ஞாயிறு, 6 ஜனவரி, 2013

புதிய வருடம் பிறந்தது(2013)
மனசு துடித்தழுதது 
மைனியின் மரணத்தோடு ..!

வேதனையை தாங்கினேன் 
வலியானது இதயம் 
சோதித்த உடம்பில் இருதயநோய் 

மருந்தை சொல் 
அதற்கு முன்னர் 
குடிப்பதற்கு தயாராய்யிரு

மரணத்துக்காய்
உறவுகள் அழுததில்லை
ஊர்றவர்களே அழுது கொண்டார்கள்
மனம் நொந்து கண்ணீர் வடிகின்றது 
இதயம் துடிக்கின்றது 

உறவினர் முதல் ஊர்றவர் வரை 
பேரதிர்வு

மனம் சோர்ந்து போன 
மாணவர் கூட்டம்

படித்து படித்துக் கொடுத்தே 
மாணவர்களை முன்னேறச் செய்து இருபத்தாறு ஆண்டுகள்
கடந்து விட்டன

உயர் பட்டங்களும் பதவிகளும்
பெறப் பட்டு
குடும்பம் சந்தோசப் பட்டது தான் எத்தனையோ ...?

இதனால்மகிழ்ச்சியில் நிறைந்து போனது
மனசும் ஆசிரிய சேவைகளும் தான் ..

பழுத்த ஓலை இருக்க பச்சோலை விழுந்த கதை
வாழ்வில் மேடையேறியது

சோர்வற்ற உறுப்புக்கள்
சுவாசங்கள்
உயிர் மூச்சுககளையே அடைக்க
மரணமானது என் மைனி தான்

பாசம் நிலைக்கட்டுமே யென நினைத்திருக்க
உயிர் மறைந்தறக்கான காரணம் தான் என்ன ...?

பகட்டாணனவாழ்க்கை.......'
போலியான வார்த்தை .....
பொறாமையான உள்ளம் .....
கோபமான மனம், ......
வீணான பேச்சு ......
தீய செயல்கள் ......எதுவுமே இல்லை

அன்பான உள்ளம்
பாசமான உறவு
[பொறுமையான மனசு
நேர்மையான இதயம் எவ்வளவோ இருக்க
உயிர் உடலை விட்டுச் சென்றது

உறவின்றி உயிர் பிரிந்து
போன பின்னும்
நானிருந்து என்ன பயன் ...?

இலக்கண நூல்கள்



அகத்தியம்
தொல்காப்பியம்
இறையனார் களவியல்/இறையனார் அகப்பொருள்
புறப்பொருள் வெண்பாமாலை
அவிநயம்
காக்கை பாடினியம்
சங்க யாப்பு
சிறுகாக்கை பாடினியம்
நற்றத்தம்
பல்காயம்
பன்னிரு படலம்
மயேச்சுவரம்
புறப்பொருள் வெண்பா மாலை
இந்திரகாளியம்
யாப்பருங்கலம்
யாப்பருங்கலக் காரிகை
அமுதசாகரம்
வீரசோழியம்
இந்திரகாளியம்
தமிழ்நெறி விளக்கம்
நேமிநாதம்
சின்னூல்
வெண்பாப் பாட்டியல்
தண்டியலங்காரம்
அகப்பொருள் விளக்கம்
நன்னூல்
நம்பி அகப்பொருள்
களவியற் காரிகை
பன்னிரு பாட்டியல்
நவநீதப் பாட்டியல்
வரையறுத்த பாட்டியல்
சிதம்பரப் பாட்டியல்
மாறனலங்காரம்
மாறன் அகப்பொருள்
பாப்பாவினம்
பிரபந்த மரபியல்
சிதம்பரச் செய்யுட்கோவை
பிரயோக விவேகம்
இலக்கண விளக்கம்
இலக்கண விளக்கச் சூறாவளி
இலக்கண கொத்து
தொன்னூல் விளக்கம்
பிரபந்த தீபிகை
பிரபந்த தீபம்
பிரபந்தத் திரட்டு
இரத்தினச் சுருக்கம்
உவமான சங்கிரகம்
முத்து வீரியம்
சாமிநாதம்
சந்திரா லோகம்
குவலயானந்தம் (மாணிக்கவாசகர்)
குவலயானந்தம் (அப்பைய தீட்சிதர்)
அறுவகை இலக்கணம் - ஏழாம் இலக்கணம்
வண்ணத்தியல்பு
பொருத்த விளக்கம்
யாப்பொளி
திருவலங்கல் திரட்டு
காக்கைபாடினியம்
இலக்கண தீபம்
விருத்தப் பாவியல்
மறைந்துபோன தமிழ் இலக்கண நூல்கள்
வச்சனந்திமாலை
அழுது கொண்டே 
மண்ணில் பிறக்கின்றோம் 
குறைகூறிக் கொண்டே
மண்ணில் வாழ்கிறோம் 
ஏமாற்றத்துடனே மரணிக்கின்றோம் 
நாம் எதையும் சாதிக்கவில்லை
தேடிய எதுவுமே கூட வருவதில்லை 
நல்ல அமல்களை தவிர ..
மன நிறைவு செல்வத்தை தேடித் தரும்
ஆடம்பரம் வறுமை தேடிக்கொள்ளும்
அறிவு வாழையடி வாழை போன்றது 
வளர்ந்து (பரவிக் )கொண்டே செல்லும்
மனமகிழ பிறந்த கவிகளின் சிறப்பால் 
கொடிய வேதனை எதுவும் இல்லையாம்
புண்ணிய உலகினிற் பயின்ற பாவினை 
நன்றியோடு நினைப்பது எமது கடமையே
கிணற்று நீர் தோன்றிப் பெறுகின்றோம் 

மழை நீர் தோன்ராமல் பெறுகின்றோம் 

யாராவது 

நாம் இவற்றை வைத்து அல்லாஹ்வின் அற்புதத்தை

நினைத்துப் பார்க்கின்றோமா ...?

உறவுகள் பரந்தது
எப்படி பார்ப்பது ...?
தடவியது காதல்திருமணம்...

அடுப்பு எரிகின்றது
வயிற்றுப் பானை கொதிக்கவில்லை
பசி

நீர் வடிகின்றது
சேகரிப்பதற்கு யாரும் இல்லை
கண்ணீர்

பல லட்சம் நாட்டுக்கு வருவாய்
வீட்டுக்குள் பஞ்சம்
மலையாகத்தில் ஒப்பாரி

வானின் தூறல்
பூமியின் செழிப்பு
மண்ணில் அதிஷ்டம்

தூண்டுகோல் விளக்கு
வெளிச்சமானது
திருமணம்

சங்கிலி தொடராய்
அணிவகுப்புக்கள்
எறும்பு

வசதியிருந்தும்
கவனிப்பற்றவர்கள்
முதியோர்

சோர்ந்து போகும்
உடம்பு
மரணம்
கடல் கடந்து வாழ்ந்தாலும் 
இதயத்தில் வளர்கின்றது 
தோழியின் நட்பு 

முக நூலைக் கண்டதும் 
இதயம் செழித்தது 
நட்பு /பூ /க்கள்

எழுத எழுத கழுத்தில்
ஒரு துண்டு போர்வை
பொன்னாடை

பளிங்கு கற்ககளில்
கண்ணாடியாய் தெரிந்தது
நட்பின் முகம்
உற்ற தோழி
தொப்புள் கொடி உறவில்லை 
சுவாசம் தந்த மூச்சு 

இரவு தந்த இருள் 
பகலில் இல்லை 
சூரியன்

தாயின் பிரசவம்
குழந்தைன் அழுகை
இல்லறம்

கண்ணுக்குள் நீ
மனதுக்குள் நான்
நட்பு

வந்ததால் சந்தோசம்
போனால் அழுகை
பிரிவு ...
மங்கையே தென்றல் யானுன் 
மனத்தினைத் தொட்டேன் பின்னர் 
எங்கெலாம் தேடியுந்தன் 
இதயத்தைக் கவர்ந்த கள்வன் 
தங்கிடும் இடத்தைக் கண்டு 
தவிப்பினைத் தெரியச் செய்தேன் 
சங்கெணும் கழுத்தில் தாலி
தரித்திட வருவே னென்றான்

என்னையே தூது செல்ல
இறைஞ்சினைஏற்றுக் கொண்டான்
உன் மனம் கவர்ந்த் ஆளன்
உழைத்திட அரபு நாடு
சென்றுமே யுள்ளான் மீண்டும்
திரும்புவேனென்று சொன்னான்
அன்னவன செல்வத்தோடு
அணைத்திட வருவான் நம்பு

கள்வனைக் கண்டேன் நல்ல
கண்கவர் அழகன் பேச்சில்
வெள்ளையாம் உள்ளம் கண்டேன்
விஞ்சிடுமன்பு கண்டேன்
கள்ளியாம் நீயு மன்னோன்
கனி மனம் கவர்ந்த கள்ளி
அள்ளியே உன்னைக் கொஞச
அவன் வரும் சேதி உண்மை
...
இந்த தாய்மையின்
பள்ளமான கசிவுகளில்
ஊற்றாய் சுரக்கிறது
வாழ்க்கை...

தொப்புள் கொடியின் சுருளில்
வெட்டி விலக்கிய நுணியில்
வலித்தது இதயம் பீச்சியது குருதி

புலம்பிய மனதின் ஓலத்தில்
நிழலாக
தொடரும் சுகம்.............

"நாளை பேசும்"
என்ற
எதிர்பார்ப்பு நம்பிக்கை
நகரும் பயணத்தில்
நடை போடுகிறது வாழ்க்கை...

வீதியில்
அகதி முகாம்களில் வாழும்
பெண்களின் பேச்சு
அனுதாபங்களாய் மாறுகிறது..........

பெண்கள் நாட்டின் கண்களென்று
வார்த்தைகள்........
புகழ்ச்சிகள்............
பாராட்டுக்கள்..........
பேசப்படுகிறது.........

பெண்ணுக்கு
பாதுகாப்பு
எப்போது வரும்!
பெண்களை-
பாதுகாப்பது யார்.......?
கன்னி யான் மலரே என்னைக் 
காளையோர் தேனின் வண்டாய் 
பின்னியே நாளும் சுற்றிப் 
பிரியமாய்க் கூடு கின்றான் 
மன்னவன் அழைப்பில் யா னும் 
மகிழ்கிறேன் சொர்கம் கண்டே


காதலே கொண்டான் என் மேல்
காந்தமாய் கவர்ந்து கொண்டான்
மோதலோ மெக்குள் இல்லை
காதலே வருநாள் மட்டும்
சத்தம் இணைந்து நிற்போம்

தேவதை என்றான் என்னில்
தேன் வதை உண்டு நின்றான்
காவலன் என்றான் என்னைக்
கள்வனாய்க் கவருகின்றான்
பாவலன் அவனின் கையில்
பாவிதழ் ஆனேன் நானும்


வாழ்வெனும் பூங்காவிற்குள்
வந்தநல் தென்றற் கற்றாய்
சூழ்ந்துமே என்னை நாளும்
சுகத்தினில் ஆழ்த்துகின்றான்
ஆள் கடல் அன்பில் தோய்ந்து
அணு தினம் மகிழ்கின்றேன்
என் இதயத்துக்குள்
இன்னொரு இதயம்
அது நீ ...

உன்னாலே என் எழுத்து
வாழ்கிறது.

அழகானவை எல்லாமே
எனக்கு உன்னைத் தான்
ஞாபகப்படுத்துகின்றன.

உன் சோகத்தை
நான் அறிந்த போது தான்
என் சோகத்தில் அது
இரண்டரக் கலந்தது.
உன் கண்ணீரைக் கண்ட
என்மனம் வெந்து
உருகியது.

என்னைப் பார்த்து நீ
சிரிக்க மாட்டாய்
நீ சிரித்த நாளாவது
யார் ஞாபகத்திலும் இல்லை.
நான் உனக்கு
செருப்பாக இருப்பேன்
நீ அணிந்து கொள்வாயென்றால்

தினம் தினம் நீ
கண்ணீர் வடிக்கிறாய்
இதயத்தைப் புதைத்துக்
கொண்டு.

நான் உன்னைக்
காணும் போதெல்லம்
விழி மூடிக் கொள்கிறாய்.

நீ வசிப்பதனாலோ என்னவோ
என் கவிதையும் வளர்கின்றது.

உன் முகத்திலுள்ள
பருவாக நான் ஒட்டி நிற்கிறேன்
தினம் தினம்
உன்னை முத்தமிட.
சிலுவையாக உன் முகத்தில் அரைந்த
ஆணியை கழற்றி

வீசாதே அது நான் தான்.

சோகக் தீயால்
என்னைத் துரத்தியதால் என் முகம்...

உன் வெறித்தனமான
சோகத்தில்
கிழிந்த உன் இதயத்திலிருந்து
வடிந்த குருதியை
என் பேனாவின்
மையாகப் பயன்படுத்தினேன்.
உன்னை நான்
தொடர்ந்த குற்றத்திற்காக
உன் இதயத்தைப்
பூட்டி நீ வைத்தது கூட
எனக்கு ஒரு
தண்டனை தான்....
நீ நடத்தும் புரியாத
அந்த சோக நாடகவெறியில் நான்
தீயில் கரியாகினேன்.....
பலர் என்னை
விரும்புகிறார்கள்
எல்லோர் வாழ்விலும்
ஒரு சோக அனல்
புதைந்து சுடுவது தான் அதிசயம்.
பாவம் நான்
என் இதயத்தை
யாருக்கும் கொடுக்கவும் முடியாமல்
பலரால் வாங்கவும் முடியாமல்
அவதிப்படுவதை உணர்கிறேன்...

என் மனம் எப்படித் தாங்கும்
உன் சோகங்கள்
என் மனதையும்
நெறுக்கிப் பிழிகின்றது.
உன் மனமும்
என் உயிரும்
எழுத்தில் தான்
சங்கமம் ஆகின..
எத்தனை காதலர்கள்
ஒருவரை ஒருவர் சந்திக்கிறார்கள்.
நானும் நீயும்
சந்திக்காத சங்கமமே...

நீ விரும்பும் எதையும் செய்வேன்
உன்னை மறக்க மட்டும் சொல்லாதே...

நீ இன்றி என்மனம்
எப்படி வாழும்
என் இதயம் உன்
சோகங்களைத் தாங்கும்
துலாபாரம் ஆகும் போது.

நீ வேதனைப்பட வேண்டும்
உன்னை ஆதரித்த நானே
உன்னை மறந்தால்.

நான் அனுப்பிய
வெற்று அஞ்சலை ஏன் நீ
திருப்பிவிட்டாய்.
அதில் இருந்தது
என் வெறுமையான இதயமே.

உன் தனிமையே
உனக்கு ஒரு நோய்.

என்னை பதுக்கி வைத்துக் கொண்டு
ஏன் இன்னும்
விரதம் இருக்கிறாய்.

இத்தனை சோகங்களுக்குள்ளும்
உன் சிரிப்பைக் காண
முடியாது தான் அவஸ்தை.

உன் இதயத்தில்
எதைத்தான் பூட்டி
வைத்திருக்கிறாய்
எதையுமே என்னால்
புரியமுடியவில்லை.

உன் சோகத்திற்கு
ஒரு படி வெடிக்க
இடம் கொடு
தேடிப்பார்க்கிறேன்
அந்த ஓட்டையில்
உன் இதய அண்டாவை..

என் எழுத்துக்களை
வரவேற்ற நீயே
வழியனுப்பி வைத்தாய்

என் கருவே நீயான
போது எக்கருவறைதான்
இனி என்னை ஏற்கும்...?

எப்படி நம்புவது
உன் மெளத்தின் பின்னால்
இப்படியொரு பாதாளம்
இருக்கும் என்று...

உன்னைத் தேடினேன்
என் எழுத்தைத்
தொலைத்து விட்டு
பேனாவையை ஏன்
திருடினாய்?

யன்னல்களைக் கூட
இருக்க மூடிக்கொள்கிறாய்.
ஏன் என் வாசம்
உன்னைத் தேடும் என்றா?

உன் வாழ்க்கைக்கு
வெளிச்சம் தேடினேன்
இறுதியில்
அந்த வெளிச்சத்திலே
எனனை நான்
தொலைத்தேன்.

நீ நிராகரித்தாலும்
உன்னை நான்
தொடராமல் விடுவேனா
இரவெல்லாம் ஒரு கனவு
நீ என்னைக் காதலிப்பதாக.

இப்போது நீ சிரிக்கிறாய்
அது தான்
உன் முற்றத்து மல்லிகைகள்
பூத்து மனம் பரப்புகிறது.

என்னால் நீ குணமானாய்
உன் நோயை
எனக்குப் புகுத்திவிட்டு.

நீ எனக்குக் கிடைக்க
முதலே தொலைத்ததாக
நான் தூரத்தில் இருந்து
அவதிப்படுகிறேன்.

உனக்கும் எனக்கும் உள்ள
தூரம் எத்தனை ஜென்மங்கள்.
அவ்வாறு இருந்தும்
என் இதயத்தில் நீ வாழ்ந்தாய்.

உன் சோகத்தை
ரகசியமாய் விசாரித்தேன்.
தெரிந்தும் கை விரித்தவர்கள் பலர்.

நான் வெட்கப்படுகின்றேன்
என் எழுத்துக்களாய் உலகை
வென்ற நான்
உன்னிடம் தோற்றுப் போனேன்....

உன்னில் அப்படியென்ன
பிடிவாதம்
உன்னை விரும்பிய
என்னையே தோக்கடிக்க.
என்னை விடவும்
ஊணமான உன்னை
நேசிக்க எவள் வருவாள்.

நீ சிரித்து வாழ
என் இதயம் திறந்தேன்
களவு போனது
என் இனிய கவிதைகள்.

உன் அழகையே அந்த
ஆபத்து மாற்றியது
அந்த இதயத்திலே
இளைப்பாறுகின்றது என் ஜீவன்....

உன் வார்த்தைக்குப் பஞ்சம்
உன்னை வாழ வைக்க
உன் சோகம் தீர்க்க
உன்னிடமே பிச்சை கேட்கிறேன்.

நான் எதிரில் வரும் போது
நீ குனிவதில் நியாயங்கள் உண்டு....
ஏனென்றால்
உன் நோய் தீர்த்த வைத்தியர்
நான் தானே....?

எதிர்பாராத நேரத்தில்
நீ என்னைக்கரம்
பிடித்தாய்.
முத்தமிட அணைத்தேன்
என் கைதான் சுட்டது.
நான் தொட்டது நெருப்பு..

நீ பாய்ததால்
செத்துப் போவது
நான் மட்டுமல்ல என்
எழுத்துக்களுமே.

அழுது ஏன் வழிகிறாய்
நான் குடியிருப்பது
உன் கண்ணில் .
கண்ணீரைக் குடிப்பதற்கே.

இனி தீர்ந்தது
உன் நோய்
அதற்குப் பரிசாக
உன் இதயத்தை எனக்குக்
கொடு....

நீ தப்பிக்க முடியாமல் என
சுவாசவழியையும் மூடிடுவேன்.

நீ எப்படியோ நானும்
அப்படியே
உன் சோகத்தில்
என்னைப்புதைத்த
நாள் முதலாய்..

எப்படியும் நீயும் நானும்
தொடர்புபட்டோம்
எழுத்துக்களால்
காதலாக
நட்பாக
எதிரியாக.
நோயாளியாக,வைத்தியராக.

எதுவாக இருந்தாலும்
என்னால் குணமானது
உன் இதய நோய்.

கடைசியாக எனக்கு ஒரு கவிதை
நீ எழுதியனுப்புவாய்
நீ காதலித்தது
என்னையல்ல
என் கவிதைகளையே என்று.

நீ மங்கிப் போனாலும்
உன் நினைவில் வடித்த
என் எழுத்துக்கள்
நூலாகச் சுமர்ந்து வரும்
அப்போதாவது புரிந்து கொள்வாய்
உன் இதயத்தில் நான் வாழ்ந்தது.

உன் பைத்தியத்திற்கு
வைத்தியமான என்னை
பைத்தியம் குணமானதும்
மறந்து விட்டாய்.

என்னைப் போல
துரதிஷ்டக் காரி பிறக்கவே கூடாது.......

இனி

உன் நினைவுகளைச் சுமர்ந்த

உனக்கும் எனக்குமிடையில்

ஒரு முற்றுப்புள்ளி தான்

அந்தரங்க முடிச்சுக்களாக!
நெஞ்சில் உதைக்கும் 
நினைவுகளின் தாக்கம்

விருப்பங்களால் விளையும்
உறவின் தாகங்கள்
தணியாது நடை போடும்

வாசல் தேடும்
வாலிப பராயங்கள்
நேசத்தோடு '
நெகிழ்வையே எண்ணி
நெஞ்சை வருடும்

சந்திப் ''பூ ;'க்கள்
சிந்திப் போகும்

மகுடந்த மது குடத்தின் '
தளம்பல்கள்
மகிழ்ச்சித் தாளம்
கக்கும்

வீரியம் மீறிய
தாபங்கள்
போடும் களியாட்டங்கள்
ஒரு பொழுதில்
ஒன்றாய் சேர
உதடுகள் ஒட்டி
உரிமையுடன் உலகை ஆளும்

அன்பின் அதுரமும்
அணைப்பின் அகலங்களும்
மூச்சோடு கலந்து
முழுமதி நிலை போல்
தனி சுகம் பறிக்கும்

ஒரு மலரின் தேடல்
கனவு எல்லைகளைக்
கடக்கக் கருவாகி
சுவடாய்ப் பதிந்திருக்கும்
சகீ ..!
உன் கரங்களை நீட்டு 
பிடிப்பதற்கு அல்ல தாங்குவதற்கு
நிம்மதியை தொலைத்துவிட்டேன்

உன் நினைவுபூக்களால்
பார்ப்பதற்கு அழகு உன் முகம் 
வாசிப்பதற்கு அழகு உன் கவிதை 
அன்புக்கு அழகு உன் நட்பு 
சுவாசத்துக்கு அழகு உன் மூச்சு 
மொத்தத்தில் நீ தொட்டுத் தழுவும் தோழி
பெண்கள் சிலர்
வெளிநாடு செல்கையிலே 
ஆண்களிற் சிலரிங்கே 
அட்டகாசம் புரிகின்றார் 

தாரத்தை அனுப்பி விட்டு 
தலை கால் புரியாமல்
பாதையில் பகிரங்கமாய்
வேறு -
பாவையரைத் தேடுகின்றார்

மனைவி அங்கே
மனமும் உருகி
உடலும் உருகி
மகிழ்வையே தொலைக்க

கணவன் இங்கே
மதுவைத் தேடி
மாதுவைத் தேடி
மயக்கம் போடுகின்றான்

பாசம் அங்கே
வேஷம் இங்கே
பாவம் பெண்கள்
கனவுகளை ஜீரணிக்கும் 
இதயம் 

கால நகர்வுகள்
கனவுகளை சுமந்தவறே 
பயனிக்கும் .....

எதிர் கால
சுதந்திரம் நாடி
ஏங்கித் தவிக்கும் இதயமும்
இடையில் .....
பாதையைமறிக்கும்
பாதகச் சூழ் நிலைகளும்

இடமாறித் -
தடமாறிப் போன
உறவுச் சுவாசங்கள்
தள்ளியே நிற்க
தளிருடல் வேகும்

ஒரு நேர யாசகத்தில்
ஓராயிரம் கற்பனைகள்
சுமந்த வாழ்வு
காற்றாடியாய் .....
அந்தரத்தில் ஆடும்

விரக்தி வெளிக்குள்
முகத்தை மறைக்கும்
உணர்வுகளின் தாகம்
தாகங்களைக் கக்கும்


பெரு மூச்சும்
அணல் மூசுக்களாய் மாற
அகம் கொப்பளிக்கும்
கேள்வித் தீயில்
வாழ்வு
வரட்சியாகி வெடிக்கும் ...
ஏக்கம் சுமந்தஉள்ளம் 
தாக்கங்களில் மூழ்கும் 

காலச் சுழற்ச்சி வேகம் 
கற்பனைகளை ஜனித்து 
ஆசைக் கோட்டைக்கு
அத்திவாரமிடும்

ஏழ்மை வாழ்வுத் தீயில்
இளமைத் தண்ணீர்
வேகும்


நாதியற்ற தனிமை
நரகக் கோலம்
பூணம்


கனவுவேர் அருந்தே
கன்னிக் கொடி
தள்ளாடும்


பெண்மைப் பூவின் அதிரம்
மண்ணுக்கே -நல 
நிலவு சுடுகிறதாம் 
ஏன் ....
பிரமச் சாரிகளோ 
நீங்கள் ...?

அல்லது ...
அக்கினிகளைக் கூட
நிலவென்று
நெருங்கி னீர்களோ ..?

நிலவு
குளிர்மையானது
ஆனால் ....அதை
நேர்மையோடு
நெருங்கும் போது
மட்டும் தான்

ஒ ....புரிகின்றது
நீங்கள்
வரையறை மீறி
நிலவைத் தொட்டு விட்டீர்கள்
போலும்
அந்த்தச் ...
சில நேரங்களில்
நிலவுகளும்
அக்கினியாவதுண்டு
அப்போது -
நிலவு சுடும் தான்
ஓடாதீர்கள் 
எத்தனை
ஏழ்மை மலர்களில் 
தேனைத் திருடினீர்கள் 
ஓடாதீர்கள் 

முக மூடித் திருடர்களைக்
கூடப் பிடித்து விட்டோம்
உங்கள்
முகங்கள்
எமக்கு மனப் பாடம்
கைது செய்வதில்
கருணை காட்ட முடியாது

எங்கள்
மலர்களின்
முட்களை ஒடித்துத்
தேனையுண்டது
உங்கள் பொழுது போக்கு
என்றால் ..

எங்களுக்குக் கூட
பொழுது போக்கு வேண்டாமா...?
நாமும்
வண்டுகளைத் தேடித் திரிகிறோம்
மயக்குவதற்கு அல்ல
குத்திக் கிழித்து
குதறி எறிவதற்கு
இறையோன் அருளொளியை எழுது!
இயற்கையின் எழிலை எழுது!
உலகின் அற்புத வளத்தை எழுது!
சுரக்கும் சுகந்தம் தன்னை எழுது!
தூய நட்பு உள்ளத்தை எழுது - நண்பா
அனைத்தையும் மனம் திறந்து எழுது!
பெண்மை தனையே எழுதி - தாய்மை
பொங்கி யெழும் கருணையையேன் மறந்தாய் !

வானம் பூமியை எழுது!
ஆழ் கடல் அற்புதத்தை எழுது!
வான் பொழியும் மழையை எழுது!
தரை மேல் விழும் சுடரை எழுது!
பசி பட்டாணி பஞ்சத்தை எழுது!
மரம் செடி கொடியை எழுது!
எண்ணிலா இயற்கை அழகை எழுது!
தாய் குலத்தை வர்ணிப்பதேன்...?

கலை இலக்கியத்துள்ளே நகரும்
போட்டி பொறாமை தன்னை
கவிதை வரிகளாய் எழுது - பாரில்
எழுந்துள்ள பஞ்சத்தை எழுது!
மின்னலாய் பிரகாசிக்கும் இயற்கை
அழகினை போற்றி எழுது!
நல்லவை எல்லாம் விட்டு - எழுத
உலகினில் பெண்மையா வேண்டும்....
காலத்தின் வேகத்தோடு
சிக்குண்டு-
எங்கள் பயணம் தொடர்கிறது !

இதயங்களுக்குள் எழும்
இனிய ராகங்கள்
அதற்க்குள்ளே சமாதியாகி விட்டன

நாங்கள்
மலையாகப் பூமியின்
அப்பாவி பிறவிகள்
மலர்வுகளுக்கெல்லாம்
நாம் ஸ்நேகிதர் அல்ல
மலராமலே -
உதிர்ந்து கொண்டிருக்கிறோம்

எங்கள் இதயக்குமுறல்களை
வரிக்கு வரி எழுதினாலும்
வாய் விட்டே பேசினாலும்
கண்ணீர் விட்டே அழுதாலும்
வசந்தத்தின் வரவுகள்
கற்பனையில் மட்டும் தான் ,
உதயத்திலே அஸ்தமனம் .
காணும் உள்ளங்கள்
எம்முடையது
கடற்கரையிலே மணற் பரப்பிலே
அந்தி நிலவின் நிலலொழுகும்
அலைகளின் தடவுலுடே
மேகத்தின் அழகை ரசித்திருப்பேன்

தாக்கப்பட்ட நிலையிலும்
என் மனம் சமாதானம் தேடும்
சுதந்திரம் குளிக்கும்
ஊரெல்லைகளில் திரியும் தென்றல் நான்

இதயத்தின் நிம்மதி சுவாசத்தை
இந்த மண்ணில் இழந்தேன்

இளமைகளின் அழகை .....
பறவைகளின் ஒலியை ....
இயற்கையின் இடுப்பை ....
தனிமையின் ஸ்பரிசத்தை ....
இதயத்தின் காதல் உணர்வினை ...
புதைத்து எழும் நாகரிகக் குறைவு

சந்திரனின் ஒளியும் மேகத்தின் மறைவில்
மின்னலின் புற நீக்கல்

மனிதனின் மாற்றமும்
சுழலின் மறுதவிப்பும் ....

நிம்மதிப் பெறு மூச்சில்
சுவாசிப்போர் எவருமிலர்
தலை நிமிர்ந்து
வானைப் பார்க்கின்றேன்

பாதியாய் -நிலவு
துயர் வடித்து
என் வதனம் பார்த்தாழும்

இரக்கமே இல்லையா ...?

வாலிபத்தின் வருடலிலே
இருதயத்தின் இரத்தத்தை
உறிஞ்சிக் குடிக்கின்ற
உஷ்ண நினைவுகளே ...
உங்களுக்கு
இரக்கமென்பதில்லையா ..?


இரவுகளிலெல்லாம்
என் விழிகள்
உறக்கத்தை ஒத்தி வைத்து விட்டு
தலையணையை
ஸ்நானஞ் செய்து கொண்டிருக்கின்றனவே

ஒ...........
அழுவது அவன் எனக்களித்த
ஆயுள் தண்டனையா ...?
நான் ஏமாற்றத்தின்
ஆயுட் கைதியா ...?

''காதல் ''
இந்த
அந்தரங்க மூச்சுக்கள்
ஆத்மாவின்
அந்தங்களிலா போடப்படுகின்றன ...?

அவன்
கேட்டானே -அன்று
என்னை மறந்து விடு என்று
அவனுக்கு மட்டும்
எந்த அரங்கில்
இந்த முடிச்சுக்கள் ...?


காதலினை
கெட்ட கனவு என்று
மறப்பதென்றால்
பூட்டி வைத்த ஆசைகளை
பொசுக்குவதா ...?

என்
இதயச் சுவர்களிலே
எதிரொலிக்கும்
அவனின்
சில்லறைச் சிரிப்பொலிகள்
என் செவிகளை
இறுக முடியும்
இன்னும்
செவி பட ஒலிக்கிறதே !

அன்றைய கனவுகளே
அடிக்கடி
உங்கள் வருகையினால்
கண்கள்
பெருக்கிக் கொண்டிருப்பது
கண்ணீரல்ல -அவை ..!
காதல் ரணங்களின் கருக்கள் ..