புதன், 21 டிசம்பர், 2011

பகலில் சுமையாய் இருக்கிறேன்
இரவில் பிணமாய் கிடக்கிறேன்
வேதனைகளும் சோதனைகளும்
என்னை தொடரும் பொழுது

பல வருடங்கள்
எனக்கான தன்மானத்தை
காப்பாற்றி வந்த பின்
சுகத்தை நீ தடவிக் கொள்ளும்
அந்த சில் நொடிகளில் மின்னலாய் சிந்திக்கின்றேன்.

பனி காலத்திலும் நுவரெலியா
கிழக்கு மண்ணின் உஷ்ணமாய் சுடர்கிறது.
அனலாய் சுடுகிறது மனசு
பெண்மை புனிதமானது
என்பதை புரியாது பலர்
தாய்மையின் உணர்வுகளை
அடைவதற்காய் நாயாய்
அலைகின்றனர்.

ஒரு முட்டையின்
கருவாய் என்றும்
கற்பினை மட்டும் உடைத்து விடாது
காப்பாற்றுகிறேன்.

தினம் தினம் வெள்ளையாகிப் போகும் முடிகளும்.....
உதிரிப் போகும் நினைவுகளும்.......
இருளாய் மாறும் நினைவுகளும்......
சுடராய் மாறும் பகல்களும்.....

நான் -
எது வந்திடினும்
மானத்தை காப்பதால்
மரியாதையை வளர்ப்பதால்
பெண்மையை போற்றுவதால் எப்போதும்
என் பெண்மை சூரியனாகவே பிரகாசிக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக