சனி, 17 நவம்பர், 2012

உலகமெங்கும் எங்களைப்போல் ஏழைகழுண்டோ .........................................................................................


வான் முகத்திலிருந்து கண்ணீர்சிந்தும் மழை துளிகள் 
வந்தெமது லயங்களுக்குள் வழிந்தோடும் 
சோகம் நிறைந்த காட்ச்சியினை காண வாரீர் 
உலகமெங்கும் எங்களைப்போல் ஏழைகழுண்டோ 

உடுக்களெனக் கூரையிலே பொத்தலுண்டு 
சூரிய ஒளி அவ் வழியில் பார்வை யிட 
ஒளி வீசும் கதிர் அங்கே நேரே பார்த்து
தரையதனை முத்தமிடக் காண்பீர் வின் மீன்

குடிசையின் அறைக்குள் தலையைப் போட்டு
தவிக்கின்ற நிலை தென்றற் காற்றிற் கில்லை
இனிமையானசுடர் தன்னை எந்த நாழும்
எம் வீட்டுக்குள் வீசினாலும் ஏற்ப்போம்

வான் முகத்திலிருந்து கண்ணீர்சிந்தும் மழை துளிகள்
வந்தெமது லயங்களுக்குள் வழிந்தோடும்
சோகம் நிறைந் காட்ச்சியினை காண வாரீர்
உலகமெங்கும் எங்களைப்போல் ஏழைகழுண்டோ

எங்களைப் போல் ஏழைகள் எவறுமில்லை
அல்லாஹ்விடம் கூட எமக் கேள்வி கணக்கில்லை
இங்கெமது ஓட்டை லயத்தின் இடத்தை பார்த்து
இருக்கிறனர் நண்பர்களும் எமக்குதவி யில்லை

2 கருத்துகள்:

  1. வலி கொண்ட மௌனத்தில் முதல் கவிதையே மனதில் வலியாய் இறங்குகிறது. இறைவன் ஏழைகளுக்கு உறவினன்... ஏழைகளுக்கு உதவினால் அது இறைவனுக்கு உதவியது போல... இறைவன் இந்த சோதனையில் செல்வந்தனின் மனப்போக்கை சோதிக்கிறான்... இறைவனின் நாட்டம் யாரரிவார்... ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம் பேரறிவாளன் திரு...என்றார் வள்ளுவனார்...

    பதிலளிநீக்கு
  2. நானா உங்கள் அன்பான வரிகள் மனதை தொட்டது மிகவும் மகிழ்ச்சி நெல்லுக்குள்ளும் பதருண்டு பணக்காரன் ஏழையாகவும் . ஏழைபணக்காரராகவும் மாற்றுவது பெரிதல்ல இறைவனுக்கு எல்லாப் புகழும் இறைவனுக்கு

    பதிலளிநீக்கு