத்திவாரம்
கொலை .களவு .கற்பழிப்பு
துப்பாக்கிச் சப்தம்
இந்த கொடுரம்
எம் மண்ணில் எதற்கு ...?
பொறுமையாய் வாழும்
பெண்புறாக்கள் 
செத்துப் போகட்டுமென்றா .?
ஊமையாய் வடியும்
மனிதப் பிணங்களில்
வெள்ளைப் புறாக்கள்  நீந்தட்டும் மென்றா ...>
மண்ணோடு மண்ணாகும்
மனித நேயமே !
உன் நிழலிலாவது
பெண் பூவை வாழ விடு
சுத்தந்திரப் பூவை
மணக்க விடு ..!
சமாதனம் தேடும் இதயங்களாவது
மானத்தை காக்கும் பெண்களாவது -அதனை
முத்தமிடட்டும
எமது மூதாதையர்
மூளையுடன் நடந்திருந்தால்
எம் பெண்கள்
மானம் இழந்திருக்காது
எமது கால்கள்
இன்று
சருகு களாயிருக்காது
சிந்திய குருதிகளை
சேகரித்து -
கவிதையெழுதும்
எம்முயிருக்கும் -
என்ன உத்தரவாதம்
உணர்வுகள் வரண்டு
நிம்மதியின்றி வாழும
எமக்கு
என்ன 'நாமம '
தெரியுமா ?
காலத்தால் மாறாத
மனித நேயங்களின்
அகராதியில்
நாம்
'அகதி' என்று ...!
அல்லது
பிண மென்று ....!

புதன், 4 செப்டம்பர், 2013

ஏன் படைத்தான் இறைவனும் ....?



கூரையிலே ஆயரங்கண் !கொளுத்தும் வெயில்
குடியிருக்கும் உள் வீட்டில் ! மாரி க் காலம்
வாடையிலே உடலுறைந்து போகும் !எங்கள் 
வாழ்க்கையெலாம் துன்பமாய் மாறிப் போகும் !

பாயில்லை படுப்பதற்கு எழுந்து நாங்கள்!
பசியாற உண்பதற்கு உணவு மில்லை !
நோயில்லா வாழ்மெக்கு அமைய வில்லை
நொடிப் போதும் எமையின்பம் தழுவவில்லை!

கால்வயிற்றுக் கஞ்சிக்கும் கடும் போராட்டம்
கருணையிலா சமூகத்தில் நாமோர் கூட்டம்
ஏழ்மை நிலை தா னெமக்குத் தோழ ராகும் !
இம்மையிலே நமது இடம் நரகமாகும் !

பசி வரவே மாத்திரைகள் உண்போர் வாழும்
பாரினிலே வாழுகிறோம் !தனவந் தர்கள்
வசிக்கின்ற வீட்டினிலே நாயக ளுண்ணும்
வகையான உணவுகளும் எமக் கில்லை !

பெற்றெடுத்த செல்வரினைக் கல்வி என்னும்
பெருங் கடலில் நீந்தவைத்துக் கரையில் சேர்க்க
பற்றெமக்கு மிகவுண்டு !பணத் துடிப்பு
பகையாகிப் போனதனால் வீணில் வாழ்ந்தோம் !


இத்தரையில் எமைப்போன்ற மாந்தர் தம்மை
ஏன்படைத்தான் இறையவனும் ?உயிரைத் தந்து
நித்தமுமே துயரத்தில் ஆழ்த்தி விட்டு
நித்திரையா செய்கின்றான் நம்மை விட்டு ?


நித்திரையோ செய்யவில்லை நிமலன் விட்டு
நெறி யில்லா மாந்தர்கள் புரியும் சதியில்
இத்தரையில் கிடந்து நாம் உழ வர் எல்லாம்,
இனியுந் தான் மாறிடவே வழிகள் காண்போம் !

உண்மை ....!



பொறுமை வாழ்கையின் வெற்றி ...!
பொறாமை வாழ்கையின் தோல்வி ...!!


உங்கள் மனங்களில் என்னை நட்பாக வைத்துக் கொள்ளுங்கள்...!



என் அன்பை 
புரிந்து கொள்ள முடியாதென்று 
சொல்பவர்கள்
உங்கள் மனங்களில் 
இருந்து என்னை அகற்றி விடுங்கள்!

என்னைத் தெரியாது 
என்று சொல்பவர்களும்
உங்கள் மனங்களில் 
இருந்து என்னை நீக்கி விடுங்கள்!

என்னை நேசித்துப் பார்க்க
வெண்டும் என்ற
விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே
உங்கள் மனங்களில்
என்னை நட்பாக வைத்துக் கொள்ளுங்கள்...!

நட்பு



ஒரு உண்மையான நட்புக்கு இதயமாக இரு ...!
துரோகமாய் வாழ்ந்து (மாறி )விடாதே ...!

படைப்பு.....!




இறைவன் படைப்பதை மனிதன் பிறப்பிக்கின்றான் 
மனிதன் பிறப்பிப்பதை இறைவன் படைப்பிக்கின்றான்..! 


உயிரின் நாடி



எல்லையி(ல்)லாக் கல்வியெனும் ஒளியைப் பெற்று 
இவ்வுலக வாழ்க்கையிலே ! ஏற்றம் பெற்று 
தொல்லையி(ல்)லா திவ்வுலகில் துருவ மாகத் 
துலங்கிடவே தூய்மையொடு கல்வி கற்போம் !


குருட்டு நெறியால் மனதைக் குரூர மாக்கிக்
கொண்டிழிவு புரிவதனை அறவே நீக்கி !
புரட்சி யினால் இவ்வுலகில் புதுமை பூக்க
பொலிவோடு கல்வியினைத் துணையாய்க் கொள்வோம் .!


கடல் போன்ற சொத்தெல்லாம் அழிந்து போகும்.
காலமெலாம் சேர்த்த பணம் கரைந்து போகும்
உடலோடு உயிரொன்றி வாழு மட்டும்
உயர்வான கல்வியது இணைந்து வாழும் !

ஒன்று குலம் ஒரு ஜாதி ஒன்றே மக்கள்
ஒற்றுமை தான் வையத்தின் உயிரின் நாடி
என்ற நிலை யோடு தினம் இணைந்து வாழ !
இணையில்லாக் கல்விய தன் துணையே வேண்டும் !


இளமையது வாழ்க்கைய தன் வசந்த காலம்
இவ்வுலகின் பொறுப் பெல்லாம் மனிதர் கைக்கே !
தெளிவுடனே இளமையிலே கல்வி தன்னைத் ,
தேடிடுவோம் வையத்தை திருத்தம் செய்வோம் !

விட்டுச் சென்ற தாய்க்கு தொட்டுச் செல்லும் வரிகள்!




பத்து மாதம் சுமந்தே என்னைப் 
பரிவுடன் வளர்த்தவள் உம்மா !
இத் தரை தன்னில் இவளருந் தியாகம்
எழுந்தே தொட்டிடும் விண்ணை .!

கண்ணே !என்று இமையைப் போலே !
காத்திருப்பாள் இவள் நிதமே !
பொன்னே என்றும் பூவே என்றும்
பொலியும் அன்போர் விதமே !

ஈ யோடெறும்பு எதுவும் அணுகா (து )
இனிதாய் வளர்த்த உள்ளம் !
ஒளிரும்(தோயும் )அன்புச் சுடரால் என்னைத்
துலங்க வைத்தால் !உய்வோ,ம் !!

பள்ளிப் பாடம் சொல்லித் தந்தே !
பண்பாய் அனுப்பி விடுவாள் !
வெள்ளி பூத்தே விடியும் வானாய்
விளங்க அனைத்தும் இடுவாய் !

பட்டம் பெற்றே பதவிகள் பெற்றுப்
பாரினில் துலங்க வைத்தாள் !
தொட்டுப் பேசித் துணையாய் நிற்கும்
தூய உள்ளம் உம்மா !

உதிரம் தன்னைப் பாலாய் உதிர்த்து
ஊ ட்டி வளர்த்தவள் உம்மா
உள்ளத் துணர்வில் வாழும் இதயம்
இவளை மறவேன் மண்ணில்

மனித வாழ்க்கை




பகலுக்குள் இரவும
இரவுக்குள் பகலும் 
மறைந்து இருப்பது போல் தான் 
மனித வாழ்க்கையும் 

வாழ்வுக்குள் மரணமும்
மரணத்துக்குள் வாழ்வும் 
ஒழிந்து இருக்கின்றது..!

தாய் ...!



என் இதயத்தில் 
சுரப்பது கவிதை அல்ல
என்னுயிர் தாயாரின் 
குருதித் துளிகள்


என் நினைவு....!



கடற் கரை மணற் பரப்பில்
இரவின் இருளில் நிழலொழுகும்!
அலைகளின் இன்னிசையூடே
நிலாவை(நிழலை ) ரசித்திருப்பேன்!

மௌனமான இரவிலும்
என் இதயம் இறைவனை தரிசிக்கும்!
நல்லுள்ளங்களை தடவிக்
கொள்ளும் தென்றல் நான்!

உள்ளத்தின் பாச சுரப்பை
இந்த இரவில் பெருக்கினேன்..

காற்றின் தடவல்களை
தனிமையின் ஸ்பரிசத்தை
இயற்கையின் தழுவலை
வழிந்து நிறையும் மனதின் பரிவு!

வான் முழங்கும் மின்னல் ஒளியுறைவில்
கார் மேகங்களின் புற நீக்கல்
இதயங்களின் வளர்ச்சியும்
ஆழலின் மாறு தவிப்பும்..

நட்சத்திரங்களின் சிதறல்களில்
சுடரைக் காண்போர் எவருமில்லை

கடலை பார்க்கிறேன்
ஆண் அலையும் பெண் அலையுமாய் சீரி பாய்ந்து
என் முகம் கழுவிச் செல்லும்..
தடவிக் கொண்ட சுகத்தால்
சுவாசிக்கும் மூச்சுக்களாய் உணர்வுகள்!

என் இதயத்து லயங்களிலும்.........
நாடி நரம்புகளிலும்............


தென்றலூடே
ரத்தம் சுரக்கும் எலும்பிலும் மச்சைகளிலும்.....
சுற்றி தவழும் என் நினைவு....!

ஒன்றே ..!



கரையை தொடும் - அலை 

மரணத்தை தடவும் - உயிர் 

சுவாசமும் மூச்சும் ஒன்றே ..!

அலையும் கரையும் ஒன்றே ..!

மனசு....!



கல்லிலும் ஈரம் கசியும், 
மணல் உறிஞ்சிக் கொண்டு 
ஈரப்பதத்தோடு இருக்கும்.
ஆனால் -
சில மனசுகள் 
வரண்ட பாலை வனப் பூமியை விட 
கொடுரமாய் இருக்கும்
காய்ந்து போய் கிடக்கும் ..!

பார்த்திட வருவார் யாரு ?




ஏழைக்கு இல்லை இன்பம் 
இருப்பது யாவுந் துன்பம் 
கூழையே கண்டால் இன்பம் !
கொடுமை தான் வறுமைத் துன்பம் 
நாளையோர் விடிவை எண்ணி
நலமுடன் வாழ எண்ணும்
வாழை போல் ம்டியு மிந்தப்
மாந்தருக் கென்று இன்பம் .?

மாடென உழைத்தே ஈற்றில்
மனத் துயர் மட்டும் மிஞ்சும் !
பாடுகள் பட்டே பின்னால்
பலனது பூ (ஜ் )ஜியம் தான் !
மாடியை நிமிர்ந்து நோக்கும்
மனிதர்கள் இவர்க் ளாலே
மாடிகள் தன்னில் வாழ்வோர்
வதிகிறார் பணத்துக் குள்ளே !

குழு குளுப்பான இல்லம் !
குடித்திட "உயர் ரகங்கள் "
வழு வழுப்பான காரில்
வாழுவர் ,அவர்க்குச்சொர்க்கம்
அழுகையே காணும் ஏழை
அன்னவர்க் இது நரகம்
பழுவான வாழ்க்கைப் பேறு
பார்த்திட வருவார் யாரு ?