ஞாயிறு, 6 ஜனவரி, 2013


உறவுகள் பரந்தது
எப்படி பார்ப்பது ...?
தடவியது காதல்திருமணம்...

அடுப்பு எரிகின்றது
வயிற்றுப் பானை கொதிக்கவில்லை
பசி

நீர் வடிகின்றது
சேகரிப்பதற்கு யாரும் இல்லை
கண்ணீர்

பல லட்சம் நாட்டுக்கு வருவாய்
வீட்டுக்குள் பஞ்சம்
மலையாகத்தில் ஒப்பாரி

வானின் தூறல்
பூமியின் செழிப்பு
மண்ணில் அதிஷ்டம்

தூண்டுகோல் விளக்கு
வெளிச்சமானது
திருமணம்

சங்கிலி தொடராய்
அணிவகுப்புக்கள்
எறும்பு

வசதியிருந்தும்
கவனிப்பற்றவர்கள்
முதியோர்

சோர்ந்து போகும்
உடம்பு
மரணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக