வியாழன், 8 நவம்பர், 2012

இதயத்தின்
நாடி நரம்புகளில் 
இது ஊற்றெடுக்கிறது!

உயிரின்இனிமையான 
உணர்வுத் துளிகளால்
இது பதியமாகிறது!

பாசம் விளையும்
மன நிலங்களில்
இது பூத்து சிரிக்கிறது!

அன்பெனும்
பாசநீர் உறிஞ்சி
இது வளந்து வாசம் வீசுகிறது !

கண்கள் காணாமல்
அன்பு முளைப்பதில்லை!
உதடுகள் பேசாமல்
உறவு நிலைப்பதில்லை

இதோ…
சுவாசம் சுமந்து வரும்
அன்பு(பூ )க்களில் தானே
நறுமணம் அதிகம் இருக்க்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக