சனி, 17 நவம்பர், 2012

உலகமெங்கும் எங்களைப்போல் ஏழைகழுண்டோ .........................................................................................


வான் முகத்திலிருந்து கண்ணீர்சிந்தும் மழை துளிகள் 
வந்தெமது லயங்களுக்குள் வழிந்தோடும் 
சோகம் நிறைந்த காட்ச்சியினை காண வாரீர் 
உலகமெங்கும் எங்களைப்போல் ஏழைகழுண்டோ 

உடுக்களெனக் கூரையிலே பொத்தலுண்டு 
சூரிய ஒளி அவ் வழியில் பார்வை யிட 
ஒளி வீசும் கதிர் அங்கே நேரே பார்த்து
தரையதனை முத்தமிடக் காண்பீர் வின் மீன்

குடிசையின் அறைக்குள் தலையைப் போட்டு
தவிக்கின்ற நிலை தென்றற் காற்றிற் கில்லை
இனிமையானசுடர் தன்னை எந்த நாழும்
எம் வீட்டுக்குள் வீசினாலும் ஏற்ப்போம்

வான் முகத்திலிருந்து கண்ணீர்சிந்தும் மழை துளிகள்
வந்தெமது லயங்களுக்குள் வழிந்தோடும்
சோகம் நிறைந் காட்ச்சியினை காண வாரீர்
உலகமெங்கும் எங்களைப்போல் ஏழைகழுண்டோ

எங்களைப் போல் ஏழைகள் எவறுமில்லை
அல்லாஹ்விடம் கூட எமக் கேள்வி கணக்கில்லை
இங்கெமது ஓட்டை லயத்தின் இடத்தை பார்த்து
இருக்கிறனர் நண்பர்களும் எமக்குதவி யில்லை
உள்ளத்து உணர்வில் நட்பை வளர்த்தல் 
பார்ப்பவர்களுக்கு இல்லை தொல்லை
பகை என்பது புகைக்குச் சமன் 
நெருப்பாய் சுடும் மனம்
உள்ளத்துவானில் உதித்து வரும் உதயமாம் 
நல்லத்தை சொல்லும் வார்த்தை
பெரியவரை மதித்து கண்ணியமாய் வாழும் 
இதயம் கண்டு விழி
கற்கும் கல்வியது வாழ்கையின் சிறப்பு 
பொறுமையோடு கற்பது மகிழ்வு
நட்பினை மதிக்கும் மாபெரும் தளம் 
முக நூலின் நட்பு
கல்வி அறிவுக் கண் களாகும் 
நல்லதை தேடிப் படி
ஆசான் என்போர் உயிரின் நாடி 
நேசித்து நிழல் பெறு
பெண் என்பவள் உலகத்துக் கண்ணாடி 
உடையாது காப்பது நேயம்

நட்பு வாழும் உயிராழும் உறவே 
அன்பு புரிந்தோர் இதையாரிவர்
தமிழ் அழகு தனி அளவு 
தமிழ்கென்றும் இலை யழிவு
தமிழ் மதித்தோன் வாழ்வு நிலைக்கும் 
மொழியின் தரம் சிறக்கும்
சகீயவள்  நா அன்பைச் சொல்லும் 
பாசமலரின் பார்வையது நேசத்தைக் காட்டும் 
முகஅழகில் உறவின் மொட்டு வளரும் 
அன்பது தரும் மிதயத்தில் நானே சொர்க்கம்
துயரச் சுமைகள் பட்டுத் தெறிக்க -குருதி வற்றி 
நிம்மதியிழந்திருக்கு மானிடர் 
இத்தரை தன்னில் நல்ல இன்னொளிகண்டு வாழ்வின் 
இருளெல்லாம் நீங்கி உய்ய 
முஹர்ரம் இஸ்லாமிய ஆண்டே 
பூத்து நீ வருக பொலிந்து
அனலில் என்னிதயம் அறுந்து விழுந்தது போல்
துடிக்கிறதே அவளின் நினைவுகள்
உடம்பை மறைத்து பேணிக் காத்தல் 
பெண்ணுக்கு நிகராம் பெறுமை
மனத்தை காக்கும் மகராசி என்றும் 
மரியாதையின் உயர் படைப்பு
எழுத்துலகில் நின்று கலை பணிபுரியும் 
பெண்ணவள் பெரும் சொத்து
பொய்யது பேசாது நாவினை மதிப்பாள் 
இறையோனின் மதிப் பெண்
தாயாக நின்று பிறர் மானம் காத்தல் 
மரியாதைக்கு இவள் நிழல்
மண்ணிலே இஸ்லாமெனும் எங்கள் 
மாமறை /அருள்மறை /வளர்த்த செம்மல் 
அண்ணலார் நபியை நாமும் -இங்கு 
அனுதினமும் நினைத்து வாழ்வோம்
மாதர் தம்மை ஏய்போர் -இந்த 
மண்ணில் பலருண்டு -தூய
காதல் பூவைக் கசக்கும் தீயோர் 
கருகும் நிலை யுன்டு ..
தாய்மையைப் போற்றுவோம்! கயமையை வேரறுப்போம்!!
பெண்களை . பெண்மையை மதிக்காதவதர்கள் 
உலகில் சாதித்ததாக சரித்திரம் இல்லை

செவ்வாய், 13 நவம்பர், 2012


சகீ
நீ  வாழ்த்திய என் இதயம்
உன்னை
விழிகளால் தேடுகின்றது..

பாச உயிரின் உறவு விண்ணிலே .
..........................................................
இதய  மண்ணில்  தோன்றியே - நல்ல
அன்பினை விதைத்திட்டாள்  ஊன்றியே
பாசமுடன் அன்பு காட்டினாள் -இழி
மதபேதம்  வேண்டாமெனத்  தூற்றினாள்

நல்லன்பு மனம் கொண்டவள்  - கடும்
சாதி பேதங்களை உடைத்தவள்
நட்பு     உள்ளங்களை  நேசிப்பவள்  கெட்ட
பொலி உறவுகளை சபிப்பவள்


மூடத் தனங்களை  வெறுப்பவள்  அதை
முற்றாய் மாற்றி வாழ்பவள்
நட்பிலே  சுடரெற் ரினாள்   அன்பு
உள்ளத்தின் ஆழத்தினை காட்டினாள்


பெண்ணின் பெருமையை காட்டினால்  பாச
அன்னையின் பற்றினை பாடினால்
சாதிக்  கஞ்சாது  வாழ்ந்திட்டாள்
சாகப் புகழினை பெற்றிட்டாள்


அன்புக் கடைக் களம் கொடுத்தே  நல்ல
பாசம் நிலைத்து நிற்கும் இதயமே
வேரிட்டவள் கலைமகள்  இதயமண்ணிலே
பாச உயிரின் உறவு விண்ணிலே ..


கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை

சகீ .
நான்
காலத்தை  நேசிக்காதவள்
இற்றுப்போன
சமுதாய  நாற்றத்துக்குள்
நீ மட்டும்
எப்படி -
எனக்கு
நட்பு  மணம்  தந்தாய் ...?

சகீ
நீ
அன்பை பேசி பேசி
எனக்குள்
சிறைப்பட்டுப் போய்
நாட்கள் கரைந்து விட்டன

நான் சாதாரமாகத்தான்
உன்னை எண்ணினேன்

ஆனால்
தினம் தினம்
உன்
இனிய பேச்சுக்கள்
உன் இதயத்தை
இமயமென
எனக்கு பறை சாற்றியது
அதனால் தானே
என் இதயத்தோடு

இப்படி
இறுகிப் போனாய் ...
எம் தாய் மண்ணின்
தொப்புள் கொடி உறவோடு
ஓட்டிப் போனாய் ...?

ஞாயிறு, 11 நவம்பர், 2012


அன்பை 
விதையாக வீசினாய் 
பதியமாகி விட்டது 
இதயம்...
நீ 
என்னை நேசித்தாய் 
பாசம் 
உனக்குள் வந்த போது
நான் உன்னை 
நேசிக்கின்றேன்
நீ
எனக்குள் சுவாசமாகிப் போனதால் ...!
உன் நினைவுகள்
மழை போல் பொழிகின்றன
உருஞ்சி எடுத்த பின்புதான்
மன தூசுகள் அடங்கி
இதயப் பூமி செழிக்கின்றன ....!


எத்தனை ஆயிரம் அரிசி மணிகள் சாப்பிட்டோம்
சோறாக .
அத்தனையிலும்எண்ணிக்கைகள் இருக்குமா ?
நினைத்துப் பாருங்கள்
வயிறு பதில் சொல்லுமா ?

பசியின் பதட்டம்
நடத்தும் போட்டியில் கேள்வி கேட்டால்
பத்தும் பறந்து போகும்
சோர்வும்
நிறைந்து சேரும்

இதயத்தில் கொஞ்சம் உதறல்

வாழ்க்கையிலும் வறுமைவந்து போகும் நிலையால்
மனதில் வெறுமை
 
ஏதோ மருந்தும் கையுமாய்
போகிறது 
வாழ்க்கை 


உலகில் நடமாடும் பிணம்
பணம் வைத்திருந்தும் தள்ளாடுகிறார்
சீமான்கள்


இறை பணியில் கவனமாய்
தொழுகையோடு பிராத்திக்கிறேன்
தேவையான எதிர்பார்ப்புக்கள்

மன்றாட்டமாய் கேட்கிறேன்
மௌலவி குத்பா நடாத்துகின்றார்
ஏழ்மை வாழ்கை சிறந்தது என்று !
உன் அன்பு 
என்னுடலில 
ஓடுகின்ற குருதித் துளி 



இதயத்துக்குள் துடிக்கும் உணர்வு
பாசம்
உனக்குள் இருக்கும் உறவு
நட்பு


சகீ !
எனக்கு நீ வேண்டும்
உனக்கு நான் வேண்டும்

சரி… நம்முடைய
தாய் மண்ணின் பிரசவம்
எம் மண்ணின் உறவு
எப்படிப்பட்டது ......?
சகீ 
மூச்சைப் போல்
நினைவுகளும் சுகமானது தானே 
நீ தாரலமாய் சுவாசிக்கலாம் 

நீ ஒளி நிறைந்த சூரியன்
நான் இரவு சுமந்த இருள்
நான் உன்னை
எப்போது வேண்டுமானாலும்
பார்க்கலாம்!

உன்னால்
எனக்கு
முதன்முதலாக வந்தது

பாசமான நட்பு !
நேசமான உறவு ...!!
அன்பான அரவனைப்பு ...!!!.
உறங்கிக் கொண்டே
பால் குடிக்கும் பூனையைப் போல
தூங்கிக் கொண்டே
நீ
கனவு காண்கிறாய் 


பிரிவைச் சுமக்க
காரணமானாலும்.
உன் நினைவுகள்தான்
என்னை
மகிழ்ச்சிப் படுத்துகின்றன


நான்
தேடிக் கொண்டே
உன்
நினைவுகளைச் சுமக்கின்றேன்..
எப்படி சொல்வது 
என்று தெரியவில்லை

முதல் வார்த்தை 
ஆரம்பிக்கும் போது
என் நாவில்
எண்ணற்ற உமிழ் சுரப்பிகள்

அன்பின் வெளி ப்பாடு இது
இப்போது பேசும் போது
நாவில்
உதிப்பது அன்பு மொழி தான்.
இவை நம்
இதயங்களின் சுரப்பிகள்

அன்பு காட்டி விடு
மனதில்
பல நூறாய்.உறைந்து ..கிடக்கும்
ஆசைகள்
சொல்லவில்லை இவை
இதயத்து உணர்வுகள்
உதிர்க்கும் வார்த்தைகள்

பேசி விடு ...
இனி நான் வார்த்தைகள் இல்லை
உன் நாவுதான்
என்னை நேசிக்கும் 
நட்புள்ளத்தின்அணைப்பில் 
என்னை நினைத்துப் பார்கிறேன்

ஈரமிருக்கும் இடமெல்லாம்
அடி வேரை நகர்த்திச் செல்லும்
வேர் போல தொடரும்
என்னுறுப்புக்களின் நரம்புகளில்
நீயும் நகர்கின்றாயோ யானறியேன்..

ஓட்டை லயங்களுக்குள்
சூரியனை தரிசிக்கின்ற உன் வாழ்க்கை
என் மூச்சிக்களை சுவாசங்களாக்கிக்-கொண்டு
உன்னுயிர் என்னுயிராகி
என்னுயிர் உன்னுயிராகி
நீ நேசித்த உறவின் ஆழத்தைப் பற்றி
எத்தனை நினைவுகள் என் மனதில்!

உன் பாச பின்னல்களுக்குள்
சிக்கிக் கொண்ட முடிகளைப் போல்
எனக்குள் நண்பியாகிக் கொண்டாய்!!!!

அன்புறவியின் பிரசவத்தில்
நட்புக் கொடியாய் படர்ந் தாய்!
இப்போது நீ
தொப்புள் கொடி உறவா....????
சிவப்புக் கொடியின் நிழலா...????
பச்சைக் கொடியின் சின்னமா...???
இதயத் துவாரங்களால் வெளியேற்ற-முடியாத

இறுகிய பாசம்
உன்னை நேசித்த பின்னே
மறக்கக் கூட முடியவில்லை எனக்கு...
உன்னை எப்படி பிரிந்து வாழ முடியும்...
உன்னை இழந்து விட்டு நான் வாழும் -இவ் உயிர்
உயிருள்ளவரை நீ கூட
சுவாசித்திராத மூச்சு கண்ணே.....
பாசம் தொலைந்து மனம் வெறுத்து 

இதயம் நொந்து வேதனையில் வீழ்ந் து 

மனப் பாயில் உள்ளம் படுத்து 

அன்பு உயிர் நிம்மதி விடுத்த

சாதி பேத இழிநிலை கண்டு

நட்பு உள்ளத்தில் வேதனை நெருப்பு ..!



மூச்சுக்கள் சுவாசம் ஆகி உறவில்

அணைத்திட வைக்கும் நேசத் தோழர்

இறக்கம் பொழிந்திட கருணை நிறைந்திட

பொறாமை நெஞ்சத்தினர் பகை உள்ளத்தார்

பாசம் பொலிந்தலும் வார்த்தை சொரிவதும் .

நட்பு உள்ளத்தில்வேதனை நெருப்பு ...



இதயத் தரையை செழிப்புடைய தாக்கி

இதயத்தை அடைந்திட நினைத்திடும் உறவு

பேசிய மானிடர் புலம்பல் வார்த்தையினை

கண்டு நொந்து மனம் பொல்லா

இருண்ட உறவு வளந்திடக் கண்டு

நட்பு உள்ளத்தில் வேதனை நெருப்பு


போட்டி பொறாமை வஞ்சகம் சூது

முட்டி மோதி சாகும் இனவெறி

அன்புள்ளத்தார் அழிந்து இழந்து

அடிமைத் தளையிடை அவதிப் படுந் துயர்

.தேடி வந்திட உணர்வை புரிந்திட

நட்பு உள்ளத்தில் வேதனை நெருப்
சகி 
நான் 
ஓயாமல் கிளம்பும் கடலலையாய் 

விடாது தொடரும் 

கண் இமைகளின் சிமிட்டல் களாய்


சுவாசமாய் நகரும்

மூச்சுக்களின் காற்றாய் சுவாசிப்பேன்


நீ

மின்னலோடு தொடரும்

இடியாய் மாறினாலும்

சுனாமியாய் மாறும்

பேரலையாய் கிளம்பினாலும்

நான்

தாக்குப் பிடிப்பேன்


ஏனெனில்

நான் உன்னுயிராக வேண்டும்

நீ -

என்னுயிராக வேண்டும் ...!..

வியாழன், 8 நவம்பர், 2012

அன்பை நேசி, 
பாசம் புரியும் 

தோல்வியை நேசி, 
வெற்றி தெரியும்...

உழைப்பை நேசி,
உயர்வு தெரியும்...

இருளை நேசி
உதயம் தெரியும்

உன்னையே நீ நேசி,
உலகம் உனக்கு புரியும்.
மண்ணில் ஈரமிருந்தால்

அது--பல
வேர்களை உருவக்கும்


பூக்களில் வாசமிருந்தால்
அது பல
மனிதவுள்ளங்களை
சுவாசிக்கச் செய்யும்

மனிதனில்
உண்மை அன்பு இருந்தால்
அது பல
உள்ளங்களை உறவினறாக்கும்

சகி
உலகமே உன்னை நேசிக்காவிட்டாலும்
உன்னை
நேசிக்க இந்த உயிர் இருக்கின்றது
கவலைப்படாதே!

என்னை இப் பூமியில் எங்கும் தேடி அழையாதே
உன்
தொப்புள் கொடி உறவுக்கு -
உரிமை தந்த தாயாய் !
நானிருப்பேன்

பூவே நீ எப்போதும்
புன்னகைப் பூவாய் இதழ் விரிப்பாய்
அது
பகைவனைக் கூட சுவாசமாக்கும்
வாடி விடாதே
அது நண்பனைக் கூட சருகாக்கி விடும்
அதனால்
என்றும் செழிப்போடு இரு !

அழகை எதிர்ப்பாக்கும் இதயங்களிடம்
அன்பை காட்டாதே,
உன்னிடம் அன்பு வைக்கும் இதயத்திடம்
அழகை எதிர்ப்பார்க்காதே

உன் உயிரில்,
உன் உறவில்,
உன் மூக்கில்,
உன் நினைவில்,
உன் அன்பில்,
யார் யாரோ இருக்கலாம்...!
ஆனால் யாரும் இல்லாத போது
உனக்காக நான் மட்டும் தான் இருப்பேன்
உன்மையான -
உன் உயிர்த் தோழியாக
 
இதயத்தின்
நாடி நரம்புகளில் 
இது ஊற்றெடுக்கிறது!

உயிரின்இனிமையான 
உணர்வுத் துளிகளால்
இது பதியமாகிறது!

பாசம் விளையும்
மன நிலங்களில்
இது பூத்து சிரிக்கிறது!

அன்பெனும்
பாசநீர் உறிஞ்சி
இது வளந்து வாசம் வீசுகிறது !

கண்கள் காணாமல்
அன்பு முளைப்பதில்லை!
உதடுகள் பேசாமல்
உறவு நிலைப்பதில்லை

இதோ…
சுவாசம் சுமந்து வரும்
அன்பு(பூ )க்களில் தானே
நறுமணம் அதிகம் இருக்க்கும்
சகி 

உன் இதயத்தை 

நான் காயப் ப்படுத்தமாட்டேன் 

ஏன் தெரியமா

அதற்குள் இருப்பது

நான்
நீ வாழ்வதோ 
பெரும் கடலாய் 
நான் இருப்பதோ பரந்த பூமியாய்.....
என் கவிதையினை
யார் வேண்டுமானாலும்
வாசித்துப் பார்க்கலாம் 

ஆனால்
நீ மட்டுமே தான்
என்னிதத்தை
பூஜித்துப் பார்க்கமுடியும்
ஸம்ஸம் கிணற்றில் ஊற்றெடுக்கும் நீர்த் துளிகள் 

வந்தெமது நாவுக்குள் தாகம் தீர்க்கும் !

தேன் சுவை நீரினைக் ருசிக்க வாரீர் 

உலகெங்கும் எங்களைப் போல் பாக்கிய சாலியுண்டோ ?


சபா மர்வா மலையினிலே !தொங்கொட்டமொடி

ஒளி நிலவு மனதினில் மகிழ்ச்சியை தடவ

வெள்ளை நிற ஆடை அங்கே மரணத்தை நோக்க

உள்ளமதை உருக்கி விடும் காட்ச்சி தானே ?


மக்கத்து பள்ளியில் குர் ஆணை ஓதி

பிராத்திக்கின்ற தூஆ ஏற்கா மலில்லை

நாலருகும் நல்லவழி வாசல் உண்டு

நாளெல்லாம் அருள் பெறத் தடையே யில்லை !



நல்அமலை நாமென்றும் நேசிப்போர்கள்

நன்மையான அமல்களுக்கு துணையாய் இறைவன்

நிறைவான அருள் தன்னை எந்த நாளும்

எம்முள்ளத்துக்குள் தந்தாலும் ஏற்றுக் கொள்வோம் நாங்கள்


ஹிறாக் குகையிலிருந்து வஹியைத் தானே

வாழ் நாளில் அருளெலாம் நிறையக் கண்டீர்

உள்ளத்தை விட எங்கள் மக்கத்து மாளிகை

தருகின்ற பாக்கியத்தை பெற வாரீர்


எங்களைப் போல் உயர்ந்தோர்கள் எவருமில்லை

அல்லாஹ்விடம் கூட எமக்கு பாவமில்லை

இங்கெமது இறை வீட்டில் அருளைக் கேட்டு

இருக்கிறார் !அல்லாஹ்வினது ! அருளுக்கீடுயில்லை !
பாராட்டுக்கள் வந்து 
குவியும் மனதின் 
ஆழத்தில் ...
நிறையும் சந்தோசத்துக்கு 
காத்து நிற்கும் 
உள்ளத்து உணர்வு

மன மாளிகையில்
எங்கே உன் தோழி.?
அன்பைக் கொடுத்து
ஆசிர் வாதம் பெற்றாயா ...?

பாச உறவோடு
நீயும்..சந்தோசமாய்
மனம் குளிந்து


உன்னை நினைத்திருக்கும்
இனிமையான நேரம்
என் கண்கள் தேட ..!

நினைவுகளின் முதுகில்
மறைந்து உனக்கென்ன
இங்கு பார்வை..?

உன் நினைவுத் துளிகள்
எனைக் கழுவியது .
வான விசித்திரம் நீ
எனிதய நிலவே ..!

உன் வடிவழகு
மேகத்தோடு
வித விதமாய்..
மின்னல் கீற்றாய்
தூது விட்டு..
என்னை ஏன் ..?
துரத்துகிறாய்..

சொல்ல மாட்டேன்
உன் உறவுகளுக்கு

இரவெல்லாம்
மனதோடு உன்
ஏக்கம்
அறிந்தால் .
வேதனைப் படுவாய் ..!

இதயத்தின் ..!நினைவு
உன்மீது தேடல்


வந்து விடு என்ற
புலம்பலாய் . .!

இதயத்தின்
ஜீவ ராணி
என்னுயிரே ...

உனக்குமா மனதில்
போராட்ட அலைகள் ....?