ஞாயிறு, 6 ஜனவரி, 2013

பெண்கள் சிலர்
வெளிநாடு செல்கையிலே 
ஆண்களிற் சிலரிங்கே 
அட்டகாசம் புரிகின்றார் 

தாரத்தை அனுப்பி விட்டு 
தலை கால் புரியாமல்
பாதையில் பகிரங்கமாய்
வேறு -
பாவையரைத் தேடுகின்றார்

மனைவி அங்கே
மனமும் உருகி
உடலும் உருகி
மகிழ்வையே தொலைக்க

கணவன் இங்கே
மதுவைத் தேடி
மாதுவைத் தேடி
மயக்கம் போடுகின்றான்

பாசம் அங்கே
வேஷம் இங்கே
பாவம் பெண்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக