வியாழன், 8 நவம்பர், 2012

ஸம்ஸம் கிணற்றில் ஊற்றெடுக்கும் நீர்த் துளிகள் 

வந்தெமது நாவுக்குள் தாகம் தீர்க்கும் !

தேன் சுவை நீரினைக் ருசிக்க வாரீர் 

உலகெங்கும் எங்களைப் போல் பாக்கிய சாலியுண்டோ ?


சபா மர்வா மலையினிலே !தொங்கொட்டமொடி

ஒளி நிலவு மனதினில் மகிழ்ச்சியை தடவ

வெள்ளை நிற ஆடை அங்கே மரணத்தை நோக்க

உள்ளமதை உருக்கி விடும் காட்ச்சி தானே ?


மக்கத்து பள்ளியில் குர் ஆணை ஓதி

பிராத்திக்கின்ற தூஆ ஏற்கா மலில்லை

நாலருகும் நல்லவழி வாசல் உண்டு

நாளெல்லாம் அருள் பெறத் தடையே யில்லை !



நல்அமலை நாமென்றும் நேசிப்போர்கள்

நன்மையான அமல்களுக்கு துணையாய் இறைவன்

நிறைவான அருள் தன்னை எந்த நாளும்

எம்முள்ளத்துக்குள் தந்தாலும் ஏற்றுக் கொள்வோம் நாங்கள்


ஹிறாக் குகையிலிருந்து வஹியைத் தானே

வாழ் நாளில் அருளெலாம் நிறையக் கண்டீர்

உள்ளத்தை விட எங்கள் மக்கத்து மாளிகை

தருகின்ற பாக்கியத்தை பெற வாரீர்


எங்களைப் போல் உயர்ந்தோர்கள் எவருமில்லை

அல்லாஹ்விடம் கூட எமக்கு பாவமில்லை

இங்கெமது இறை வீட்டில் அருளைக் கேட்டு

இருக்கிறார் !அல்லாஹ்வினது ! அருளுக்கீடுயில்லை !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக