வியாழன், 8 நவம்பர், 2012

இதயம் எதையும் தாங்கும் பூமியாய் 
இருப்பதை 
மனிதர்கள்
உணர்வுகளால் அறியும் 
அதிசய இடம்.

இது
பொறுமையும்
பொக்கிஷம்

.போட்டி பொறாமை வஞ்சகம்
சூது வாது புறம்
எது வந்தாலும்
மங்கிப் போவதுமில்லை

எது நடந்தாலும்
சகித்துக் கொள்ளும்

வெறுப்பதுமில்லை,
.

இது ஓர் சூரியன்
அன்பான வெளிச்சமிருந்தால் போதும்
பசி பட்டாணி
துன்பம் துயரம்
கஷ்டம் நஷ்டம்
எது வேண்டுமானாலும்
தாங்கிக் கொள்ளும்

ஏன்
மண்ணிலிருந்து விண்ணைக் கூட
தொட்டு வரலாம்


இங்கு உங்களுக்கு
வரம் கொடுக்க
இடம்
தவம் கிடக்கின்றன.

இங்கு வரும்
எவரும்
அன்பை இழப்பதில்லை
வளர்க்கின்றார்கள்

இது இதயத்தின்
சேமிப்பு உண்டியல்
பாசம் உள்ளவர்கள் மட்டுமே
உறவை சேகரித்துக் கொள்ளுங்கள்

நிமதியை தடவிக் கொள்ள
உங்களுக்கு இது
தென்றல் காற்று .

இங்கு மட்டும்தான்
இதயம்
அன்புள்ளங்களைதேடி எடுக்கின்றது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக