ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

நினைவுகளில் கனவுகளின் ஏக்கங்கள் ...!

நினைவுகளில்
கனவுகளின் ஏக்கங்கள் ...!
இரவின் மறைவில்
விடியலின் உதிர்ப்பில் 
மருந்தும் கையுமாய்
எழுந்தும் எழும்பாத
நிலையில் நாம் ..!

உள்ளத்து உணர்வில்
விண்ணும்,மண்ணுமாய்
இடியும் மின்னலுமாய்
கடலும் அலையுமாய்
இன்னும்.இன்னுமாய் ..
நினைவுகளில்
கனவுகளின் ஏக்கங்கள்
கொஞ்சம் மனதில்
வேதனைத் துளிகள் ...!
காலையும், மாலையும் நகரும்
வைத்தியர்களுடனும் தாதிகளுடனும்.
குடும்பத்தாருடனும் ,பார்வையாளர்களுடனும்
அனுதாப் பேச்சுக்களுடனும்.!
பிறப்பின் விதையில்
மரணப் பயிர் -முளைக்கிறது.!
போட்டிப் பூக்களும் பொறாமைப் பூக்களும் ,
வஞ்சகக் பூக்களும் ,
சூது வாதுப் பூக்களும் , பலவண்ண
குனப்பூக்களும் , பேய்களும்
பிசாசுகளும்
என் படுக்கையைகிழித்து
ஏளனமாய்ச் சிரிகிறது.!
மனதுக்குள்
விதி சதியாய் மாறிப்
போராடுகிறது.!
வாழ்வில்
துன்பங்களும், துயரங்களும்
மட்டுமே
கவலையின்றிச்
உடம்பினைச் சுமக்கின்றது !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக