வெள்ளி, 30 டிசம்பர், 2011

மானிடப் பிறவி ..!


மகிமை மிக்கதோர் மானுடப் பிறவி
அணுவிலும் நுண்ணிய கருவினில் இருந்து
அன்னை வயிற்றிலும் அடக்கமாய் வளர்ந்து
பத்துத் திங்கள் பாரிலே பிறப்பாள்.!

இருண்ட சூழலை மாற்றிய பின்னே
ஒளி உலகத்தை உவப்புடன் பார்க்க
விழிகள் திறப்பான் விருப்புடன் கை கால்
ஆட்டி மகிழ்ந்து அகிலத்தை ரசிப்பான்

தத்தித் திரிந்து தளர்நடை பயின்று
பள்ளிப் பருவ வாசல் ஏறி
இளைஞனாகி என்றும் வளப்புடன்
உலக அரங்கில் நடிப்பினைத் தொடர்வான்

குருடனாய் ,செவிடனாய் ,குடிக்கு அடிமையாய்
அறிஞனாய் , கலைஞனாய் ஆயிரம் வேஷம்
எதோ ஒன்றை இட்டுக் கொள்வான்
எல்லாம் மனம் போல் இகத்தில் செய்வான்

முதுமை தோன்றுமே நரைகள் தாவுமே
பிள்ளையைப் பெற்றவன் பேரனைக் காண்பான்
போகப் போக நடை தளர்ந்திடுவான்
பூமியில் ஒரு நாள் உறுதியாய் இறப்பான் ..

கல்வித்தாய் அருள வேண்டும்...!துள்ளி வரும் வெள்ளமென கல்வித் தாயே!
தூயமனத் துள்ளறிவை அள்ளித் தாவேன்
கள்ளமில்லா என் நெஞ்சில் கல்வித் தாயே!
காதலுடன் கலந்துயுர்வு பெற்றுத்தாவேன் ...!

ஏற்றமுடன் நான் செய்யும் பணியை சிலபேர்
இயலாமையால் இகலும் நிலையைக் கண்டேன்.
தூற்றுபவர் தூற்றட்டும் தொடர்ந்து யானும்
தூய பணி புரிந்தவுடன் சுடரைத் தூவேன்...!

காலமெலாம் காசினிக்கு ஏற்றதாக
கனிவோடு பணி புரியக் கருணை செய்வாய்
சீல மோடு வாழ்ந்திங்கு தேவை மட்டும்
திருத்தமுடன் பணி புரிய அருளைத் தாவேன்...!

பொங்கி வரும் கல்விக்கு நிகரா யிந்தப்
பூதலத்தில் ஒரு செல்வம் வேறேதுண்டு
தங்க நிகர் கல்வித் தாய் அருள வேண்டும்...!
தரணியிலே தலை நிமிர்ந்து வாழவேண்டும்...!

அன்னை


பத்து மாதம் சுமந்தே என்னைப்
பரிவுடன் வளர்த்தவள் அன்னை
இத் தரை தன்னில் இவளரும் தியாகும்
எழுந்தே தொட்டிடும் விண்ணை !

கண்ணே !என்று இமையைப் போலவே
காத்திருப்பாள் இவள் நிதமே
பொன்னே என்றும் பூவே என்றும்
பொழியும் அன்போர் விதமே !

ஈயோடெறும்பு எதுவும் அணுகா(து )
இனிதாய்வளர்த்த உள்ளம்
தோயும் அன்புச் சுடராய் என்னைத்
துலங்க வைத்தாள் !உய்வோம் !

பள்ளிப் பாடம் சொலித் தந்தே
பண்பாய் அனுப்பி விடுவாள்
வெள்ளி பூத்தே விடியும் வானாய்
விளங்க அனைத்தும் விடுவாள் !

பட்டம் பெற்றே பதவிகள் பெற்றுப்
பாரினில் தூலங்க வைத்தாள்
தொட்டுப் பேசித் துணையாய் நிற்கும்
தூய உள்ளம் அன்னை !

உதிரம் தன்னைப் பாழாய் உதிர்த்து
ஊட்டிவளர்த்தவள் அன்னை
இதயத் தரையில் வாழும் உள்ளம்
இவளை மறவேன் மண்ணில் !
தோழி யென்றொரு அன்பு மலர் .இந்த
அவனியில் உதித்த பாசமலர் .!
என்னை நேசித்த இனிய மலர் ..ஒரு
இன்னலும் அணுகா (து)காக்கும் மலர் ..!

நண்பியாய் என்னை 'பெற்ற'மலர் ..எனை
துயரின்றி காக்கும் மலர் !
எத்தனையோ உறவைப் பெற்ற மலர் ..அவள்
என்றும் என்னுள்வாழும் பாசமலர் !

புன்னகை பூத்த புதிய மலர் ..ஒரு
புனிதமான கற்பு மலர் !
உண்மை நேசம் கொள்ளுமலர் ...ஒரு
உத்தமி யான பெண்மைமலர் !
துணைவன் வேண்டும்
சீதனம் எதுவு மில்லை
சீ ர்மைக்கு பஞ்ச மில்லை
ஆதனம் அதுவும் மில்லை
அழகினில் குறைச் சலில்லை
பேதையென்வாழ்வில் ஒன்றாய்
பிணைந்திட வரனும் இல்லை !

கல்வியும் கற்றேன் - நல்ல
கனிவினை உளத்தில் பெற்றேன்
சொல்லினில் தெளிவு கொண்டேன்
சுயநலம் துளியும் இல்லை
நல்லதோர் துணைவன் என்னை
நாடியே வரவும் இல்லை

குடிசை தான் வாழ்க்கை - ஆனால்
கோபுரம் என்றன் உள்ளம்
நடிகையாய் வாழ்வில் மாறும்
நரித்தனம் எதுவும் இல்லை
அடிமையாய் என்னை அன்பால்
ஆண்டிட ஆளன் வேண்டும்

அந்நிய நாட்டுக் கென்னை
அனுப்பியே உழைக்கத் தூண்டி
தின்றிடத் துடிக்கும் பேயர்
தேவையே இல்லை - ஆண்மை
தன்னகம் கொண்டு வாழும்
தகைமை சேர் துணைவன் வேண்டும்.....!


நினைவுகளை ஈரமாக்கும் நிகழ்வுகள்...கடந்து விட்ட
காலங்களை
எண்ணி வாழும்
இதயம்...

சமூகச் சந்தையில்
புரட்சி சப்தங்களின்
எதிரொலிகள்.....

நோட்டமிட்டு
நொடிப் பொழுதில்
ஏக்கங்களை
ஏய்க்கும் வாழ்வு....

இடையில் .....
ஏந்திழை என்
இலட்சியத்தின்
விடிவு நோக்கும்
விடாமுயற்சி.....

உலக சமாதானமும் இளைஞனும்விமான மொடு "ராக்கெட்" ஏறி
விண்ணகம் அளந்த போதும்
இமாலய முகத்தைத் தொட்டு
எளிதெனக் கண்ட போதும்
சமாதனம் என்ற காற்று
தரணியில் வீசும் வண்ணம்
அமைதியைப் பேணும் பண்பு
அகன்றிடில் இன்பமேது?

சாதியத் தகர்த்து மண்ணில்
சமத்துவம் தன்னைப் பேணி
நீதியை வளர்ந் துயர்த்தி
நிலத்திடை அமைதி கண்டு
சாதனை இதுவே என்று
சகலரும் ஓன்று பட்டு
வேதனை அறுந்து சாய
வினை செயல் ! இளைஞர்பங்கே!

வேர் அற மரங்கள் சாயும்
வீழ்ந்திடும் இலைகள் காயும்
நீர் இல்லாப் பயிர்கள் யாவும்
நிச்சயம் வாடிச் சாகும்
பார்தனில் வாழும் மக்கள்
பண்புடன் சேர்ந்து வாழும்
சீர்மை தான் மறந்து போகில்
செகந்தனில் அமைதி சாகும் !

பூமியை சுவர்க்க மாக்கி
பொலிவினை முகங்கள் தேக்கி
தமது ரத்து வெள்ளம்
திரட்சியாய் எங்குமோட
நா மெலாம் ஓன்று பட்டு
நற்சமா தானந் தன்னை
வாருடன் வளர்ப்ப தொன்றே
வழி யெனக் கண்டு சேர்வோம் !

இன மத வேறு பாடு
இழி வெனக் கண்டு ணர்ந்து
மனந் தனில் மனிதர் யாவும்
ஓர் குலம் என்ற எண்ணம்
கனிந்திடில் மோதல் யாவும்
கரைந்துமே அமைதி பூக்கும்
சினமது தீர்ந்து போனால்
செக மெலாம் செழிப்புத் தானே....?

அவர் மொழி அவரவர்க்கு
அன்னையின் வடிவமாகும்
எவர் மனத் துள்ளு மிந்த
எண்ணமே உறைய வேண்டும்
சுவர்தனைப் போட்டு வீணே
துயரினை வளர்த்தல் கூடா !
சுவர்க்கமே உண்டு பண்ண
துணிந்தெழு ! இனைஞ நீயும் !

சுதந்திரம் மானிடர்க்கு
சொந்தமாம் என்ற வுண்மை
நிரந்தரம் வாழு மாகில்
நிலத்திடை அமைதி பூக்கும்
இதமுடன் உலகு வாழும்
இளைஞகாள் ஓன்று கூடி
நிதமிதை வளர்த்து மண்ணில்
நிம்மதி காக்க வாரீர் !

( பதியதளாவளையில் நடைபெற்ற கலாசாரப் போட்டியில் சாய்ந்த மருது அல் - ஹிதாயத் இளைஞர் கழகத்தின் சார்பில் முதலிடம் பெற்ற பரிசுக் கவிதை.அம்பாறை மாவட்டத்திலுள்ள தேசிய இளைஞர் கழகங்களுக்கிடையில் நடைபெற்றது)
படித்தவர் ! படிப்பும் அன்னார் !
இதயமும் மகிழ்ந்திட வேண்டும்
பழுதிலா சேவை கள்
செய்து நாம் உயரவேண்டும் ..!

சிறிய மாணவ இதயங்களின்
பேற்றினை மதித்தல் வேண்டும்
புன்படா நிலையில் பண்பு
பொலிந்துற வாட வேண்டும் !

சத்தியம் எதுவென் றாய்ந்து
தானுணர்ந் தோதல் வேண்டும்
பைத்தியம் போலு ள ராது
பைந் தமிழ் ஊட்ட வேண்டும் ..!

போட்டிகள் கொண்டு !பொல்லாப்
பொறாமையை நீக்க நீண்டும்
நாட்டினில் மலர்ச்சி நல்கும்
நல் லிலக்கியங்கள் வேண்டும் .!

ஒற்றுமை வேண்டும் .!என்றும்
உண்மையே !வாழ்வில் வேண்டும்
கற்று நாம் தேர்ந்து இன்பக்
காவியம் பண்ணல் வேண்டும்!

மின்னலாய் மாணவகளைத் தாக்கி
மீதித்திடும் ஆசான்கள் மாறி
கன்னனால்கல்வி அறிவை
கனமுடன் ஊட்ட வேண்டும்

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

பிறரைத் தாழ்த்தித்தான் உயர்தல் பெரிதல்ல ,தன்னில்
பிழையது நீக்கின் விருட்சம் ..!
அல்லாஹ்வையன்றி வேரொவன் உலகில் இல்லை
தொழும் கடமையிலே சுவர்க்கம் பிர்தௌஸ் ..
சூரியனாய் ,
நீ ..
உதயமானால்

தோழி ,
நான் பகலாய்
ஒளியாவேன் ..!
அன்பு தான் உயிரென்று பாரு _பொறாமை
உள்ளத்தை புதைத்து நீக்கு ...!

உறவு

எனக்கும் உனக்கும்
உள்ள உறவு
தொப்புள் கொடியில் வெட்டப்பட்டதாக
நீ நினைக்கலாம்

நினைவுகள் எதுவாயினும் சரி
ரத்த உறவுகள்
புனிதமானவை....
பெறுமதியானவை....
பலமானவை உனக்கு
எனது பலநூறு
நட்புள்ளங்களை விட

பாசத்தினை சுவாசமாக்கிக் கொண்டே
மூச்சுக்களோடு
கலந்திருக்கும்
உணர்வுகள்
உடலுக்குள் குருதியாக பீச்சும்
உணர்ச்சிகளின் துடிப்பு உனக்கு புரியாதவை

உனக்கு உள்ளது போல்
நட்புள்ளங்கள் எனக்கும் உண்டு
ஏனெனில்
நான்
பெண்ணினத்தை சேர்ந்தவளாக
இருக்கிறேன்
பொறுமையின் சின்னமாக
வாழ்ந்து வருகிறேன்..

எனக்கும் உனக்குமிடையிலுள்ளது
ஒரே இரத்தத் துளியில் கலந்ததே!
என் உறவுக்கான
தொடர்பு அல்ல!
தொடர்புகளுக்கான
உறவுமல்ல!!
நீண்ட மூச்சுக்களாய்
பெருமூச்சு,
சுவாசம் _
ஏற்க மறுக்கும்
உடம்பு ..!

பார்வையின் புருவங்களாய்!!!

பாசம் தொலைந்து விட்டது
எம் உறவு
புழுதி கெழம்பிய மணலாய்- ஈரமிழந்து
வரண்ட நிலமாகிய பின்...

பார்க்கும் இடமெல்லாம் கவிவரிகள் போல்
நினைவுத் துளிகள்...
வாசித்தது நா மட்டுமல்ல!

எந்த நட்புக்கும் அடிமைப்படாத நீ
சந்தர்ப்பவாதியோடு இணைந்த காலங்கள்
அதுவும்
வேஷங்களோடு வேஷங்களாயிற்று!
(தீயோடு-தீயாயிற்று)

இன்று
மனசு துடிக்க துடிக்க உணர்விழந்து...
உறவிழந்து
உன்னை பிரித்து வைத்து மகிழ்ந்தவர்கள்,
மெளனித்துள்ளனர்,பொறாமைகளோடு!

உன் எழுத்தில்
உன் பேச்சில்
உன் அன்பின் ஆழம் கண்டு!

நாம்-
ஒவ்வொரு நிமிடமாய்
சுவாசித்து...சுவாசித்து-
மூச்சிடும் வேளை,

அதில் உன் உருவம் இல்லை!
இதயச் சுவடுகளின் ஞாபங்கள் நிறைந்து
மறக்க முடியாத உன்னை நினைவுபடுத்தி
உரிமையாக்கி விடுகின்றன...

நீ
கலக்கமில்லாத வெள்ளையுள்ளமாம் !
நீ-
இன்னுமின்னும் நேசிக்க விரும்பும் இதயத்துக்கு
பார்வை புருவமாய் !
பிரிக்க முடியாததாய !!

பிரிவை துயரங்களாக்கி வாடிய மனங்களோடு
நிம்மதியிழந்து இருந்தோம்.

"உறவுக்கு இனி தொடர்புயிருக்காதென"
ஆறுதல்படுத்திச் சென்றனர்,
உன் குழந்தைகள்..

நட்புகள் என்று தான் மாறும்....?
தூயவுள்ளங்களைத் தானே அது
தேடியலைகிறது....!

வாசம் சுமக்கும்!!

மனங்களில்
மலர்ச்சிப் பூக்கள்
விரியும் போது
மனசு மணக்கும்
வாசம் சுமக்கும்.

எதிர்பார்ப்புக்கள்
உள்ளச் சுவரில்
நிழலாடுகையில்
பின் தொடர்கின்ற
நினைவுகள்
நிழல்ளாகும்

நம்பிக்கை
தொலைக்கப்படும் போது
இதயம்
தீக்குள் சுடரினைத் தேடும்

உண்மைகள்
போலியாகிப் போகையில்
மனம்
பொன்னாடைகள்
போர்த்திக் கொள்ளும்

கவிதைகளை
விதைத்து விட்ட மண்ணில்
விமர்சகர்களின்
போலித் தூறல்கள்

புனிதம்
தீமைகளை புதைத்து விட்டு
நல்லவர்களுக்கு
வழிகாட்டுகிறது

இறைவா
இந்த சோதனையாளர்களுக்கு
நல்வழி காட்டு
மனங்களின் பிராத்தனை
துளிகளில்

பொறாமைகளை -
போட்டிகளை -
தாக்குதல்களை -
வளரவிடாது தடுப்பதை
எல்லாம் ஒன்று சேர்த்து
கழுவிக் கொள்ளட்டும்!
அல்லது சுத்தம் செய்யட்டும்!!
வாலிபத்தின் வருடலிலே
இருதயத்தின் இரத்தத்தை
உறிஞ்சிக் குடிக்கின்ற
உஷ்ன நினைவுகளே!
உங்களுக்கு
இரக்கமென்பதில்லையா?

இரவுகளிலெல்லாம்
என் விழிகள்
உறக்கத்தை ஒத்திவைத்துவிட்டு
தலையணையை
ஸ்நானஞ் செய்து கொண்டிருக்கிறதே!
ஓ..........
அழுவது,அவன் எனக்களித்த
ஆயுட் தண்டனையா....?
நான் ஏமாற்றத்தின்
ஆயுட் கைதியா...........?
"காதல்"
இந்த
அந்தரங்க முடிச்சுக்கள்
ஆத்மாவின்
அந்தங்களிலா போடப்படுகின்றன?
அவன்
கேட்டானே - அன்று
என்னை மறந்து விடு என்று
அவனுக்கு மட்டும்
எந்த அரங்கில்
இந்த முடிச்சுக்கள்...?

காதலினை
கெட்ட கனவு என்று
மறப்பதென்றால்
பூட்டி வைத்த ஆசைகளை
பொசுக்குவதா...?

என்
இதயச்சுவர்களிலே
எதிரொலிக்கும்
அவனின்
சில்லறைச் சிரிப்பொலிகள்
என் செவிகளை
இறுக மூடியும்
இன்னும்
செவிபட ஒலிக்கிறதே!

அன்றைய கனவுகளே!
அடிக்கடி
உங்கள் வருகையினால்
கண்கள்
பெருக்கிக்கொண்டிருப்பது
கண்ணீரல்ல - அவை
காதல் ரணங்களின் கருக்கள்!
வறுமையின் வாசல்கள்...!
வானத்தையும்
வட்ட நிலவையும்
வீட்டுக்குள் விட்டு வைக்கும்
விழிகள் திறந்த
எனது
வீட்டுக் கூரை!

சாக்குக் கட்டிலில்
சாவை எதிர் பார்த்து
சாய்ந்து கிடக்கும்
ஏகாந்த நிலையில்
எனது அப்பா!!

வறுமைக் கோடு
வரைந்த சித்திரத்தில்
படிக்க முடியாது
பள்ளிப் படிப்பை
பாதியில் நிறுத்திய
பரிதாபத்துக்குரிய
பதினாறு வயதுத் தங்கை!!

விளக்க மின்றி
வெடித்த துப்பாக்கியால்
செத்துப் போன
சுண்ணாம்புச் சுவரில்
சொருகப் பட்டிருக்கும்
எனது
அப்பாவிக் கணவனின்
புகைப்படம்!!

புட்டிப் பால் கேட்டு
தொந்தரவு படுத்தும்
ஒன்றும் மறியாத
இரண்டு வயதுக் குழந்தை!!!

வறுமையைப் புரியாது
வாசலில் நின்று
மணியடிக்கும்
ஐஸ் பழக்காரன்!!

எனது
இளமையை வேட்டையாட
வெளியே மேய்கின்ற
எச்சில் நாய்கள்!!

ஒரு வேளை மட்டும்
உணவுக்காக வேண்டி
போராட்டம் நடத்தி
அடுப்பை எரிக்கும்
சமயற் கட்டு!!

வேதனையைப் போக்க
வேலை தேடிய இடத்தில்
வெச்சிக்க "வா"என்று
வெறித்தனமாய் கேட்டான்
காமுகன் ,
அடிக்கடி வலிக்கும்
அந்த
கிழட்டு நரியின்
கீழ்த்தரமான வார்த்தை ...!..
படு மோசமான எண்ணம்.!!

நிம்மதி எப்போது..?

ஒப்பந்தத்திற்கு
முன்னே-உள்ளங்கள்
அழுத்து வடித்தன....!

பின்னே
நிம்மதி கிடைக்கும்
என்று எதிர்பார்த்திருந்தவர்கட்கு
எத்தனை ஏமாற்றம்....?

அமைதி காக்க வந்த
படையினர்....
வெறும் பாராங்கற்களாய் வீதியில்.....!

இன்னும்-இங்கே
உயிர்ப் பலிகள்!

தினமும்-
பத்திரிகைகள் சுமர்ந்து வரும்
படு பாதகச் செயல்களைத் தான்
விழிகள் வாங்கிக்கொள்கிறது!

நிம்மதி மூச்சைச் சுவாசிக்கும்
ஒரு நேரத்துக்காக
எத்தனை காலங்கலாகக்
காத்திருக்கிறோம்!
அது-
எப்போது நம்மை நாடி வருமா....?
அல்லது
தேடி வருமா ..?
கவிதை...
என் இதய ஊற்றில்
கசியும் துளிகள்

அன்பு
வரண்டு போய் கிடக்கும்
உள்ளத்து பாலைவனப் பூமியின் ,
ஊற்று ..!
அன்பைமட்டும்
அரவணைத்து மகிழும்
இவளது மனசு .!

நட்பு உள்ளங்களை வளர்க்கும்
அற்புத தோட்டம்,
இவளது மனசு ..!

பாசத்தை மட்டும்
மழையாய் பொழியும்
இவளது மனசு ..!

அன்பை விதைக்கும்
அற்புத வயல்
இவளது மனம் ..!

நல்லவர்கள் வாழும்
அழகிய இல்லறம்
இவளது
இனிய மனசு..!


அன்பு காட்டி
ஆதரவு காட்டும்
இவளது
நல்ல மனசு ..!

சாது மத பேதமின்றி
எல்லோரையும் மதிக்கும்
இவளது
தூய மனசு ..!

மொத்தத்தில்
என் ,
வாழ்க்கையில்
எங்குமே காணவில்லை
இவளைப் போல்
ஒருத்தி

அவளே இவள்
இவளே அவள் ...!

முற்றுப் பெறாத நிகழ்வு

துயர சுமக்க முடியாத மனசு
நொறுங்கி போகின்றன நினைவுகளால்..

பஞ்சுமெத்தையில் தலை சாய்த்தேன்
மின்னலாய் தோன்றி மறைந்தது கனவுகள்
நினைவுகளை -
இடிமுழக்கத்துக்குள் சமர்ப்பிக்கின்றேன்.
தென்றலோடு தென்றலாய் தடவுகிறேன்.

தொற்றிக் கொள்கின்ற சோதனைகள்
சாதிகளாய் -
விதிகளாய் -
மூச்சுக்களாய் -
சுவாசங்களாய் - மாறுகின்றன.

முற்றுப் பெறாத நிகழ்வு
மகிழ்ச்சிகளாய் மலராது.

தாகத்தின் தவிர்ப்பு
வரட்சியில் வடியும் வியர்வைகளோடு
கலந்திருக்கின்றன
சாஹாராப் பூமிக்குள் கசிந்திருக்கின்றது.

நாவெல்லாம் புலம்பல் நிறைந்த தாலாட்டு
சிந்திக்க வைக்கின்றது....
மேகங்கள் சூழப்பட்ட
கரு முகிலுக்குள் கலந்திருக்கிறேன்
புதைக்கப் பட்ட சடலமாய் சில சுமைகள் !

என் நினைவுகள்
நிழலாய் நிழலாடி
பட்டமரத்து கிளைகளினூடே
தென்றலாய் போகவே விரும்புகின்றேன்.

இல்லற வாழ்க்கையில் இனிமை சேரும் போது
வீட்டுக்குள் சந்தோஷம் வந்து நுழையும்

மனத்துயரத்தின் வேதனைத் தடவல்கள்
சுவாசக் காற்றோடு பறக்கின்றது......!

புதன், 21 டிசம்பர், 2011

என்
நாடி நரம்புகளில்
உன் நினைவு குருதி

நீ_
சுவாசிக்கும் மூச்சில்
நான் உயிர் வாழ்வதா ,,,?
அல்லது
உயிர் பிரிவதா ,,,?

விறகாய் எரிகின்ற
சாம்பல் நிலத்தில்
தவிக்கும் நாவின் வரட்சி எனதானது ..!

புரிகிறதா தோஸ்த்
பிறந்த மண்ணின் அவலம் .

சதா கால
வேதனையின் அவஸ்தையை
இதோ ..!
எனது சமூகம்
அப்பாவி உயிர்களை
உறிஞ்சி...உறிஞ்சி,,, சுவைக்கும்
இரத்த வெறி பிடித்த மானிடம் தானே ,,,?

என் உள்ளத்தில்
கொதித்தலறும் வேதனையை
யாரும் அறிவார் ,,,?
கலவரத் தீயின்
அகதிச் சாம்பலை ,,,?

யாழ் நகர்
பிறந்த மண் தானே ,,?
ஈரமான நினைவுகளை ,,,
தோன்றிப் பாக்கலாம்
மரத்தின் வெரென்றால்
இது
உடம்பின் உயிராச்சே,,,!
எங்கு போய்
எப்படி வாழ்வது ,,?
அகதியாகவே முகாமில் இருப்போம்
தேடி வரும் எமக்கு
நிவாரணம் ,,,!
அது தானே
பட்டனி கிடக்கும்
எம்மவரின் பசிக்கு கிடைக்கும்
பொட்டலம் ,,,!
தெரிகிறது ஏழைகளின் இதயம்!
கொதிக்கும் நீராய்த் தெரிகிறது!!

ஓட்டை விழுந்த லயத்தின் கூறை
இன்னும் ஒழுகிறதென்று
கண்ணீர் சொல்கின்றது
மழையும் பொலிகின்றது

விலை ஏற்றதை உயர்வடையச் செய்து!
ஏழை வயிறுகளை வாட்டிப் போடுகிறது அநீதி!
'இது அரசியலின் பஜெட் என்று விமர்சிக்கப்படுகிறது'

தாகத்தை தீர்த்துக் கொண்ட
தலைவர்களது நாவுகள்
கொழுந்து கிள்ளியவர்களின் நாமங்களை உச்சரிப்பதில்லை!

அநாதைகளின் வாழ்வு
பசி நிறைந்த தவிப்புக்களுடன்
உரிஞ்சப்படுகின்றது
அட்டைகளின்
நாவு ருசிக்கப்படுகிறது!!

மலையகத்தார் அழிந்து விடுவார்களோ என்று
முதலாளிமார்களின்
ஏக்கப் பெருமூச்சு உண்மையாகிறது!

எல்லாமே சோகக்கதைகளாகி
இலட்சியமே இல்லாத
இல்லற வாழ்வில்
இருட்டாகிக் கொண்டிருக்கிறது
இவளின் அவல வாழ்வு!
ஏழை வயிறுகளை வாட்டிப் போடுகிறது அநீதி!
'இது அரசியலின் பஜெட் என்று
பகலில் சுமையாய் இருக்கிறேன்
இரவில் பிணமாய் கிடக்கிறேன்
வேதனைகளும் சோதனைகளும்
என்னை தொடரும் பொழுது

பல வருடங்கள்
எனக்கான தன்மானத்தை
காப்பாற்றி வந்த பின்
சுகத்தை நீ தடவிக் கொள்ளும்
அந்த சில் நொடிகளில் மின்னலாய் சிந்திக்கின்றேன்.

பனி காலத்திலும் நுவரெலியா
கிழக்கு மண்ணின் உஷ்ணமாய் சுடர்கிறது.
அனலாய் சுடுகிறது மனசு
பெண்மை புனிதமானது
என்பதை புரியாது பலர்
தாய்மையின் உணர்வுகளை
அடைவதற்காய் நாயாய்
அலைகின்றனர்.

ஒரு முட்டையின்
கருவாய் என்றும்
கற்பினை மட்டும் உடைத்து விடாது
காப்பாற்றுகிறேன்.

தினம் தினம் வெள்ளையாகிப் போகும் முடிகளும்.....
உதிரிப் போகும் நினைவுகளும்.......
இருளாய் மாறும் நினைவுகளும்......
சுடராய் மாறும் பகல்களும்.....

நான் -
எது வந்திடினும்
மானத்தை காப்பதால்
மரியாதையை வளர்ப்பதால்
பெண்மையை போற்றுவதால் எப்போதும்
என் பெண்மை சூரியனாகவே பிரகாசிக்கின்றது.
உஷ்ணம் தீக் குளிக்கும் வெயிலில்
நா வரட்சியில் புழுவாய் துடிக்கும்.
பாதங்கள் நகரும் போது
வடியத் தொடங்குகிறது
வியர்வைத் துளிகள்.

ஆலமரத்து நிழல் தேடி
கலைப்பாருவதற்காய் இடம்மெடுத்து
ஆறுதலாய் உறங்குகிறது மனசு.

பசி அரிக்கும் வயிற்றில்
கரையான்களாய் ஊறுகின்றன குடல்கள்.
வறுமை போத்திய உணர்வுகளுக்கான
உணர்ச்சிக் கூறுகள்

இன்னும் வாழ்க்கை செழிக்காத கோலத்தில்
சிதறிக் கிடக்கும் என்னச் சுமைகள்
பட்டமரத்து இலைகளாய் உதிர்ந்து
போகின்றன.

உச்சி வெயிலில் என்னை
தடவிச் செல்லாத தென்றல் காற்று
கடல் அலைகளில் சங்கமிக்கின்றது......
மின்னல் போல் வந்து,
இடி போல் அழிவின் தாக்கம்
தாங்காமல் தட்டுத் தடுமாறி ....!

கரைந்து போன நினைவுகள் ...
மறைந்து போன உறவுகள் ...,
மெதுவாக தடவி வரும்
உணர்வுகள் புதையலாகும் ....!

கிழக்கு மாந்தர்களுக்கு
இச் சோதனை ...
வேதனை -
சிறியவர் முதல் பெரியவர் வரை ...!

டிசம்பர் மாதம் முழுவதும்
அடைமழையின் தாக்கம்
இயற்கை அழிவுகளும் ...
கஷ்டங்களும் .....
துன்பங்களும் ........,
தரிசிக்கும் வாழ்வு ...!

நொந்து வாழ்கிறோம் ..,
வெந்து .துடிக்கிறோம் ,
சந்தோசமில்லா மன நிலையில் ....
அடைக்கலாமில்லா உணர்வுகளில் ...
ஆனால் -
இழக்க மாட்டோம் ...பொறுமையை ...!

நோவினை வாழ்க்கை தான்
இந்த மண்ணின் மாந்தர்களுக்கு
,
மனங்களுக்கு வேதனை ..!..!சோதனை,....!!
 சகீ ...
உன்னால்
என்
நகர்ந்த மூச்சுக்களை திருப்பி
மீண்டும்
சுவாசமாகத் தர முடிமா ...?

கடந்த காலத்தை
மீண்டும்
உன்னால் ...எனக்கு
திருப்பித் தர முடிமா ...?

புழுத்த பழத்தை
மீண்டும்
உன்னால் ...எனக்கு
காய்களாக்கித் தர முடிமா ...?

மறைந்த உயிரை
மீண்டும்
உயிராக்கித் தர முடிமா ...?

கடந்த பொழுதுகளை
மீண்டும்,
எடுத்துத் தர முடிமா ...?

குடித்த பாலை
மீண்டும்
சுரந்து தர முடிமா ...?

அப்படியாயின்
எப்படி ...
உன் மீது
நான் வைத்துள்ள
என் தூய
அன்பை -
புனிதமான் உறவை
திருப்பி பெற முடியும் ...!

மண்ணுக்குள்
இவ்வுடல் அடக்கம் செய்யப் பட்டாலும் கூ ட
உயிருக்குள் -
உறவாடும் உன் நினைவு
உறங்காது !
அடங்காது ..!
அது
என் நரம்புகளோடு
உணர்வுகளோடு...
சுவாசங்களோடு...
மூச்சுக்களோடு ...
குருதிகளோடு ...
நினைவுகளோடு ...
சிந்தனைகளோடு ...
கலந்து விட்டது ...!

அதனால்
வேறு படுத்திப் பார்க்க முடியாது ...!
என் பிஞ்சுக் குழந்தையின் கால்கள்
சுரந்திருந்த நெஞ்சின் _
பால் சுரப்பின் மீது உதைத்ததா.?
இல்லை,
நாவு தவித்ததா.?

மடியின் போர்வைக்குள்
புகுந்து விளையாட வேண்டிய
சிசுவின் ஆரம்பம்

மண் தரையில்
தலை சாய்ந்து படுத்திருக்கின்றேன்...

பல்லாயிரம் சோதனைகளைச் சுமந்த படி
வாழ்க்கையில் நிஜங்களை தேடுகிறேன்

"பெண்"என்று பொறுமையோடு வாழ்ந்து வந்த காலங்கள்
எனக்கினி நிம்மதி தராதென்று உறுதியாயிற்று
என் தாய்மைக்குப் போட்டியாய் _
இன்னும்ஒருத்திக்கு இடம் கொடுத்தபடி
நான் நேசித்து நேசித்து உயிராய் மதித்த
என்னவரின் உறவு தூரமாயிற்று!
கிளை விட்டு கிளை தாவும் மந்தியாயிற்று!

என் துயரம்
இதயத்திலிருந்து தான் சுரக்கிறது
என் குழந்தையின் கதறல்
பிறப்பிலிருந்தல்லவா எழுகிறது...?

என் கண்களிலிருந்து
கண்ணீர் வடியும் போதெல்லாம்
அவன் இதயத்திலிருந்து பாசம் வழியும்,
என் உறவுகள் _
உரிமைகளை சுரக்கும் போதெல்லாம்
இன்னொருத்தியை சுமப்பதை
அவன் நாவிலிருந்து ரசம் கொட்டும்!

நான் கதறித் துடிக்கும் குழந்தையினை
அரவணைத்து தடவிக் கொண்டிருக்க
அவன் என் வாழ்வினை தலாக் செய்ய
என் குற்றங்களை தேடிக் கொண்டிருக்கிறான்

அவனை நோக்கி
என் நா பேச துடிக்கும் போதெல்லாம்
பெண்மையின் பொறுமை என்னை மௌனமாக்கும்..!

என் குழந்தையின் பாதங்கள் நகர்ந்து துடிப்பதால்
தாயின் பற்றுக்குள்ளானவளாய் நான்..!

என்னை கவனிப்பதற்கு :
தயாரான படி!
இருட்டு அறைக்குள்
வெளிச்சத்தை தேடிய படி
என் வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றங்கள்!

ஒரு பெண்ணின் வாழ்வில்
எப்போது மகிழ்ச்சி பொழியுமோ...?
அப்போது -
கணவரின் மனதில்
சந்தேகம் தொலையனும்
சந்தோஷம் மலரனும்..!
கன்னி யென் இதயத்தைக் காவு கொண்ட
காளையரே நீ ரெந்தன் கனவில் வந்தே!
என்னாளும் வாட்டுவது போது மையா!
இக் கணமே! என்னருகே வாருமையா!

வஞ்சி யென் இதயமலர் தன்னில் வீசும்!
வாசந்தான் உம்மீது கொண்ட காதல்
துஞ்சியுயிர் போகுமட்டும் தொலைந்திடாது
தூயவரே உமதெண்ணம் கலைந்திடாது!

பூப் போன்ற எழில் வதனம் காட்டி நெஞ்சில்
பொலிவான காதல் மலர் பூக்க வைத்தீர்!
காப்பாவீர் எந்தனுக்கு வாழ்வில் என்றும்!
காதலுடன் துணையாக நிலைப்பீர் நன்றாய்!

ராஜாவே! உனக்காக ஏங்கி இன்னும்!
ராத்திரிகள் நழுவுவது ஆகாதையா!
ரோஜாவாய் எனை நீரும் சூடிக் கொள்ள !
உடனோடி என் பக்கம் வருவீரையா!
இதயக் கடலில் எழுந்துவரும் கல்வி
உதயத்தை காட்டும் விடிவு ..!
உறவு என்பது உயிருக்கு மேலால்
முச்சுக்களாய் சுவாசிக்கும் நினைவு ..!
மனிதரைப் பார்த்து மரியாதை செய்தல்
தன்னைத் தானே மதிப்பவன்
பாசம் தொலைந்து விட்டது
எம் உறவு
புழுதி கெழம்பிய மணலாய்-ஈரமிழந்து
வரண்ட நிலமாகிய பின்...

பார்க்கும் இடமெல்லாம் கவி வரிகள் போல்
நினைவுத் துளிகள்...
வாசித்தது நா மட்டுமல்ல!

எந்த நட்புக்கும் அடிமைப்படாத நீ
சந்தர்ப்பவாதியோடு இணைந்த காலங்கள்
அதுவும்
வேஷங்களோடு வேஷங்களாயிற்று!
(தீயோடு-தீயாயிற்று)

இன்று
மனசு துடிக்க துடிக்க உணர்விழந்து...
உறவிழந்து
உன்னை பிரித்து வைத்து மகிழ்ந்தவர்கள்,
மெளனித்துள்ளனர்,பொறாமைகளோடு!

உன் எழுத்தில்
உன் பேச்சில்
உன் அன்பின் ஆழம் கண்டு!

நாம்-
ஒவ்வொரு நிமிடமாய்
சுவாசித்து...சுவாசித்து-
மூச்சிடும் வேளை,

அதில் உன் உருவம் இல்லை!
இதயச் சுவடுகளின் ஞாபங்கள் நிறைந்து
மறக்க முடியாத உன்னை நினைவுபடுத்தி
உரிமையாக்கி விடுகின்றன...

நீ
கலக்கமில்லாத வெள்ளையுள்ளமாம்
இன்னுமின்னும் நேசிக்க விரும்பும் இதயத்துக்கு
பார்வை புருவமாம்!
பிரிக்க முடியாதாம்!!

பிரிவை துயரங்களாக்கி வாடிய மனங்களோடு
நிம்மதியிழந்து இருந்தோம்.

"உறவுக்கு இனி தொடர்புயிருக்காதென"
ஆறுதல்படுத்திச் சென்றனர்,
உன் குழந்தைகள்..

நட்புகள் என்று தான் மாறும்....?
தூயவுள்ளங்களைத் தானே அது
தேடியலைகிறது....!
மச்சான் உங்கள் பார்வையில் கனிந்த
அன்பு தெரிகிறது ...காதல் ,
பித்தாய் எந்தன் பிஞ்சு மனது
பெரிதாய் விரிகிறது !

கண்கள் என்னும் கலையாலேந்தன்
கனியுடல் புன்படுதே ! காதல்
கொண்டேன் என்னைக் கனிவாய் வாழ்வில்
காத்திடக் கை கொடுவீர் !

வேலி இடுக்கால் விழிகளைப் பாச்சும்
வேதனை இனி வேண்டாம் ..கழுத்தில்
தாலி கட்டி தனிக் குடி நடத்தத்
தயாராய் வர வேண்டும் ..!

மாதர் தம்மை ஏய்ப்போர் இந்த
மண்ணில் பலருண்டு ..தூய
காதல் பூவைக் கசக்கும் தீ யோர்
கருகும் நிலை யுண்டு !

பெண்மை என்னும் பேரின்பத்தை
புரிந்தோர் உயர்வடைவார் ..வாழ்வில்
உண்மை இன்பம் கண்டே உய்ய
உடனே வர வேண்டும் மச்சான்
உடனே வர வேண்டும்..!

பல்லாயிரம் நட்புகள் என்னை
நேசித்தாலும் உன் உறவுக்கு முன்னே
எல்லாமே தூரம் தான் எனக்கு
சுவாசிக்கும் முச்சுக்களாக எனக்குள்ளே ,நீ

தேடிய செல்வங்கள்
நாடிய நட்புக்கள்
எல்லாமே போலியாகிப் போனது.
உன் உறவு கிடைக்கும்வரை....

பாசத்துக்காய் ஏங்கிய
இதயத்தை அன்பால்
அரவனைத்து
மகிழ்ச்சி யூட்டினாய் நீ ,

உன் பேச்சுக்களும் எழுத்துக்களும்
உன்னை எனக்குள் உரிமையாக்கியது
உனக்கும் எனக்கும் ஒரு நெருக்கம்.
பாசம் புரியாமல் !தவிக்கிறேன்

உன் உறவுதோட்டத்துக்குள்
நான் உன்னையே நுகர்ந்து வந்தேன்
வெறும்மூச்சுக்கள் அல்ல !நீ என்
உயிரில் கலந்த சுவாசங்கள்

நா ன் எழுதும் எழுத்துக்களாக
நான் சுவாசிக்கும் மூச்சுக்களாக
நான் ,தேடும் உறவாக
நீ எப்போதும் என்னுடன்!
என் நினைவுகளுடன் ..!

கலங்கம் இல்லா உறவில்
துயரம் மறந்து போகிறேன்
உன் நினைவுகளை சுமந்தது கொண்டு
இன்னும் உனக்காக மட்டுமே..!

நீ என்னைக் காணும் வரை தவமிருக்கிறேன்
இரவு பகல் மறந்து
ஊன் உறவு இழந்து
உன் நினைவுகளில் உயிர் வைத்து
காத்திருக்கிறேன்,
உன்னை காணும் வரை
ஒரு ..
முத்தம் தரும் வரை ..!
 கல் மழைக் காட்டுக்குள்ளே
கொள்ளி பொறக்க போறபுள்ளே
நான் வந்து பார்க்கையிலே
கண்ணடிச்சுப் போணவளே ...!

கோணிக் கோணி மலையினிலே
நீ நடந்து போகையிலே
கால் தடுக்கி விழுந்ததினால்
நீ புரண்டு அழுதியாமே...!

கல் மழைக் காட்டுக்குள்ளே
சிக்குண்ட வேட்டியைப் போல்
உன் சோகம் கேட்டதிலே
என் மனசு இழியுதிங்கே ...!

உன் நினைவு மனசுக்குள்ளே
பாசியைப் போல் ஓட்டியதால்
தாம்பூலம் சப்பினாலும்
வெம்பிலையாகப் சுவைகிறது

உன்னைக்காண நாலை
கால் மணிக்கு பின் புறத்தே
விசிலோன்றின் சைகையுடன்
வருவேன் .,வா புள்ளே ...!
மழையேயில்லாத வரண்ட நிலத்தில்
ஏன் நகர்கிறது
இந்த பாதங்கள்...!

வியர்வையில் குளித்த உடம்புகள்
தாகத்தில் தவிக்கின்றன...

அழிவுகள் நிறைந்து போன
கிராமத்தில்
சுட்டு (தீயாய்) எரிக்கின்றது சூரியன்.

சுகந்தம் ஊட்டும்
தென்றலில் தடவல்களும்
கொடூர வெயிலில் வெப்பமாய் வீசுகின்றது!

படுக்கையின் விரிப்பில்
தொந்தரவூட்டுப் கொசுக்களின் எண்ணிக்கைகளை
அழித்து....அழித்து...அழுகிறது
ஒரு வெள்ளை பிரம்பு

நிம்மதியற்ற நிலத்தின் மேல்
வருடா வருடம்,
தவறாமல் ஏற்படுகின்ற-
இயற்கை அழிவுகள் ஒவ்வொன்றும்
வரிசையாய் வருகின்றது!

மனம் நொந்த வாழ்வில்
தீயாய் கருகும்
ஏக்கங்களின் தாக்கங்கள்!!!
 வாழ்க்கைப் புத்தகங்களுக்குள்ளே
அரிப்பு
கரையான்கலும்
எறும்புகலும்
கரப்பத்தான் பூச்சிகலும்!

பாட்டி சொல்லுவா
வாழ்க்கை என்பது
ஓர் புத்தகமென்று!

கவனமாக படியென்று!!
பக்குவமாய் பேனுமென்று!!
படிக்கத் தொடங்கையில்
பல்லாயிரம் வினாக்கள்
விடை கூற முடியாதொன்று?

ஒரே யோசனை
பகல் இரவாகவும்
இரவு...பகலாகவும்

பாட்டி சொன்னா
கவலைப்படாதே!
வாழ்க்கையை ,
கன நாள் வேண்டுமென்று....

நினைவுகள் மட்டும்
என்னை
நிழலாய் தொடர்கையில்
அன்பு....
பாசம்.........
அரவணைப்பு........
எல்லாம்
மனதுடனும்......
பெண்மையின் மௌனங்களுடனும்

மலரும் விடியலாய்
நகரும் இரவுகளாய்..........
என் வாழ்க்கைப் பயணம்!

அப்பத்தா சொன்னா
கலி காலம் இப்படித்தானாம்!
மலத்தைக் கண்டாள் மிதிப்பான்
நீரைக் கண்டாள் கழுவுவான் என்று!

கற்பும் மானமும் இழந்தனர்
வாழ்வுக் கிடங்கில்
சிசுக்களை
அறிமுகம் செய்தனர்
பெயர்களை சூட்டி!

ஏச்சுக்களும் பேச்சுக்களும்
கதைகளும்...கால்களும்...!
வீடு தொடக்கம்
வீதி வரை!

இப்போதெல்லாம் - நாங்கள்
வாழ்வதுமில்லை - வாழப்
போவதுமில்லை..!
இதய மூச்சுக்களின் சுவாசமென
இப்போதுதான் புரிகிறது
அவளது பாசத்தில் ,
ஊற்றெடுக்கும் அன்புத் துளிகள்!

உறவாடுவது மன நிறைவுதானென்று
இப்போது தான் புரிகிறது
அவளது தூ ய்மையான,
நட்பின்
அரவணைப்பில் அக மகிழ்ந்து ..!

எதிகாலம் ,
மௌனமாய் மாறிய போது
இது தான் நற்புறவென்று
அணைத்தெடுத்து அவளால்
மகிழ வைத்தது நிகழ் காலங்கள் ..!

எல்லா மகிழ்வும் வளமும்
பற்றும் பாசமும் நலமும்
உறவும் தொடர்பும்
இருவரின் ஓர் இதயங்களில்
மனசுகளின் புரிதலில்
ஊற்றேடுக்கின்றன ..!
உதயமாகின்றன ...
பிறப்பெடுக்கின்றன
துணையிழந்த தாலிக் கொடிகள்
வெந்து நொந்த படி
வாழ்க்கையற்று
தனிமையை சுவாசிக்கிறது!

தடவி மகிழும்
சதிகளை (விதிகளை)
மனதுக்குள் புதைந்து விட்டு
எதையோ இழந்த படி
சுவாசம் பெரும் மூச்சுவிட்டுப் போகிறது!

வரட்சிப் பூமியில் வெடித்துச் சிதறுகின்ற
புழுதிகளை
வியர்புடன் சுவாசித்தவாறு
வியாதியின் அவஸ்த்தையை உடம்பில் திணித்து
மரணப்படுக்கையில் கிடந்த போர்வை தட்டிச்
செல்கின்றது.

தன் தாகத்தின் "நா" வரட்சியை போக்கும்
ஊற்றுகளின்
கசிவுகளை மறைத்து அது
பாலைவனப் பூமியில்
கானலாய் மாறிப் போகிறது ..!
பசியினைத்
துரத்திச் செல்லும் வயிறுகள்
வறுமையினை சந்திக்கும்!

சிறு குடலை
பெருங் குடல் மிதித்து
நித்தம் போரடித்து
பாம்பும் கீரியுமாய் மாறும்!

விடியும் பகல்களும்
மறையும் இரவுகளும்
பசி
பட்டணிகளோடு
உதித்து மறையும்!
மறைந்து உதிக்கும்!!

தாயிடமிருந்து
வெட்டியெடுத்த தொப்புள் கொடி
அந்தரத்தில் ஊஞ்சலாடும்!
என் வாழ்க்கை கருவூலத்தை
தரிசிக்காது!

ஏழ்மைக்குள் அழகு சுரந்த
கற்புச் செடிகளில்
என் போர்வை மூட்கள்
மானம் (தேடும்,காக்கும்)

இருந்தும்
சமூர்த்தியின் பட்டியலில்
அகதிகளாக...........
அனாதைகளாக..........
யாசிப்பவர்களாக.........
வறுமையாளர்களாக நாம்!

இன்னுமொரு சுனாமியால்
சூறாவளியால்..................
நில நடுக்கத்தால்................
வெள்ளப்பெருக்கால்
இந்த இயற்கை அழிவுகளால்
மட்டுமே மீண்டும் வயிறு சிரிக்கும்.

மனம் குளிரும்!
பணம் குவியும்!
பொருள் நிறையும்!
உறவு தொடரும்!
ஆதரவு கிட்டும்

சனி, 12 நவம்பர், 2011

குற்றம் செய்யாத கைதிகள்
வீட்டில் -
முதிர் கன்னி ...!
நட்பு என்பது புனித வரமாகும்
தூய்மையாய் பழகி வாழு ...!
பொறாமை உள்ளத்தை வளர்க்காத இதயம்
சுகம் தரும் தென்றளின் தடவல் ...!
இலக்கியப் பணியை நேசிக்காத மனிதன்
பொழியும் அருளினை பெறாத மனசு
காதலையும் மனதையும் புரியாதோன் வாழ்வை
அரிக்கும் (அழிக்கும்) விஷக்கிருமி
ஏழை இதயத்தை பேணிக்காப்பான்
வாழும் படைப்புக்களில் உயர் மனசு ...!
தோழி ,
நான்
ஓயாது கிழம்பும்
கடல் அலையாய் ;
விடாது தொடரும்
... கண் இமைகளின் சிமிட்டள்களாய்:
சுவாசமாய் நகரும்
மூச்சுக்களாய்....... இருப்பேன்...!
நீ ,
மின்னலோடு தொடரும்
இடியாய் மாறினாலும்
நான் தாங்குவேன்,
எரிமலையாய் வெடித்தாலும் ,
விசப் புயலாய் மாறினாலும் ,
நிழ நடுக்கமாய் அதிர்ந்தாலும் தாங்குவேன்
ஏனெனில் ,
நான் உன்னுயிராக வேண்டும் ...!
நீ -
என்னுயிராக வேண்டும் ...!